Post Top Ad

இணையத்தில் அரசியல்

இணையம் என்பது கேள்விகள் இன்றி விடைகள் கிடைக்கும் தொழில்நுட்ப வாய்ப்பாகும். அதன் காரணமாகவே தகவல் சேகரிப்பதற்கு மேலதிகமாக வேறுபல நோக்கங்களை நிறைவேற்ற இணையத்தினுள் நுழைகின்றார்கள். மனிதன் இன்னுமொரு மனிதனின் வேட்கையை(desire) இது
தான் என தானாகவே அடையாளம் கண்டு அந்த வேட்கை கதாபாத்திரத்தை தானே ஏற்று நடிக்கும் போது வெளிப்படும் ஆள் வேடத்தை நெறிபிறழ்வு (pervert) என்றே நாம் அடையாளபடுத்த வேண்டும். இவ்வாறானவர்களின் மனோபாவத்தை விளங்கி கொள்ள  தேவையான சில அடிப்படை இயல்புகளை கீழே தருகின்றேன். 

01. சமூகத்தில் நிலைபடுத்தப்பட்டிருக்கும் பொது நெறிமுறைகளின் (சனநாயகம், இனம், ஒழுக்கம், நற்சொற்கள்......) காப்பாளனாக தன்னை உருவகித்து கொள்ளல். சமூகத்தில் வாழும் ஏனைய பெரியவர்கள் சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்வதால், அவர்களுக்கு சண்டைபிடிக்க எதிரிகளை உருவாக்கி கொடுத்தல்.

02. பழைய நெறிபிறழ்வாளர்கள் வரம்பு மீறிய செயல்கள் மூலம் வினோதமடைந்தார்கள். பழைய கால நெறிபிறழ்வாளர்கள் குறுக்கு ஒழுங்கைகளில் தனியாக வரும் பெண்களை கண்டால் வேட்டியை தூக்கி காட்டி வினோதமடைந்தார்கள். ஆனால் சமகால நெறிபிறழ்வாளர்கள் சமூகத்தில் தமக்கேயான சட்டத்தை நடைமுறையாக்கின்றார்கள். அவர்கள் சட்டத்தை மீறுபவர்களாக இருப்பதோடு அச்சட்டத்திற்கு பதிலாக சட்டமொன்றை(தனிப்பட்ட) புதிதாக அறிமுகபடுத்துகின்றார்கள்.

03. சாதாரண மனிதர்கள் இரகசியமாக செய்பவற்றை நெறிபிறழ்வாளர்கள் வெளிபடையாக செய்வசூதோடு, அவர்கள் வெளிபடையாக செய்பவற்றை நெறிபிறழ்வாளர்கள் இரகசியமாக செய்கின்றார்கள். 

Post Top Ad

My Instagram