Post Top Ad

8:41 PM

ஈரோசின் கன்னித் தேர்தல்

by , in
1975 ஆம் ஆண்டு லண்டனில் கருக்கொண்டு தாயகத்தினுள் கால்பதித்த ஈரோஸ் அமைப்பு 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் பங்குபற்றியதோடு, அத்தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு வடகிழக்கில் 31 ஆசனங்களில் 12 ஆசனங்கள் மற்றும் தேசிய பட்டியல் ஆசனம் அடங்கலாக 13 ஆசனங்களை வெற்றிக்கொண்டது. 1989ஆம் ஆண்டு தேர்தலானது, 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் விகிதாசார முறையில் இடம்பெற்ற முதலாவது தேர்தலாகும். 1983 ஆம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தன தேர்தலை நடத்தாமல் பொதுகருத்துக்கணிப்பு மூலம் ஆட்சியை நீடித்துக்கொண்டதாலே, விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, 11 வருடங்களின் பின் முதல் தேர்தல் நடைப்பெற்றது. இத்தேர்தல் நடைப்பெற்ற காலக்கட்டமானது அமைதிபடை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு படையின் அட்டூழியமும், ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியும் நடந்த காலக்கட்டமாகும். அதே நேரம், விடுதலைப்புலிகளும், ஜேவிபியும் தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களை கோரியிருந்தார்கள்.

இக்காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண சபையில் ஈபிஆர்எல்எப் அமைப்பு அடாவடி ஆட்சி நடத்தியது. மலையகத்தமிழர்கள் பலர் பிரசாஉரிமை அற்றவர்களாக இருந்தார்கள். இத்தகைய சூழ்நிலையிலேயே ஈரோஸ் அமைப்பின் தேர்தல் பிரவேசம் இடம்பெற்றது. இத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈபிஆர்எல்எப், ரெலோ, ஈஎன்எல்எப் ஆகியன கூட்டடுச்சேர்ந்தும், அகிலஇலங்கை தமிழ் காங்கிரசு, சிறிலங்கா முசுலிம் காங்கிரசு, புளோட் ஆகிய கட்சிகள் தனித்தும் போட்டியிட்டன. மேலும் ஐதேக சிறிலங்காக சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டியிட்டன.

ஈரோஸ் அமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டகளப்பு ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டது. அன்றைய காலகட்டத்தில் ஆழமாக தடம்பதித்திருந்த மலையகத்தில் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டும், அம்பாறை மாவட்டத்தில் இசுலாமியர்களின் தனித்துவத்துடன் போட்டி போடக்கூடாது என்பதாலும் ஈரோஸ் அமைப்பு போட்டித் தவிர்ப்பை செய்திருந்தது.

ஈரோஸ் அமைப்பு ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் வெகுசன அணியை உருவாக்கி இருந்தாலும், அப்போது கட்சி பதிவு செய்யபபட்டிராததால் சுயட்சை அணியாக தேர்தலில் பங்குபற்றியது. தேர்தலின் பின்னர் ஈழவர் சனநாயக முன்னணி தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாக பதிவுபெற்றது. மிககுறைந்த காலஅவகாசத்திலும், பல இடையூறுகளிற்கு மத்தியிலும், ஈரோஸ் தோழர்கள் வீடுவீடாகச்சென்று மக்களை அணுகி தம் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியதின் மூலம் மக்களை சக்தி வாய்ந்த பிரச்சார ஊடகமாக மாற்றினார்கள். அதே போல் ஆடம்பரமான பிரச்சார விளம்பரங்களையும், பகட்டாரவாரமான அரசியல் பிரகடனங்களையும் நிராகரித்து, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நன்கு சிந்தித்து அவற்றை தீர்ப்பதற்கான ஒரு திட்டவட்டமான வழிமுறைகளை துண்டுபிரசுரம் மூலம் தேர்தல் பிரகடனமாக தெரியப்படுத்தினார்கள். 

1989 பெப்பரவரி 15, தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின் ஆத்தரமடைந்த ஈபிஆர்எல்எப் அமைப்பினர் ஈரோஸ் தோழர்களையும், ஆதரவளித்த மக்களையும் ஆயுதம் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கி கொலைசெய்தும், தாக்கிக் காயப்படுத்தியும் இருந்தார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஈரோஸ் உறுப்பினர்கள் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சீர்த்திருத்தத்தை நீக்கவேண்டும், அரசியல் சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், தமிழ் தேசிய பிரச்சினைக்கு இராணுவ தீர்வை நாடக்கூடாது என கோரிக்கைகளை முன்வைத்து நான்கு மாதங்கள் பாராளுமன்றத்தை பகிஸ்கரித்திருந்தார்கள். பின்னர் அப்போதைய சனாதிபதி பிரேமதாசவுடன் நடத்திய பேச்சுவாhத்தையில் எட்டிய இணக்கப்பாட்டின் பேரில் ஈரோஸ் உறுப்பினர்கள் பாராளுமன்ற பிரவேசம் செய்திருந்தார்கள். பாராளுமன்ற பிரவேசத்தின் பின் 1987 ஆம் ஆண்டு ஜீலை 21ஆம் நாள் அமைப்பின் ஸ்தாபகர் தோழர் இரத்தினசபாபதி விசேட பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றினார். எனினும் 1990 ஆம் ஆண்டு ஈரோஸ் உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறி இராணுவத்தீர்வில் அரசு நாட்டம் கொண்டதால், ஈரோஸ் உறுப்பினர்கள் நாடளுமன்ற பதவிளை துச்சமென துறந்திருந்தார்கள்

வேட்பாளர்கள் யார் என்ற விபரம் கூட சரியாக அறிவிக்கப்படாமல், விடுதலைப்புலிகளின் தேர்தல் பகிஸ்கரிப்பின் கோரிக்கையின மத்தியிலும், வடகிழக்கு மாகாணத்தில் ஆட்சி நடத்திய ஈபிஆர்எல்எப் அமைப்பு இந்திய ஆக்கிரமிப்பு படையுடன் இணைந்து நடத்திய அராஜகங்களுக்கு மத்தியிலும், மக்களின் அமோக ஆதரவை பெற்றமையானது அனைத்து தரப்பாலும் ஆச்சரியத்துடன் நோக்கப்பட்டது. வேட்பாளர்கள் யார் என்று அறியாத காரணத்தினால், பெரும்பாலான வாக்குகள் அமைப்பின் சின்னத்திற்கு மாத்திரம் அளிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடதக்கது.

மக்கள் விரும்பிய, மக்களை மதித்த, மக்களுடனும் ஏனைய அமைப்புக்களுடனும் சகோதரத்துவத்தை பாராட்டிய ஈரோசின் பண்பாடும், கொள்கை பற்றுமே மக்களின் அமோக ஆதரவை பெற்று தந்ததாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

இத்தேர்தலில் தமிழ் சமூகத்தின் பாராம்பரிய சனநாயக தலைவர்கள் பலர் தோல்வியடைந்தமையும் குறிப்பிடதக்கதாகும்.  முன்னைய பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகவிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த ஏ.அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம், வி.யோகேஸ்வரன், வி.ஆனந்தசங்கரி, ஆர்.சம்பந்தன், சூசைநாதன் ஆகியோரும், அமைச்சரவை அமைச்சராகவிருந்த தேவநாயகமும் மக்களால் தோற்கடிக்கபபட்டவர்கள் ஆவார்கள்.

தேர்தல் முடிவுகளின் படி யாழ் மாவட்டத்திலிருந்து முறையே இளையதம்பி இரட்னசபாபதி 40947 , இளையதம்பி பரராஜசிங்கம்36340, சின்னதம்பி சிவமகாராசா 22622, அருணாசலம் பொன்னையாசெல்லையா 20747, தம்பு லோகநாதபிள்ளை 17616, செபஸ்டியம்பிள்ளை எட்வர்ட் 17429, கணபதி செல்வநாயகம் 14440, ஜோசப்ஜோர்ஜ் ராஜேந்திரம் 13948 விருப்பு வாக்குகளுடனும், வன்னி மாவட்டத்திலிருந்து இன்னாசிமுத்து அல்பிரட் 935 விருப்பு வாக்குகளுடனும், மட்டக்களப்பிலிருந்து அழகுபொடி குணசீலன் 22889,  விருப்பு வாக்குகளுடனும், திருக்கோணமலையிலிருந்து முறையே சிவபிரகாசம் ரட்னராஜா 784, கோணமலை மாதவராஜா 575 விருப்பு வாக்குகளுடனும் வெற்றி பெற்றார்கள்.

ஈபிஆர்எல்எப், ரெலோ, ஈஎன்எல்எப் ,தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய அமைப்புக்கள் இணைந்து தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் வேட்புமனுதாக்கல் செய்யதிருந்தாலும், தனி த்தனியாகவே பிரச்சாரம் செய்தார்கள். கூட்டணி வெற்றிக்கொண்ட 11 ஆசனங்களில் 9 ஆசனங்களை ஈபிஆர்எல்எப் உம், ஒரு ஆசனத்தை ரெலோவும் வென்றது. கூட்டணியின் தேசிய பட்டியலில் அமிர்தலிங்கம் தெரிவாகியிருந்தார். இவரின் மரணத்தை தொடர்ந்து மாவைசேனாதிராசா  அவ்விடத்துக்கு நியமிக்கப்பட்டார்.

எனினும் நான்கு மாத பகிஸ்கரிப்பின் பாராளுமன்றத்திற்கு சென்ற போது, மூன்று மாதகாலங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு வருகை தராததால் வெற்றி பெற்றவர்களின் உறுப்புரிமையை இரத்து செய்து, புதியவர்களை அவ்விடத்திற்கு நியமிக்குமாறு தேர்தல் திணைக்களம் கோரியதற்கமைய, முன்னர் வெற்றி பெற்ற இரட்னசபாபதி, பரராஜசிங்கம், செபஸ்டியம்பிள்ளை எட்வர்ட், கணபதி செல்வநாயகம், சின்னதம்பி சிவமகாராசா, அழகுபொடி குணசீலன், சிவபிரகாசம் இரட்ணராசா ஆகியோருடன் முன்பு தெரிவாகாதவர்களான பசீர் சேகுதாவுத், அஸீஸ்அமீர், சௌந்தர்ராஜன் , புவனசுந்தர்ராஜா ஆகியோரும் மலையகத்தின் சார்பில் இராமலிங்கம் சந்திரசேகரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியபிரமானம் செய்துக்கொண்டார்கள்.

இதன் மூலம் அன்று பாராளுமன்றில் வடக்கு - கிழக்கு - மலையகத்தின் சார்பில் அதிக பிரதிநிதிகளை கொண்ட  தமி;ழ் பேசும் மக்களின் கட்சியாக திகழ்ந்தது. 

5:31 AM

சுன்னாகத்தில் மறைக்கப்படும் உண்மைகள்

by , in


சுன்னாகம் பிரதேசத்தில் நீர் மாசுப்படுத்தப்பட்டதின் பின்னால் மறைந்திருக்கும் விடயம் தொடர்பில் கடந்த பதிவில் அம்பலப்படுத்தியிருந்தேன். எனினும் நீண்டக்காலமாக பேசப்பட்டு வரும் இந்த பிரச்சினையின் உண்மை பின்னணியை யாரும் இது வரை வெளிப்படுத்தி போராடவோ கோரிக்கை விடுக்கவோ இல்லை. ஆனால், நீர் மாசு தொடர்பாக வடமாகாண சபையும், அரசாங்கமும் இருவேறு தகவல்களை வெளியிட்டன. வடமாகாண சபை நியமித்த நிபுணர் குழுவின் ஆய்வின்  பிரகாரம் சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் ஆபத்தான கழிவுகள் எதுவுமில்லை என வடமாகாண சபையின் சுகாதார அமைச்சரும், விவசாய அமைச்சரும் இணைந்து அறிவித்தனர்.

அரசாங்கதரப்பில் முன்னாள் சுற்றுசூழல் அமைச்சின் செயலளரும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமாகிய பஸ்நாயக்கவின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு ஆய்வை நடாத்தி சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் ஆபத்தான மாசுக்கள் கலந்திருப்பதாக அறிவித்தது. பஸ்நாயக்க என்பவர் மகிந்த ராசபக்சவின் ஆட்சி காலத்தில் கோட்டபாயவிற்கு மிக நெருக்கமானவராக செயற்பட்டதுடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட பின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராசபக்சவை, தற்போதைய குற்றச்சாட்டுக்களிலிருந்து காப்பாற்றும் வகையில் செயற்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவ்விடயம் தொடர்பாக ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி பாராளுமன்றத்தில் தனி அறிவித்தல் மூலம் விடய பொறுப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு முன்னரும் கடந்தவருடம் செப்டம்பர் மாதம் அமைச்சரவை பத்திரம் ஊடாக இப்பிரச்சினையை ஆராய உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்குமாறும், டிசம்பர் மாதம் சுன்னாகம் பகுதியை பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறும் கோரியிருந்தார். 

பாராளுமன்ற உறுப்பினரின் வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர் சுன்னாகம் பகுதியில் 150 கிணறுகள் ஆய்விற்குட்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் 73 சதவீதமான கிணறுகளில் (109) சமான்ய அளவை விட அதிக எண்ணைக் கழிவு காணப்பட்டதாகவும், 4 சதவீதமான கிணறுகளில் (7) சமான்ய மட்டத்தில் எண்ணைக் கழிவு காணப்பட்டதாகவும், 23 சதவீதமான கிணறுகளில் (34) எவ்விதமான கழிவுகளும் காணப்படவில்லை எனவும் அறிவித்தார். குறிப்பாக மின்சார நிலையத்திலிருந்து 2 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இலவசமாக நீர் வழங்குவதாகவும் அதற்கு மேலும் செல்ல தயாராய் இருப்பதாகவும் அமைச்சர் அறிவித்தார். மேலும் வடமாகாண சபை தங்களது அறிக்கையை தனது அமைச்சுக்கு வழங்காமல் மறைத்து வருவதாகவும், வடமாகாணசபையும் அரசாங்கமும் ஆய்விற்கு  இருவேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதனால் முடிவுகள் மாறியிருக்கலாம் என்றும், அரசாங்கத்தின் அறிக்கையே உண்மையானது என்றும் சுன்னாகம் பகுதி நீரில் மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத வகையில் நீர் மாசடைந்திருப்பதாகவும் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.  மேலும் 2012 ஆம் ஆண்டு நீர் பாசன திணைக்களத்தினால், சுன்னாகம் பகுதியில் குடிநீர் திட்டமொன்று முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இங்கு இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவையாகும். முதலாவது சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணைக் கலந்திருப்பது வெள்ளிடை மலை ஆனாலும், பாதிப்பு தொடர்பாக இருவேறான அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. மாகாணசபை ஆபத்தான கழிவு இல்லை என்கின்றது, அரசாங்கம் நீர் அருந்த முடியாத வகையில் மாசடைந்திருப்பதாக கூறுகின்றது. இதற்கு தொழில்நுட்ப காரணங்கள் கூறப்பட்டாலும், அரசாங்க தரப்பில் ஆய்விற்கு தலைமை தாங்கியவர் பாதுகாப்பு தரப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்ட உயர் மட்ட பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகவே நீர் மாசு விடயத்தின் பின்னால் கடந்த வேறொரு மோசடி எண்ணம் இருப்பதற்கான சந்தேகம் வலுக்கின்றது (கடந்த இதழில் இதனை சுட்டிக்காட்டியிருந்தோம்).  சுன்னாகம் பகுதி நிலத்தடி நீர் ஏலவே, இரசாயன உரங்களாலும், ஊக்கிகளாலும் மாசடைந் திருப்பதாக 2012 ஆம் ஆண்டு அரசாங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எண்ணை கலந்ததினால் நீர் மாசடைந்திருந்தாலும் அப்பகுதியில் அது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது போன்ற பாரிய சுகாதார பிரச்சினையாக உருவெடுக்கவில்லை. மாகாண சபையின் நடவடிக்கைகளும் அவ்வாறே அமைந்தன. ஆனால், அரசாங்க தரப்பிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் இப் பிரச்சினை தொடர்பாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.

ஏலவே நோர்த்தன் பவர் நிறுவனத்துடன் தொடர்புபட்ட பிரமுகர்கள் துறை சார் நிபுணர்கள் நாட்டின் முன்னணி பெரும் நிறுவனங்களுடன் நெருக்கமான தொடர்பு பட்டவர்களாகவும், யாழ்பாணம் போன்ற நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்ட ஒரு பிரதேசத்தில் நீரை மாசடைய செய்வது எத்தகைய பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் என்பதும், அவ்வாறு நீரை மாசடைய செய்வதால் அவர்களுக்கு பெரிதாக இலாபம் எதுவுமில்லை என்பதும் உண்மையாகும். அத்துடன் கழிவு எண்ணையை விற்பனை செய்வதன் மூலம் அதிக இலாபத்தை தேடிட முடியும். அத்துடன் சுன்னாகம் பகுதியில் குடிநீர் திட்டத்திற்கான நீர்பாசன திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் இதன் அனர்த்தம் குறித்து 2012 ஆம் ஆண்டிற்கு முன்னரே தெரிய வந்திருக்கும். ஆகவே சம்பந்தப்பட்ட தரப்பினர் எச்சரிக்கையாக இருந்திருப்பார்கள்.

மேலும், பாதிப்பும், பாதிப்பை ஏற்படுத்தியவர்களும் தெளிவாக தெரிந்த பின்னரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இதன் உண்மை பின்னணி அம்பலப்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக இதனை ஒரு மனிதாபிமான அறம் சார் பிரச்சினையாக விளம்பரப்படுத்தி, அரசாங்கம் உடனடி மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அத்துடன் தற்போது அரசாங்கத்துடன் வர்க்கநலன் சார் இணக்க அரசியல் நடத்துபவர்களும், பிழைப்பிற்காக கொழும்பு நகரை சார்ந்து இருப்பவர்களும், ஊடகங்களும் இதனை மனிதாபிமான பிரச்சினையாக உருவெடுக்க செய்து, இதன் பின்னாலிருக்கும் சதியை வெளிவராமல் செய்வதில் பெரும் பங்காற்றின. இந்த நடவடிக்கைகளை அரசு கண்டும் காணாமலும் அல்லது மறைமுகமாக ஊக்குவித்திருந்தது. இது போன்றே சில வருடங்களிற்கு முன் கீறிஸ் பூதம் எனும் மர்ம மனிதர்கள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பீதியை ஏற்படுத்தியிருந்தனர். பெண்களை அச்சுறுத்தி பீதி குள்ளாக்குவதே அந்த மர்மமனிதர்களின் நோக்கமாக இருந்தது. பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பீதியையும் ஏற்படுத்துவதன் மூலம்  அவர்கள் எட்ட நினைத்த நோக்கம் ஒன்றும் மறைமுகமானதல்ல. திட்டமிட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் சனத்தொகை அமைவை  சீர்குலைக்கும் முயற்சியே காணப்பட்டது. இந்த மர்ம மனிதர்கள் விவகாரத்தில் அரசாங்கமும், பொலிசும், இராணுவமும் மக்களிற்கு எதிராகவே செயற்பட்டார்கள். அதனை போலவே அண்மை காலமாக மலையக பகுதிகளில் கல்வியில் அதீததிறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் எவ்வித காரணங்களுமின்றி மர்மமான முறையில் நீர் நிலைகளில் சடலங்களாகமிதந்தார்கள். 

2009 ஆம் ஆண்டிற்கு பின் அரசு தமிழ் மக்கள் இன்னுமொரு எழுச்சியை நோக்கி செல்லாத வண்ணம் சகுனியின் பாணியில் பல திட்டங்களை நாசூக்காக முன்னெடுத்து வருகின்றது. கட்டாய கருத்தடை, இராணுவம் மூலமே வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக இளைஞர்களை கொண்டு செல்லல், கலாசார பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்தியும் காடைத்தனங்களிற்கும் அராஜகங்களிற்கும் துணைநின்று சமூக கட்டமைப்பை சீர குலைத்தல். தமிழ் முதலாளிகள் வடகிழக்கில் முதலீடுகள் செய்வதை தடுத்தல், அரசு , தனியார் நிறுவனங்களில் திட்டமிட்ட முறையில் சிங்களவர்களை செயற்கையான முறையில் வேலைக்கமர்த்தல் என பல வடிவங்களில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் பேசும் மக்களின் தேசிய கோரிக்கைக்கும் எழுச்சிக்கும் ஆதாரமாக அமையும் குடித்தொகை அமைவை சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டவை.  

எனவே, சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தின் உண்மையான பின்னணி அம்பலப்படுத்தபடுமானால், அரசின் இவ் கபட திட்டம் வெளிச்சத்திற்கு வருவதினை தடுத்திட முடியாது. அதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் இத்தனை தடுமாற்றமும் மூடிமறைப்புக்கள், திசைதிருப்பல்கள் நடக்கின்றன. அதற்கு ஓத்தூதும் வகையில் கொழும்பு நலன்சார்ந்தவர்களால் இந்த பிரச்சினை பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பிரச்சினையும் மர்ம மனிதர்கள் பிரச்சினை மர்மமானது போல் அதன்பின்னாலிருக்கும் சதி அம்பலப்படுத்தபடாமல் மர்மமாகும் நிலையே தெரிகிறது. அதற்கு நாமும் துணைநிற்பது தான் வேடிக்கை.

6:43 PM

ஈரோஸ் பாடம் பயின்ற கண்ணாட்டி பொதுவுடமை விவசாய பண்ணை

by , in

மார்க்சிய லெனினிய தத்துவார்த்தத்தை தனது கொள்கையா கொண்ட ஈரோஸ் அமைப்பு  அதன் 
மாதிரி வடிவத்தை வவுனியாவிற்கு அருகில் கண்ணாட்டி எனுமிடத்தில் பொதுவுடமை விவசாய பண்ணையை நிறுவி நடைமுறையில் பரீட்சித்து பார்த்தது.  இம்முயற்சியே ஈரோசின் முதலாவது குறிப்பிட்டுச் சொல்லும் படியான அரசியற் பணியாகும். 

1976 ஆம் ஆண்டு மத்திய பகுதியில் இளைப்பாறிய ஆசிரியர் யோ.அருளப்புவின் உதவியுடன் தொடங்கப்பட்டது. 1977 ம் ஆண்டு ஆகஸ்டில் இத்திட்டம் 30 இளைஞர்களையும், 30 குடும்பங்களையும் கொண்டு கூட்டுறவு முறையில் வரிவுப்படுத்தப்பட்டது. வட மத்திய மாகாணத்தின் கெக்கிராவ, தம்புள்ள, போன்ற பகுதிகளில் இருந்து அகதிகளாக்கப்பட்ட குடும்பங்களில் ஐந்து குடும்பங்கள் எழுபத்தேழாம் ஆண்டு ஓக்டோபர் ஐந்தாம் திகதி பண்ணையில் சேர்க்கப்பட்டனர். அதன் பின்பு மேலும் பலர் பண்ணையில் சேர்க்கப்பட்டார்கள். சகலருக்கும் இளைஞர்களின் உதவியுடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

104 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இப்பண்ணையில் 30 ஏக்கர் நெல்வயல்களாகும். மிகுதி மேட்டு நிலம். ஒருபக்கம் குளமும், மிகுதி மூன்று பக்கங்கள் காடுகளாலும் சூழப்பட்டிருந்தது. இக்குளம் மருக்காரம்பளை என்று அழைக்கப்பட்டது. பண்ணையில் இளைஞர்களிலிருந்து மூன்று நல்வர், குடும்பங்களில் இருந்து மூவர் என ஏழுபேர்க் கொண்ட கமிட்டியினால் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அடிக்கடி இளைஞர்களும், குடும்பங்களும் கூடி பண்ணையில் எழும் பல்வேறு பிரச்சனைகளையும் ஆராய்ந்து தெளிவுப்படுத்தி கொண்டார்கள். அத்துடன் அயல் கிராமங்களு டனும் நல்உறவு பேணப்பட்டது.

பண்ணையில் சுமார் 22 ஏக்கரில் நெல் விதைக்கப்பட்டது. காடுவெட்டப்பட்டிருந்த ஆறு ஏக்கர் நிலத்தில் மேட்டுநிலத்தில் காடு வெட்டப்பட்ட ஆறு ஏக்கர் மட்டப்படுத்தப்பட்டு மிளகாய். கௌப்பி என்பன பயிர் செய்யப்பட்டன. அத்துடன் கிணறும் தோண்டப்பட்டது. பண்ணையிலிருக்கும் குளத்தில் கணையன், விரால், வாழை போன்ற மீன்கள் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மீன் பிடிப்பதற்காக ஐந்தைந்து பேர் கொண்ட குழுக்கள் பிரிக்கப் பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நாள் மீன்பிடிக்க அனுப்பட்டது. பிடிக்கப்படும் மீன்கள் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். நிர்வாகம் மீனை சமமாக விநியோகம் செய்யும். எனினும் மீன்பிடித்தவர்கள் நல்ல மீன்களை எடுத்த கீறி கருவாடு போட்டு கொண்டதால், இந்த முறை நிறுத்தப்பட்டு மீன்பிடிக்கும் பொறுப்பு முற்றாக இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பண்ணையில் உள்ள மாட்டு பண்ணையில் மாடுகள் வளர்க்கப்பட்டன. காலையில் பாண் விநியோகம் செய்யப்படும். குழந்தைகள் உள்ள குடும்பங்களிற்கு அதிகமாக பால் விநியோகம் செய்யப்படும். மேலும் கோழிகளும் வளர்க்கப்பட்டதுடன் மா, வாழை போன்ற பயன்தரும் மரங்களும் நாட்டப்பட்டன. ஆரம்பத்தில் பண்ணையில் 1200 புசல் நெல்லும், 1500 இறாத்தல் மீனும் உற்பத்தி செய்யப்பட்டன. பண்ணையில் மிருகசக்தியை பயன்படுத்தி  குடிசை கைத்தொழில்களை விருத்தி செய்யும் நோக்கில், 'எருதி" என பெயரிடப்பட்ட இயந்திரம் திட்ட அளவில் பரீட்சிக்கப்பட்டு செயல் வடிவத்திற்கு வந்தது. 

காணியை வாங்கிக்கொள்வது என்ற அபிப்பிராயம் நிலவிய போதும் சில காரணங்களின் நிமித்தம் காணியை தனியாரின் பெயரில் வைத்துக்கொள்வது எனவும் பின்னர் செயற்குழுவின் பொதுவுடமையாக உரிமைப்படுத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. காணிக்கு குத்தகையாக சிறு தொகை கொடுக்கப்படல் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அப்படி எந்த தொகையும் வழங்கப்படவில்லை. ஆசிரியர் அருளப்புவும் பண்ணையில் இருந்து தன் அனுபவங்களை மக்களுடன் நீண்ட காலமாக பகிர்ந்துகொண்டார்.

பண்ணையில் வேலை செய்யும் ஆண்களுக்கு மாதம் 150 ரூபாவும், பெண்களுக்கு 100 ரூபாவும், இளைஞர்களுக்கு 150 ருபாவும் மாத பொருட்படி வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலை செய்தால் மாதம் 250 ரூபாய்க்கு பண்ணையில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கலாம். அத்துடன் ஊக்க பணமாக நாளொன்றுக்கு வேலை செய்யும் ஆண்களுக்கு ஒன்றரை ரூபாயும், பெண்களுக்கு ஒரு ரூபாயும் வழங்கப்பட்டது. அத்துடன் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை இலாபம் சமமாக பகிரப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. சிறு தேவைகள் ஏற்படும் போது கடனும் வழங்கப்பட்டது. பொருட்படியின் படிபொருட்கள் வாங்காமல் விடப்பட்ட தொகை கையளிக்கப்பட்டது. சிறுவர்கள் கண்ணாட்டியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்றார்கள். இளைஞர்களும் சிறுவர்களுக்கு பாடம் புகட்டினார்கள். இந்த பண்ணையிலிருந்து இளைஞர்கள் பேராதனை, யாழ் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகினார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. 

பண்ணையில் இருந்தவர்கள் அநேகர் சொந்த நிலம் வைத்திருந்தவர்கள். எனவே தனிப்பட்ட போக்கில் பல காலம் வாழ்ந்த அவர்களுக்கு இத்திட்டத்தில் ஈடுபடுவது கடினமாகவே இருந்தது. முதலில் நிலம் தனிதனியாக பகிர்ந்து கொடுக்கப்படல் வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது. வீடுகள் கட்டுவதற்கு தனித்தனியாக நிலம் தரவேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது.  பின்னர் இவ்வாறான கேள்விகள் மறைந்ததோடு, அனைவரும் ஒன்றாக இருக்க பழகிக்கொண்டதுடன் அவ்வாறே தொடர விரும்புவதாகவும் தெரிவித்தனர். இரண்டொரு குடும்பங்கள் தனித்து காடுவெட்டி இருக்க விரும்புவதாக கூறி பண்ணையை விட்டு வெளியேறி போனாலும், சில நாட்களின் பின் பண்ணைக்கே திரும்பினார்கள்.

பண்ணையில் பிரச்சினை ஏற்ப்பட்டால் அவை உடன் தீர்த்து வைக்கப்பட்டது. பாதகமான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட்டன. ஒரு முறை காவல் நேரத்தில் வேட்டையாடப்பட்ட பன்றி ஒன்றை வெளியிடத்திற்கு கொண்டு போய் விற்று விட்டதாக பிரச்சினை எழுந்தது. உடன் அப்பிரச்சினை விசாரணை செய்யப்பட்டு உண்மையென்று கண்டதும், சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மீன் விநியோகம் நிறுத்தப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பிழையை உணர்ந்து மன்னிப்பு கோரியதால் மீண்டும் மீன் விநியோகிக்கப்பட்டது. 

பண்ணை காவல் துறையினரின் நெருக்குவாரங்களையும் எதிர்க் கொண்டது. இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்கள். சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்றன. பண்ணையின் வளர்ச்சிக்கு இது தடையாக அமைந்தது. 

பண்ணை அகதிகள் புனர்வாழ் கழகத்தினர் வழங்கிய கடனை முதலீடாக கொண்டே இயங்கியது. ஆரம்பத்தில் இக்கடனை திருப்பி செலுத்துவதும் கடினமானதாக இருந்தது. எனினும் பின்னர் பலர் உதவி செய்ய முன்வந்தார்கள். பண்;ணையில் பொதுமை மனப்பான்மை, பண்பாடு ஊக்குவிக்கப்பட்டது. உழவர் திருநாளாகிய பொங்கள் நாளன்று பெரும் கலைவிழா இடம்பெறும். தொழிலாளர் தினமாகிய மேதினத்தன்று சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. குடும்பங்கள் கூட்டுறவு இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்தி கொள்வதால் அவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மை மறைந்தது. இளைஞர்களும் குடும்பங்களும் அன்புடன் பழகிக்கொண்டார்கள். விவசாய நடவடிக்கைகளில் அனுபவம் கொண்டவர்களிடம் இருந்து எப்போதும்  ஆலோசனைகள் பெறப்பட்டன. பண்ணையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக , தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அடிக்கடி அனைவரும் கூடிக் கலந்துரையாடினார்கள். அத்துடன் கருத்தரங்குகளும் நடைப்பெற்றன. வெறும் பேச்சுடன்  நிற்காமல் கலந்துரையாடும் விடயங்களை அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் நடைமுறைப்படுத்தவும் விழைந்தார்கள். இத்தகைய செயற்பாடுகளினால் அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒரு சமூகம்பண்ணையில் உரு பெற ஆரம்பித்திருந்தது. எனினும் அப்போதைய அரசியல் நெருக்குவாரங்கள், அமைப்பின் இயக்கம் நிறுத்திக் கொள்ளப்பட்டமை என்பன போன்ற பலக்காரணங்களால் பண்ணை அதன் இறுதி இலக்கை பரீட்சித்து பார்ப்பதில் வெற்றி பெறவில்லை. எனினும் பல அனுபவங்களையும், படிப்பினைகளையும் தரக்கூடியதாகவும், எதிர்கால பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நடை முறையில் தீர்வுகளை அமுல்படுத்தி   பார்க்க எனபலவகையில் இவ் பொதுவுடமை விவாசாய பண்ணை முன்னெடுப்புக்களை வழங்கியிருந்தமையை யாரும் மறுக்க முடியாது. இவ்அனுபவத்தை ஆழமான ஆய்விற்கு உட்படுத்துவதானது எமக்கும் எதிர்காலத்திற்கும் பல வழிக்காட்டல்களை வழங்கி நின்று வழிக்காட்டும்.

1:16 PM

ஈழப்புரட்சி அமைப்பின் திட்ட பிரகடன மாநாடுகள்

by , in
1975ம் ஆண்டு லண்டனில் கருவெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு வடக்கு,கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் விடுதலை தேசிய இனப்பிரச்சினையின் கூர்மைக்குள் அமுங்கி பிற்போக்குத்தனங்களைக் கொண்ட புதிய அதிகாரவர்க்கங்களின் பிடிக்குள் ஈழவர்களின் விடுதலையானது சென்றுவிடக்கூடாது. மாறாக எம் சமூகத்தில் காணப்படும் தனியுடமை சமூக அமைப்பு தோற்றுவித்த சமூக ஒடுக்குமுறை,பெண் ஒடுக்குமுறை, ஏற்றதாழ்வு  போன்ற  உள்ளக  முரண்பாடுகளையும், அதன் போலித்தனங்களையும் களைந்து ஒரு புரட்சிகர தத்துவத்தை படைக்கவேண்டும் என்பதற்காக தனது அரசியல் பணிகளை ஸ்தாபகர் இரட்ணசபாபதி அவர்களின் கருத்திற்கமைய தாயகத்தினுள் ஆரம்பித்தது. அவ்வாறு செயற்பட ஆரம்பித்த ஈழப்புரட்சி அமைப்பு  தேவையான சந்தர்ப்பங்களில் திட்ட பிரகடன மாநாடுகளை கூட்டி தன் பாதையை செப்பனிட்டது. 1990 ஆம் ஆண்டு அமைப்பு கலைக்கப்படும் வரையில் ஐந்து திட்ட பிரகடன மாநாடுகள் நடத்தப்பட்டன. இங்கு முதல் நான்கு திட்ட பிரகடன மாநாடுகளையும் சுருக்கமாக பார்க்கலாம்.

முதலாவது திட்டபிரகடன மாநாடு 

இலட்சிய வேட்கையுடன் கருக்கொண்ட ஈழப்புரட்சி அமைப்பு அதே ஆண்டில் நவம்பர் 23 இல் தனது முதல் திட்டபிரகடனத்தை வெளியிட்டு தன் பாதையை தெளிவுப்படுத்தி அதன் வழியேதன் செயற்பாட்டைமேற்கொண்டது. ஈழவர்களின் இன்னலை சித்தாந்த அடிப்படையில் அனைத்துமக்களின் பிரச்சினையாக முன்வைத்து தீர்வுக்காண விழைந்த முதலாவது சரித்திர நிகழ்வின் முடிவில் வெளிவந்ததிட்டபிரகடனம் பிரதானமாக ஐந்து அம்சங்களை வெளிப்படுத்தி நின்றது. அப்பிரகடனங்கள் சுருக்கமாக கீழே...
1) தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு அவர்கள் வாழும் பகுதிக்குள் தேசிய அந்தஸ்தை (State hood) நிறுவுல்.
2) அத்தேசிய அந்தஸ்தானது மன்னார் முதல் மட்டக்களப்பு வரை, பருத்தித்துறை முதல் பதுளை வரை, பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசங்களாகும்.
3) பண்டைய பாட்டாளிகளென (Classical Proletariat) இனம் காணும் மலையக மக்களை உள்ளடக்கிய தீர்வினாலேயே ஈழம் நிதர்சனமாகும்.
4) ஒவ்வொரு போராட்டமும் வர்க்கப் போராட்டமே என்பதனை ஏற்றுக் கொண்டு அந்தவகையில் ஈழத்தின் போராட்டமும் வர்க்க அம்சத்தை உள்ளடக்கியது என்றும் அதன் காரணமாக மலையக மக்களை முன்னணியாகக் கொண்ட (Vanguard) போராட்டமாக அமைதல் வேண்டும்.
5) ஈழத்திற்கான போராட்டம் என்பது அனைத்து மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டமாக அமைதல் வேண்டும்.

இரண்டாவது திட்டபிரகடன மாநாடு

முதலாவது திட்டபிரகடனமாநாட்டின் பிரகடனங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து செயற்பாட்டை முன்னெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு இரண்டாவது தடவையாக 1977 ம் ஆண்டு ஏப்ரலில் தனது இரண்டாவது பிரகடனத்தை வெளியிட்டுதன் பாதையை செப்பனிட்டது. கருவெடுத்த காலம் தொட்டு கருத்து ரீதியாக கட்டியெழுப்பப்பட்ட  அமைப்பை மக்கள் மயப்படுத்தும் திட்டத்தை இரண்டாவது மாநாடு உறுதியாக முன்னிறுத்தியதை கீழ்வரும் அதன் பிரகடனங்கள் வெளிப்படுத்துகின்றன.
1) ஈரோசின் செயற்பாடுகள் ஈழத்திற்குள் நிலை நிறுத்தப்படல் வேண்டும்
2) செயற்பாடுகள் பொருளாதார,அரசியல் இணைந்த திட்டங்களினூடாக அமைதல் வேண்டும்.
3) செயற்திட்டங்களில் பணியாற்றி பயிற்சி முடித்த தோழர்கள் ஈரோஸ் செயற்பாட்டை முன்னெடுத்தல் வேண்டும்
4) அரசியல் பொருளாதார திட்டங்கள் போராட்டத்தளங்களாக மாற்றப்பட வேண்டும்
5) ஈழத்திற்குள் போராடும் இயக்கங்களை அமைப்பின் கருத்துக்கமைய இணைத்திடல் வேண்டும்.
6) மேற்கூறப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினூடாக தெரிவு செய்யப்படும் முதல் ஐம்பது தோழர்கள் பூரண இராணுவ பயிற்சி முடித்தபின் திட்டப் பிரகடன மாநாடு (Planary Session) நடத்தப்படும்.
7) ஈரோஸ் இயக்கமாக பரிணாமம் அடைந்து போராட்டத்தை முன்னெடுக்கும் என பிரகடனம் செய்யப்பட்டது.

மூன்றாவது திட்டபிரகடன மாநாடு 

1980 ஏப்ரலில் திருமலையில் நடந்த மூன்றாவது திட்டபிரகடன மாநாடு வெகுசன பணிகள் மூலமும் வெகுசனங்களிடையே பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அமைப்பின் தோழர்களின் பொருளாதார நிலையை ஸ்தீரப்படுத்தல் என்பவற்றில் சிறப்பு கவனத்தை செலுத்தியது. இதன் பிரகடனங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
1) ஈழத்தில் இயக்கச் செயற்பாட்டிற்கென சில அதிகாரங்களைக் கொண்டதான பொதுஆணைக்குழு ஒன்றை அமைத்தல்.
2) மட்டகளப்புப் பகுதியில் வேலை செய்வதற்காக அங்கு ஏற்பட்ட இயற்கைச் சீரழிவினைப் பயன்படுத்தி கூரைத் தகட்டுத் திட்டமொன்றை ஏற்படுத்தல்.
3) ஈழம் முழுவதற்குமான இயக்க ஊடகமாகவும், எமது பிரச்சினைகள் சம்பந்தமாக சித்தாந்த விளக்கமாகவும் 'தர்க்கீகம்" என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை வெளியிடுவதெனவும், தமிழ் நாட்டிலிருந்து செயற்படுவதற்கு எமது ஊடகமாக சென்னையிலிருந்து 'பொதுமை" என்ற இதழையும் வெளியிடல்.
4) தோழர்களின் அன்றாட சீவனப்பாட்டுக்காக சிறுபண்ணைத் திட்டங்களை செயற்படுத்தல்

நான்காவது திட்டபிரகடன மாநாடு 

கறுப்பு ஜீலைகலவரத்தின் பின் இனஒடுக்கலும், விடுதலைக்கான போராட்டமும் வளர்ந்த காலகட்டத்தில் சூழ்நிலைமைகளை கருத்திற் கொண்டு அமைப்பின் இலக்கு நோக்கிய செயற்பாடுகள் திட்டமிடப்பட்டதனை பின்வரும் நான்காவது மாநாட்டின் திட்டபிரகடனம்   வெளிப்படுத்துகின்றது. 1984  மார்ச்   22 இல்   ஈரோஸ் தனது நான்காவது பிரகடனத்தை வெளியிட்டது.
1) ஈழத்தில் இயக்கச் செயற்பாட்டிற்கென சில அதிகாரங்களைக் கொண்டதான பொதுஆணைக்குழு ஒன்றை அமைத்தல்.ஈழவர் போராட்டத்திற்குரிய சூழல் கனிந்திருக்கும் நிலையில் போராட்டத்துக்காக மக்களை தயார்படுத்தி இறுதிப் போராட்டத்திற்கு இட்டுச் சென்று இம்மக்களின் விடிவாகிய ஈழத்தை நிதர்சனமாக்கும் வகையில் அகச் சூழ் நிலைகள் அமையவேண்டும் என்பதற்கிணங்க ஈரோஸ் தனது கட்டமைப்புகளை மேலும் இறுக்கமானதாகவும், மக்களை இணைத்துக் கொண்டு போராடக் கூடியவகையில் செயற்படல் வேண்டும்.
2) ஈழப்போராட்டமானது வர்க்க குணாம்சத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்த போதும் தேசிய இனப்போராட்ட வடிவமே கூர்மையடைந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளும் இயக்கம் அப்போராட்ட முன்னெடுப்பில் முனைந்து செயலாற்றல் வேண்டும்.
3) கூர்மையடைந்து வரும் நெருக்கடிகளில் எதிரியின் அசுர முன்னேற்றத்தையும் தாக்குதலையும் எதிர் கொள்ள வேண்டிய அவசியம் கருதி இன்றையநிலையில் மற்றைய இயக்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் இராணுவக் கூட்டணி அமைப்பதற்கும் இயக்கம் தயாராய் இருப்பதுடன் தனித்துவம் பேணி ஒதுங்கி நிற்கும் இயக்கங்களை இவ் இணைப்புக்குள் கொண்டு வர முயற்சித்தல் வேண்டும்.
4) ஈழவர் போராட்டத்தில் எதிரியின் பக்கம் ஏகாதிபத்தியம் துணை நிற்குமென்பதை கணக்கிலெடுக்கும் எமது இயக்கம் எம்மை பலப்படுத்தும் திறன் கருதி நேசசக்திகளின் உதவிகளையும்,வசதிகளையம் வகையாகப் பெற்று ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கும்.

இவ்வாறு ஈழப் போராட்டத்தின் புரட்சிகர சக்தியாய் செயற்பட்டு வரும் ஈழப்புரட்சி அமைப்பு, ஐக்கியத்திற்கான போராட்டத்தில் ஆற்றியபங்கும், வெளிப்படுத்திய பண்பும் குறிப்பிடத்தக்கதும், இன்றைய செயற்பாட்டாளர்கள் யாவரும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியதும் ஆகும். ஈழப்புரட்சி அமைப்பு திட்டபிரகடன மாநாடுகளினூடாக தன் பாதையை தொடர்ச்சியாக நெறிப்படுத்தியதோடு அனைத்து சக்திகளின் இணைப்பையும் பொதுஎதிரிக்கு எதிரான போராட்டத்தையும் கோட்பாடாக வலியுத்தி வந்துள்ளது. இன்று ஆரோக்கியமற்ற சக்திகளால் போராட்டம் திசைதிருப்பப்படும் நிலைமைகளில், போராட்டத்தை ஒரு முகபடுத்தி நேர் வழிப்படுத்தி கடந்தகால அர்ப்பணிப்புகள் வீண் போகாவண்ணம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியபாட்டை உணர்ந்து செயற்பாட்டிற்கு வந்திருக்கும் ஈழப் புரட்சி அமைப்பின்  தோழர்கள் தடம் பதித்து வந்த பாதைகளில் மறையாது நிலைத்து நிற்கும் தடங்களை இன்றைய பயணத்திற்கு வழிக்காட்டியாக வழிப்படுத்தி கொள்வார்கள் என்பதும் திண்ணமே.


5:44 AM

திருகோணமலை - பறிபோகும் இதயபூமி

by , in
தமிழ் பேசும் மக்களின் உடைமைப்பாட்டு பிரச்சினையின் பால் சர்வதேசத்தின் கவனத்தையும் கரிசனையையும் ஈர்த்ததில் திருகோணமலைக்கே முழுமையான பங்குண்டு. இந்து சமுத்திரத்தில் அரசுக்களின் ஆதிகத்தை நிலைநாட்ட, திருகோணமலை பிரதேசம் அரசுக்களினால் கையாளப்படக்கூடியதாகவோ அல்லது எதிரிகளின் ஆதிக்கத்தில் இல்லாதிருப்பதோ முக்கியமானது. ஏகாதிபத்திய அரசுக்களுக்கு, இராணுவ-பொருளாதார நலன்களின் பொருட்டு கேந்திர முக்கியமிக்க பிரதேசமாகவும், ஈழவர்களுக்கு தம் தேசிய குணாம்சத்தை வலுப்படுத்துவதில் இதய பிரதேசமாகவும் திருகோணமலை முக்கியத்துமிக்கமாகின்றது.  ஈழப்போராட்டத்தை பொறுத்தவரையில் திருக்கோணமலை மீதான ஆதிக்கமே போராட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாகும்.

இதனையே ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் தோழர் இரட்ணா “ஈழவர்களின் உடைமைப்பாட்டு போராட்டமானது திருகோணமலையை விடுவிடுப்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றது” என்று சுட்டிக்காட்டினார். மேலும் “அப்பிராந்தியத்தை தக்கவைத்துக்கொள்ளும் போதுதான் விடுதலைப்போராட்ட அமைப்பின் வலு நிர்ணயக்கப்படுகிறது” என்றும் வலியுறுத்தினார். விடுதலைப்போராட்ட அமைப்பின் வலுவை மாத்திரம் அல்ல விடுதலைப்போராட்டத்தையே நிர்ணயப்பதில் திருகோணமலை மீதான ஆதிக்கம் முக்கியமாகின்றது.

இதனை தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் உணர்ந்து கொண்டதோ இல்லையோ, சிறிலங்கா அரசு நன்கு உள்வாங்கியிருக்கின்றது. அதன் காரணமாகதான் தமிழ் பேசும் மக்களின் தேசிய குணாம்சத்தையும், உடைமைப்பாட்டு போராட்டத்தையும் சிதைக்கும் வகையில் திருகோணமலையில் ஈழவர்களி;ன் ஆதிக்கத்தை தகர்த்து, சிங்கள மேலாதிக்கத்தை ஏற்படுத்திவருகின்றது.

கடந்த வருடம் சிறிலங்காவின் ஒவ்வொரு மாவட்டத்தின் பெருமைகளையும் எடுத்துரைக்கும் விதத்தில் அரசால் 10ரூபாய் நாணய குற்றிகள் வெளியிடப்பட்டது. திருமலையின் சிறப்பு, ஆசியாவிலே பெரியதும் உலகில் ஐந்தாவது பெரியதுமான இயற்கை துறைமுகம் என்பதை உலகமே அறியும். ஆனால் சிறிலங்கா அரசு “இனபல்லினத்தும்” என்பதையே திருகோணமலையின் சிறப்பாக குறிப்பிட்டுள்ளது. குடியேற்றங்கள் மூலம் சிங்களவர்களின் சனத்தொகையை அதிகரித்து, அரச பயங்கரவாதம் மூலம் தமிழ் பேசும் மக்களை துரத்தியடித்து இனபல்லினத்துவம் நிலவுவதாக கூறுவது வெறும் வேடிக்கையானது மட்டுமல்ல. சேருவில விகாரையை பிராதனப்படுத்தி, திருமலையில் சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டும் எண்ணத்தையே அரசு இங்கு குறிப்புணர்த்தியுள்ளது.

சிறிலங்கா அரசு, திருமலையில் சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டிட, மிக நீண்டகாலமாக திட்டமிட்ட முறையில்  குடித்தொகை அமைவை மாற்றியமைத்து வருவதுடன், திருகோணமலையை வடகிழக்கு மாகாணங்களுடன் தொடர்பற்றதாக்கும் வகையில், வடமத்திய மாகாணத்துடன் இணைக்கும் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. 

வரலாற்றில் நீண்டகாலமாக இத்தகைய முயற்சிகள் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற பெயரில் நடந்து வருவதை நாம் அறிவோம். முன்னர் போலவே, 2030 வரை சிறிலங்கா அரசின் அபிவிருத்தி கொள்கையை எடுத்துரைக்கும் தேசிய பௌதீக கட்டமைப்பு திட்டத்தின் ஊடாகவும் இந்த முயற்சிகளை தீவிரமாக்கியுள்ளது அரசு. ஏலவே இந்த திட்டம் குறித்தும், இத்திட்டம் ஊடாக மலையக, கிழக்கு பகுதிகளில் ஈழவர்களி;ன் தேசிய குணாம்சத்தை சிதைக்க தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பதிந்துள்ளேன். 2009 தமிழீழ போரின் முடிவிற்கு பின் அரசு ஈழவர்கள் இனியொருபோதும் தேசியகோரிக்கையை முன்வைக்காத வகையில் ஈழவர்களின் தேசிய குணாம்சங்களை சிதைத்து அழிக்கும் முயற்சியில் தீர்க்கமாக களமிறங்கியுள்ளது. இதன் போது திருக்கோணமலை மீது விசேட கவனம் செலுத்தியுள்ள சிறிலங்கா அரசு, தன் தேசிய பௌதீக கட்டமைப்பு திட்டத்தின் ஊடாக அதற்காக விசேட திட்டங்களையும் தீட்டியுள்ளது. திட்டங்களின் உள்நோக்கத்தின் தீவிரத்தை அவதானித்தால் சிறிலங்கா அரசு மீண்டும் பந்தை ஈழவர்களின் கைகளிற்கு கொடுப்பதற்கு தயாாில்லை என்பதும், அதற்காக ஈழவர்களின் கைகளை அறுத்தெறிய கங்கணம் கட்டியிருப்பதும் புலனாகின்றது.

இத்தகைய நோக்கம் கொண்ட தேசிய பௌதீக திட்டத்தில் திருகோணமலை மாவட்டம் கண்துடைப்பாக கிழக்கு பிராந்திய அபிவிருத்தி திட்டத்தில் குறித்து காட்டப்பட்டிருந்தாலும், திருகோணமலை மாவட்டத்தின் முழு அபிவிருத்தி திட்டங்களும் வடமத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட்டு, வடமத்திய பிராந்திய அபிவிருத்தி திட்டத்திலேயே உள்ளடக்கப்பட்டுள்ளது. 
கண்துடைப்பு


திருகோணமலையை வடமத்திய மாகாணத்துடன் இணைப்பது, அல்லது பொலநறுவை மாவட்டத்தின் சிலபகுதிகளையும், தம்புள்ளை பிரதேசத்தையும் திருகோணமலையுடன் இணைத்து புதிய மாகாண அலகு ஒன்றை ஏற்படுத்துவது என்பது சிறிலங்கா அரசின் நீண்டநாள் கனவாகும். இவ்வாறு திருகோணமலையை வடமத்திய பிராந்தியத்துடன் கவனத்திலெடுத்து அபிவித்தி வலயத்தை உருவாக்கியமையே அரசின் கபட எண்ணத்திற்கு சிறந்த சாட்சி. மேலும், கிழக்கு பிராந்திய அபிவிருத்தி திட்ட வரைப்படத்திலும் திருமலையை வெறுமனே காட்டி ஏமாற்று தனத்தையும் செய்துள்ளது அரசு.

இத்திட்டத்தில் 50 இலட்சம் சனத்தொகையை குடியமர்த்தும் வகையில் வடமத்திய பாரிய நகரம் உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வடமத்திய பாரிய நகரம் தம்புள்ளை, பொலநறுவை, அனுராதபுரம், திருகோணமலை நகரங்களை இணைத்த பாரிய பிராந்தியமாகும்.
மேலும் 10 இலட்சம் சனத்தொகையை குடியமர்த்தும் வகையில் கிழக்கு தலைநகரம் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்ததமானி அறிவித்தலிருந்து


இங்கு வடமத்திய பாரிய பிராந்தியத்தில் 50 இலட்சம் மக்களை குடியமர்த்துவது தொடர்பாக குறிப்பிடப்பட்டு;ள்ளது. எனவே இந்த திட்டத்தினுள் 50 இலட்சம் மக்கள் உள்ளக்கப்படபோகின்றார்கள். ஆனால் பிறிதொரு இடத்தில் இந்த அளவு முறையே பொலநறுவை 5 இலட்சம், அனுராதபுரம் 15 இலட்சம், தம்புள்ள 10 இலட்சம், திருகோணமலை 10 இலட்சம் என மொத்தம் 40 இலட்சம் பேர் இலக்கு வைக்கப்படுவார்கள் என்றும், திருகோணமலை நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மக்கள் இலக்கு வைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வா்தமானி அறிவித்தலிலிருந்து
எனவே இங்கு திருகோணமலை பிரதேசம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதும், அப்பிரதேசத்தில் கொழும்;பு நகர் போன்று கைத்தொழில் அபிவிருத்தியை ஏற்படுத்தி 2030 ஆம் ஆண்டளவில் 20 இலட்சம் மக்கள் வசிக்கும் பொருளாதார முக்கியதுமிக்க பிரதேசமாக்கிடும் திட்டத்தை அனுமானிக்கலாம்.
வடமத்திய பாாிய பிராந்திய திட்டத்தின் விளக்கப்படம்


இத்திட்டத்தினை கூர்ந்து அவதானித்தால் திருகோணமலையானது கிழக்கு, வடக்கு பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, வடமத்திய மாகாணத்துடன் பொருளாதார உறவுகள் அடிப்படையில் இறுக்கமான இணைக்கப்படும் வகையில போக்குவரத்து, வர்த்தக, தகவல் வலையமைப்பு உருவாக்கபடவிருப்பதை உய்தறியலாம். 

மேலும் அனுராதபுரம், தம்புள்ளை, பொலநறுவை, சேருவில என தொடராக புனித நகர் வலையமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்டவுள்ளது. இதற்கான முயற்சிகள் நீண்டகாலத்திற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டன. சேருவலவில் பௌத்த கட்டுமானங்களை ஏற்படுத்துவதும், வரலாற்று கதைகளை கட்டவிழ்த்து விடுவதும் இனி செய்ய எஞ்சியிருப்பதாகும். பொதுபலசேனா உட்பட பல பௌத்த அமைப்புக்கள் மகாவலிகங்கையின் இருமருங்கிலும் அமைந்த 2000 ஏக்கர் காணியை இசுலாம் மதத்தை சேர்ந்த ஈழவர்களால் அறுக்கப்படும் மாடுகளை மீட்டு பாதுகாப்பாக வளர்ப்பதற்காக கோரி வருகின்றார்கள். பெரும்பாலும் அரச அதிகார உயர்மட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், வாய் மூல உறுதிமொழிகளும் வழங்கப்பட்டிருக்கின்றது. தற்போதைய மாடறுப்புக்கு எதிரான பௌத்த அமைப்புகளின் கூக்குரல்களின் பின்னனியும் இதுவே.

20 இலட்சம் என இலக்கு வைக்கப்படும் போது தற்போது திருக்கோணமலையிலிருக்கும் சனத்தொகை 2030 இல் ஏழு இலட்சங்காக காணப்படும். மிகுதி பேர் நாட்டின் ஏனைய பகுதிகளிலி;ல் இருந்து குடியமர்த்தப்படுவார்கள். இதற்கு அமையவே திருகோணமலை அபிவிருத்தி திட்டம் என்ற விசேட திட்டம், 10000 வேலைவாய்ப்பை உருவாக்கும் சம்பூர் கைத்தொழில் வலயம் (இரத்து செய்யப்பட்டது) போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டன. திருகோணமலை அபிவிருத்தி திட்ட கருவையும் உள்ளடக்கி வெளியிடப்பட்ட தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டத்தின் வடமத்திய பிராந்திய அபிவிருத்தி திட்டம் மூலம் குறிப்பிடப்பட்டு;ள்ள விவசாய, கைத்தொழில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் இந்த குடியேற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை வரலாற்று சம்பங்கள் எமக்கு அறிவுறுத்தி நிற்கின்றது.

ஏலவே திருகோணமலையில் நிர்வாக சேவை பரீட்சை போன்றவற்றில் 90சதவீதம் வரையில் சிங்களவர்களே தெரிவாகின்றனர். இதுபோலவே சுற்றுவா தொழில், மீன்பிடி குடியேற்றம் என்பன மூலமும் சிங்களவர்களின் சனத்தொகை அதிகரிக்கப்படுகின்றது. இந்த குடியேற்ற முறைகள் தொடர்பில் ஈழவர் மீதான குடித்தொகை சீர்குலைப்பு முறைகள் என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

2007 இன் கணக்கெடுப்பின் படி திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகை மூன்று இலட்சத்து முப்பத்தைந்தாயிரமாகவும், திருகோணமலை நகர சூழலின் சனத்தொகை தொண்ணூராயிரமாகவும் இருக்கி;ன்றது. இந்த எண்ணிக்கை 2030 இல் திருகோணமலையில் ஏழு இலட்சமாகவும், திருகோணமலை நகர சூழலின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பதாயிரமாகவும் இருக்கும் என அனுமானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி 20 இலட்சம் சனத்தொகை என்ற இலக்கை அடையமுடிகிறதோ இல்லையோ… 2012 சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் முறையே இரண்டுஇலட்சத்து ஐம்பதினாயிரம் : ஒரு இலட்சம் என்றிருக்கும் ஈழவர்: சிங்களவர் குடித்தொகை அமைப்பை மாற்றியமைக்க முழு மூச்சியலான முயற்சிகள் நடைபெறும்.


திருக்கோணமலை மாவட்டத்தில் ஈழவர், சிங்களவர் சனத்தொகை அதிகரிப்பு நடந்த விதம்.
வருடம் ஈழவர் சிங்களவர்
1827
18908250
1881
20050935
1891
235431105
1901
253181203
1911
269331138
1921
314261501
1946
5701411606
1953
6613315296
1963
9522739925
1971
13167354744
1981
16817185503
2007
24482484766
2012
2489961011991



இந்த தரவுகள் திருமலையின் குடித்தொகை அமைவு எவ்வாறு மாற்றியமைக்கப் படவிருக்கின்றது என்பதை தெளிவாக கட்டியம் கூறுகின்றது. எனவே ஈழவர்களின் தேசிய அந்தஸ்த்தினதும் உமைப்பாட்டு போராட்டத்தினதும் எதிர்hகாலம் அரசின் இந்த கபட திட்டத்தை முறியடிப்பதிலும் திருகோணமலையில் ஈழவர்களின் அரசியல் பொருளாதார சமூக ஆதிக்கத்தை நிலைநாட்டுவதிலுமே தங்கியிருக்கின்றது. திருகோணமலையில் ஆதிக்கம் பறிபோகுமாயின் ஈழவர்களின் தேசிய அந்தஸ்தும் பறிபோகும்.  இந்த விடயம் ஈழவர்களை விட, சிறிலங்கா அரசின்  தத்துவ வழிநடத்துனர்களுக்கு நன்கு புாிந்திருக்கின்றமையும் அதனை செயற்படுத்தி வருகின்றமையும் மேலும் ஆபத்தானதாகும். இந்நிலைமையை தொடருமாயின் 2030 இல் திருகோணமலை பறிபோவதை நாம் வேடிக்கை பார்க்கலாம்.

2:40 AM

ஈழவரும் இசுலாமியரும்

by , in
இசுலாமியர்கள் அனைவரும் மத அனுட்டாங்களிலில் பழக்க வழக்கங்களில் வித்தியாசபடுவர்கள் ஒழிய இனத்தால் தமிழர்களே என்றும், இசுலாமியர்கள் அராபிய குடியேற்றவாசிகளின் ஆண்வழித்தோன்றல்கள் என்றும் இருமுனை விவாதங்கள் சில காலங்களாக நடந்துவருகின்றன. ஆனால் துரதிஸ்ட்டவசமாக எமக்கிருக்கும் சொற்பமான தொல்லியல் சான்றுகள் வரலாற்று குறிப்புக்களை கொண்டு இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்த தீர்மானத்திற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெறும் ஊகங்கள், புராணக்கதைகள், பகுத்தறிவை தாண்டும் நம்பிக்கைகள் மூலம் முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்த ஆய்வுகள் அனுமானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்த விவாவத்தில்  மூன்று வகையான   போக்குகளை   காணலாம். முதலாவதாக இலங்கை இசுலாமியர்கள் மதமாறிய தமிழர்களே என்ற வாதமும். இரண்டாவதாக இலங்கை இசுலாமியர்கள் அராபிய வர்த்தகர்களின் ஆண்வழித்தோன்றல்கள் என்ற வாதமும், மூன்றாவதாக சிங்களவர்களும் தமிழர்களும் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய வந்தேறு குடிகள், இலங்கை முஸ்லிம்களே இந்த தீவின் பூர்வீககுடிகள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதங்கள் இலங்கை இசுலாமியர்களின் பூர்வீகத்தை எடுத்தியம்பி இசுலாமியர்களின் உடமைபாட்டு போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கிலன்றி வெவ்வேறு தரப்பினரின் சுய இலாபங்களுக்காகவும் தனிப்பட்ட  அரசியல் வர்க்க நலன்களிற்காகவுமே பெரும்பாலும் முன் வைக்கப்படுகின்றன. இதன் ஆரம்பமே சட்டசபை கதிரையில் தான் இடம்பெறுகின்றது. இசுலாமியர்களுக்கு சட்ட சபையில் ஒர் உறுப்பினர் வழங்கப்படஆயத்தங்கள் இடம்பெற்ற வேளையில் யாழ் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய  சேர். பொன். இராமநாதன்   இசுலாமியர்கள் தமிழர்களின் அங்கமே என்ற வாதத்தை முன்வைத்தார். இந்த போக்கிற்கு எதிராக இசுலாமியர்கள் அராபிய வர்த்தகர்களின் ஆண் வழித்தோன்றல்கள் என்ற வாதம்இசுலாமியர்களின் ஆதிக்க வர்க்கத்தினரால் முன்வைக்கப்பட்டது. உண்மையில் இந்த வாதம் இசுலாமிய உழைக்கும் மக்களின் சார்பில் அவர்களின் நலன்களிற்காக முன்வைக்கப்பட்டதன்று. வர்த்தக நோக்கத்திற்காக வந்த வம்சாவழியினரும் அவர்கள் அடிவருடிகளினாலும் தங்கள் நலன்களிற்காக முன்வைக்கப்பட்டதாகும். அதனை விடசோனகர் என்று அழைக்கப்படும் இசுலாமியர்களே இந்த தீவின் பூர்வீககுடிகள்  ஏனையோர் வந்தேறு குடிகள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதத்தை முன் வைப்பவர்களின் நோக்கமாக இருப்பது இசுலாம் மதத்தை முதன்மைப்  படுத்தி மத பாரம்பரிய  பிரியத்தை நிலை நாட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. 

இசுலாமியர்களை தமிழர்களின் அங்கம் என்று கூறி அவர்களை தமது  ஆதிக்கத்தை வலுபடுத்தி கொள்ள முயல்பவர்களினாலும்,வர்த்தக நோக்கங்களிற்காக இந்நாட்டிற்கு வந்து இலங்கை இசுலாமியர்களிடத்தில் தன் பண பலத்தாலும் அதனால் விளைந்த சமூக அந்தஸ்த்தாலும் ஆதிக்கம் செலுத்திவரும் வம்சாவழி இசுலாமியர்களும் அவர்களது அடிவருடிகளும் தங்கள் நலன்களிற்காக இலங்கை இசுலாமியர்களை அராபிய ஆண்களின் வழி தோன்றலாக்கிடும் எத்தணிப்புக்களாலும், ஏனையவர்களை வந்தேறு குடிகளாக்கி இசுலாமியர்களை பூர்வீக குடிகளாக்கி தமது மத ஆதிக்க பாரம்பரிய பிரியத்தை நிறைவேற்ற துடிக்கும் முயற்சிகளினாலும் இலங்கை இசுலாமியர்களின் பூர்வீகம்  மறக்கடிக்கப்பட்டும், அவர்கள் உடமைபாட்டு போராட்டத்தை முன்னெடுக்க முடியாத வகையில் முடக்கப்பட்டும் இன்னலிற்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள். 

இசுலாமியர்களின் பூர்வீகம் குறித்து சிறு தொகையினரான ஆதிக்கம் செலுத்தும் வம்சாவழி முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளின் பார்வையில் ஆராயாமல் பெரும்பான்மையான  உழைக்கும் சாதாரண மக்களின் பார்வையில் ஆராய வேண்டும். அதன் மூலமே பூர்வீகம் குறித்த சரியான நிலைப்பாட்டிற்கு வரமுடியுமாக இருப்பதுடன், அதனடிப்படையில் தமது உடமைபாட்டு போராட்டத்தையும் இலங்கை இசுலாமியர்களால் முன்னெடுக்க முடியும். மேற்குறித்த மூன்று போக்கிலான விவாதங்களில் ஒரு முடிவிற்கு வர முடியும். அதாவது இலங்கை இசுலாமியர் இந்த தீவின் பூர்வீக குடிகளினர்களின் பகுதியினர் ஆவர். அராபிய மற்றும் ஏனைய முஸ்லிம் வர்த்தகர்களால் இசுலாம் மதம் அறிமுகமாகிய போது அம்மார்க்கத்தை தழுவியவர்களே இலங்கை இசுலாமியர்கள் ஆவர். அதனை போல் பௌத்தம் மற்றும் இந்து மதத்தை தழுவியவர்களும் இருந்தமை நிருபிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த இடத்தில் தனி சிங்களவர்களிற்கு  மத்தியில் வாழும் இசுலாமியர்கள் தமிழ் பேசுவது குறித்தும் சிங்களவர்கள் இசுலாம் மதத்தை தழுவாமை குறித்தும் கேள்வி எழும். நிலபிரபுத்துவ முறையுடன் இறுக்கமாக பிணைந்திருந்து சிங்களவர்கள் இசுலாம் மதத்தை தளுவ மறுத்தமையும் பௌத்த மதத்திற்கு அரச அணுசரனை கிடைத்தமையும் காரணமாக அமைய கூடியவை ஆகும். இதே நிலைமையை தமிழ் பேசியவர்கள் தரப்பிலும் காணலாம். தமிழ் தரப்பில் இறுக்கமான நிலபிரபுத்து முறை நிலவா விட்டாலும் தென்னிந்திய செல்வாக்கு மற்றும் இந்த பிரதேசங்களில் ஆதிக்கம் மிக்க தமிழ் அரசுகள் இருந்தமையும் அதன் அணுசரனை இந்து மதத்திற்கு கிடைத்தமையும் வடகிழக்கு மற்றும் ஏனைய பகுதி தமிழ் பேசிய மக்கள் மத்தியில் அல்லது தமிழின் ஆதி வடிவத்தை பேசிய மக்கள் மத்தியில் இசுலாம் பரவுவதில் செல்வாக்கு செலுத்தியிருக்க வேண்டும். இதனை பறை சாற்றும் வகையில் தமிழ் அரசுக்களின் ஆதிக்கம் இருந்த பிரதேசங்களை தவிர்த்து கிழக்கிலும் மன்னாரிலும் இசுலாமியர்கள்  பெரும் எண்ணிக்கையிலும் ஏனைய பகுதிகளில் அநேகமாக முழுமையாகவும் பரம்பல் அடைந்திருப்பது அமைகிறது. 

அத்துடன் ஒரு சமூகம் தன்னை அடையாளப்படுத்தும் வகையிலேயே பிற சமூகங்கள் அந்த சமூகத்தை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் இலங்கை இசுலாமிய சமூகத்தை பொறுத்தவரை வெவ்வேறு முரண்பட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்படுகிறது. அத்துடன் இசுலாமிய உழைக்கும் வர்க்கம் தங்களை உடைமைபாட்டு அடிப்படையில் அடையாளப்படுத்தவில்லை. இதற்கு காரணமாக இந்து ஆதிக்க பிரிவினரால் தூற்றப்பட்டமையும் அதனால் பூர்வீக குடிகளான இசுலாமியர்கள் அவர்களின் பூர்வீக உடமைப்பாட்டு அடிப்படையில் அடையாளப்படுத்துவதை புறந்தள்ளி வந்திருப்பதும் காரணமாகலாம்.அதற்கேற்றாற் போல் இந்து ஆதிக்க பிரிவினரால் இசுலாமியர்கள் இழிவான முறையில் அடையாளப்படுத்தப் பட்டமையும் அந்த குரோதம் இன்று வரை தொடர்வதும் அமைகிறது. இந்த குரோதத்தை தமக்கு சாதகமாக்கி, இலங்கை இசுலாமியர்கள் அராபிய வர்த்தகர்களின் ஆண்வழித்தோன்றல்களே என கதைபரப்பி, அவ்வாறு வேறுபடுத்துவதற்கான பண்பாடு கூறுகளை உருவாக்கும் முயற்சியில் வம்சாவழி இசுலாமியர்கள் பிரயத்தனம் கொண்டதோடு இலங்கை இசுலாமியர்களின் தலைமையையும் கையகபடுத்தியுள்ளனர். இவர்களின் இந்த செயல் இலங்கை இசுலாமியர்களை பெரும் இன்னல்களிற்கு தள்ளியுள்ளதுடன் அரசவை கதிரைகளில்  சகலதையும் எல்லை படுத்தி விட்டது. மறுபுறம் தமிழ் தலைவர்கள் என அடையாளப்படுத்தும்   இந்துக்களால்   இசுலாமிய சமூகத்தின் மீதான காழ்புணர்ச்சியும் வெளிபடுத்தப்பட்டு எல்லா பக்கமும்  இசுலாமியர்களை நெருக்கியுள்ளது. இந்ததலைவர்கள் தங்கள் சமூகத்தின் ஏனையவகுப்புக்கள் மீதும் இதே போன்ற காழ்புணர்வை வெளிபடுத்தியுள்ளனர். 

எனவே இசுலாமியர்கள் ஈழவர்களின் அங்கம் அல்ல. அவர்கள் தொல்குடிஈழவர்களே. இசுலாமியர்கள் அங்கம் என்றால், இந்துக்களும் அங்கமே. அதாவது இசுலாமியர்களை நோகடித்து புறகணித்த ஈழம் என்ற உடமைப்பாடு உண்மையானதன்று. அது வெறுமனே உள்ளீடற்ற பொருள் ஆகும். ஈழவர்களின் பூர்வீக குடிகளின் ஒரு பகுதியினரான இசுலாமியர்களின் எழுச்சியின்றிய ஈழவர்களின் எழுச்சி முழுமையானதன்று. ஈழவர்களின் விடுதலை போராட்டத்தில் இசுலாமியர்கள் பிரிக்கமுடியாதவர்களும்,தவிர்க்க முடியாதவர்களும் ஆவர். இசுலாமியர்கள் விலகி நிற்கவேண்டியவர்களும் அல்ல. இசுலாமியர்களும் ஏனைய மதத்தை சேர்ந்த தமிழர்களும் மதம் சாரா தமிழர்களும் மொழிவாரி அடிப்படையில் ஈழவராய் இணைந்து மொழிவாரி உடைமைப்பாட்டிற்காக முன்னெடுக் கும் போராட்டமும் எழுச்சியுமே முழுமை ஆனதாகும்!

ஈழவராய் இணைவோம் ! இடர்தீர போராடுவோம் !
6:17 PM

ஈரோசின் 5வது திட்டபிரகடன மாநாடு

by , in
சமூக மாற்றத்தை சமூக விடுதலையை இட்சியமாக கொண்டுள்ள எந்த அமைப்பும் தனது கொள்கையையும் பாதையையும் அவ்வப்போது சுயவிமர்சனத்திற்கும், சுய ஆய்விற்கும் உட்படுத்தி திடப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இலட்சியத்துடன் கைக்கோர்த்த சகலரையும் இணைத்துக்கொண்டு அதனை செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க இலட்சியம் கொண்டு உருவெடுத்த அமைப்புக்கள் அனைத்தும் இதனை செய்தனவா அல்லது செய்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் ஈழவரின் விடுதலைக்காக மிகவும் முன்னேறிய தத்துவத்தின் வழிக்காட்டலில் புரட்சிகர மக்கள் சார் பாதையை தேர்ந்தெடுத்து பயணித்த ஈழப்புரட்சி அமைப்பு அதனை செய்து ஏனையவர்களுக்கு முன்னூதாரணமானது. இவ்வாறு முன்னுதாரணமாய் 1988 ஆம் ஆண்டு நடந்த ஈழப்புரட்சி அமைப்பின் ஐந்தாவது திட்ட பிரகடன மாநாட்டை நாம் அனைவரும் நினைவுபடுத்துவது இந்த காலக்கட்டத்தில் மிக பொருத்தமான விடயமாகும்.

ஈழப்புரட்சி அமைப்பு 1975 சனவரி 3ம் திகதி கருக்கொண்டு 1975 நவம்பர் 23 இல் முதல் பிரகடனத்தையும், 1977 ஏப்ரலில் இரண்டாவது பிரகடனத்தையும், 1980 ஏப்ரலில் மூன்றாவது பிரகடனத்தையும் 1984 இல் நான்காவது பிரகடணத்தையும் வெளியிட்டு தனது செயல்பாட்டை நெறிப்படுத்திக் கொண்ட ஈழப்புரட்சி அமைப்பு இறுதியாக 1988 ஆம் ஆண்டு ஐந்தாவது தடவையும் திட்ட பிரகடன மாநாட்டை நடாத்தி திட்ட பிரகடனத்தை வெளியிட்டு தன் பாதையை காலநிலைமைகளுக்கு ஏற்ப சீர்படுத்திக் கொண்டது.  

1988 ஆம் ஆண்டின் மிகவும் சிக்கல் மிகுந்தச் சூழ்நிலையிலும் ஈரோஸ் தன் வழியை தெளிவு படுத்த நெறிபடுத்த திட்டப்பிரகடன மாநாட்டைக் கூட்டி, வெற்றிகரமாக முடித்தது. திட்ட பிரகடன மாநாடு ஐந்து அரங்குகளாக நடைப்பெற்றது. முதலாவது அரங்கு கருத்தரங்காக இடம்பெற்றது. கருத்தரங்கில் 'தமிழ் பேசும் மக்களின் சமகால நிலைமைகளையும் எதிர்நோக்கிய பிரச்சினைகளும், வர்க்க பாகுபாடும் தமிழ் பேசும் மக்களும்" எனும் தலைப்பின் கீழ் மலையக மக்கள், இசுலாமிய மக்கள்,பெண்கள், மாணவர் இளைஞர் ஆகிய உட் தலைப்பிலும், தொழிற் சங்க அமைப்பின் சாத்தியம், போராட்டத்தில் கலை இலக்கியம், தேசிய இனப் போராட்ட நிலை, இலங்கை-இந்திய ஒப்பந்தமும் எதிர்காலமும் எனும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இப்பொருள்கள் பற்றி பல்வேறு அறிவுத் துறையைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற கருத்தரங்குகள் முன்கூட்டியே ஆய்வு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு, அவற்றில் பதியப்பட்ட கருத்துக்கள் திட்ட பிரகடன மாநாட்டில் பரீசீலித்து விவாதிகப்பட்டன.ஆய்வு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இவ்வகைக் குழுநிலை விவாதக் கருத்தரங்குகளில் சபாஜெயராசா, சண்முகதாஸ், செம்பியன் செல்வன், நீர்வை பொன்னையன், அண்ணாமலை, சிவா சுப்ரமணியம், குகதாசன், ஐ.தி. சம்பந்தன், இரா.சிவச்சந்திரன், திருமதி. சிவச்சந்திரன், சண்முகலிங்கம்,பேராசிரியர் சிவத்தம்பி, கலாநிதி சோ. கிருஸ்ணராஜா, பேராசிரியர் பாலகிருஸ்னன், நேசன், எம்.ஏ.நுமான், இக்பால், திவகலாலா, சுந்தர், பார்வதி கந்தசாமி, செல்வி சுமங்கலா கைலாசபதி, திருமதி கைலாசபதி, செல்வி நாளாயினி, செல்வி அருந்ததி, பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.

ஈரோசின் 5வது திட்ட பிரகடன மாநாடு 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 20 ம் திகதி வரை நடைபெற்றது. இந்த திட்டப்பிரகடன மாநாட்டில் மலையகம், அம்பாறை, மட்டு நகர், மூதூர், திருமலை, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் என பகுதி வாரியாக அதுவரைக்காலமும் நடைபெற்ற இயக்க செயற்பாடுகள் விமர்சனத்திற்கு ட்படுத்தப்பட்டன. 

இந்த திட்டப் பிரகடன மாநாட்டிற்கு ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அப்போதைய வெளிநாட்டுக் கிளைகளிலிருந்து முறையே சிங்கம், குகன், அழகிரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். திட்டப் பிரகடன மாநாட்டில் 'அமைப்பின் உறுப்பினர்களும் அமைப்பும் அது வரை வர்க்கச் சார்பற்ற சமூகப் பிரதிநிதிகளால் சூழப்பெற்றதாக இருந்தமைக்கு சுயப் பொறுப்பேற்றுக் கொண்டு இனி வர்க்கச் சார்பு நிலைக்கு மாற வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதனை உரைத்து புதிய அணுகுமுறை தெளிவுபடுத்தப்பட்டது. 

அத்தகைய சுயவிமர்சனத்தின் மூலம், போர்க் குணாம்சத்தோடு கூடிய மலையகத் தோட்டத் தொழிலாளர்களே போராட்டத்தின் முன்னணி சக்தி என்றும், வடக்கு கிழக்கில் விவசாயத்துறை சார்ந்த கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்து, நிலவுடமையாளர்pன் மறைமுக ஒடுக்கு முறைக்குட்பட்டு, தொழில் வாய்ப்புக்களுக்காக இடத்துக்கிடம் மாறி கிராமத்தன்மையோடு பரந்து பட்டு வாழும் இவர்கள் போராட்டத்தின் மறைமுக சக்தி என்றும், இனப்பிரச்சினைகளிலும்,வர்க்கப் பிரச்சனைகளிலும் நிகழ்வுறும் போராட்டத்திற்கு ஆதரவு நல்கிடும் இளைஞர்கள் குட்டிமுதலாளித்துவ பகுதியிலிருந்து வருபவர்கள். குடாநாட்டிலும் ஏனைய நகர்புறங்களிலும் வாழும் இந்த இளைஞர்கள் போராட்டத்தின் ஆதரவு சக்தி என்றும் பிரகடனபடுத்தியது.

போராட்டத்திற்குரிய முன்னணி சக்தி, மறைமுக சக்தி, ஆதரவு சக்தி எனும் மூவகையினருடைய பிரதிநிதிகளையும் ஈழப்புரட்சி அமைப்பு செயல்படும் சக்தியாக தன்னுள் இணைத்து இளைஞர் இயக்கமாக இருந்த ஈரோஸ் மக்கள் இயக்கமாக தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் என்றும் அறிவித்தது.

தமிழ் மக்களின் பாராம்பரிய பிரதேசத்தில் நில அபகரிப்பு நோக்கில் கேந்திரத்தன்மை பார்த்து நிறுவப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தமிழ் பேசும் மக்களின் பிரதானப் பிரச்சினையாக முன்மொழிவது, தமிழ்பேசும் மக்களை வலுவிழக்கச் செய்யும் நடைமுறைகளைக் கையாளும், சிங்கள மேலாதிக்கச் சக்திகளையே பொது எதிரியாக இனங்காட்டுவது என்று அரசியல் கொள்கை நிலையை ஈரோஸ் எடுத்துரைத்தது. பெருந்தோட்டப் பொருளாதாரம் கிராமியப் பொருளாதாரம், நகர்ப்புறப் பொருளாதாரம் என்று பொருளியல் கட்டமைப்பை வகைப்படுத்தி பெருந்தோட்டப் பொருளாதாரம் நிலவும் மலையகப் பகுதிகள் போராட்டத் தளமாகவும், கிராமியப் பொருளாதாரம் நிலவும் வடக்கு கிழக்குப் பகுதிகள் ஆதரவுத்தளமாகவும், நகர்ப்புற பொருளாதாரத்தைச் சார்ந்த பகுதிகள்  தேசிய  அரசியலை  கையாளும் புலமாகவும் கருதிச் செயல்படும் கொள்கை அரசியலை ஈழப்புரட்சி அமைப்பு முன்வைத்தது. சமத்துவ சமதர்ம ஆட்சி முறை கொண்ட கட்டமைப்பே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வாகவும் இந்தத் தீர்வை அடைய பல படி நிலைப் போராட்ட முன்னெடுப்புக்களையும் ஈரோஸ் அறிவித்தது.வடக்குக் கிழக்கில் அரசியல் அதிகாரத்தை கையாளுவதன் மூலம் மலையக மக்களின் ஆதரவுத் தளத்தை அமைத்தல், வடக்கு கிழக்கு மலையக இணைப்பிற்குரிய உள்ளகக் கட்டமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு வகை செய்தல் என்ற படி நிலை போராட்ட அறிவிப்பையும் முன்வைத்தது.

மாநாட்டிற்கு பிரதிநிதிகளாக வந்தவர்கள் 'ஈழப் புரட்சி அமைப்ப முன்மொழியும் கொள்கை கோட்பாடுகளுக்கும், செயல் திட்டங்களுக்கும் அவற்றுக்கான அமைப்பு வடிவத்திற்கும் திரிகரண சுத்தியாய் இருப்பேன் என்றும் அதன் முடிவுகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் உளப் பூர்வமாக ஏற்பேன் என்றும் ஈழப் புரட்சி  அமைப்பின் பணிகளை ஆற்றும் தோழராக உங்கள் முன்னிலையில் உறுதி ஏற்கிறேன்" எனும் உறுதி மொழிகளை ஏற்றனர்.ஈழப்புரட்சி அமைப்பின் நிறுவனர் தோழர் இ.இரத்தினசபாபதி முதன் முதலில் உறுதி மொழி ஏற்றார். உறுதி மொழி ஏற்ற ஏனைய பிரதிநிதிகளுக்கு மாநாட்டுப் பதக்கங்களை இரத்தின சபாபதி அணிவித்தார்.

அதனை தொடர்ந்து புதிய முப்பது பேர் கொண்ட பொதுக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. கொள்கைத் தீர்மானம் ஆகிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பு கொண்டதாக புதிய பொதுக் குழு விளங்கும்.பொதுக் குழுவிலிருந்து ஒரு நிறைவேற்றுச் செயலாளர் உட்பட 11 பேர் கொண்ட மத்தியக் குழுவும் தேர்வு செய்யப்படும் எனும் அறிவிப்போடு மாநாடு நிறைவு பெற்றது. ஆம்! அன்று நடந்த வெற்றிகர மாநாடு அன்று போல் இன்றும் எமக்கு சில வரிகளை உரக்க ஒலிக்க செய்கிறது.
  
பிரம்மாண்டமான உலகங்களை உனது தியாகத்திலிருந்து எழுப்புகிறாய். கொடியை ஏற்று அறைகூவல் விட்டு அது பறக்கட்டும் !
11:50 PM

சுன்னாகம் - இலக்கு வைக்கப்படும் வலிகாமம்

by , in
இனிவரும் காலங்களில் ஏனைய நாடுகளை அடிமைபடுத்துவதற்கான ஏகாதிபத்தியத்தின் பிரதான ஆயுதமாக தண்ணீர் பயன்படுத்தப்படும் என்று சிலகாலங்களுக்கு முன்பே அறிஞர்கள் எதிர்வு கூறியிருந்தார்கள். அன்று இப்படியெல்லாம் நடக்குமா என்று எள்ளி நகையாடியாவர்கள் இன்று அப்படி நடந்து விடுமோ என்று அச்சம் கொண்டிருக்கின்றார்கள். 2015 ஆம் ஆண்டு 3 பில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த தண்ணீர் பிரச்சினையை பயன்படுத்தி ஏகாதிபத்திய நாடுகள் இலகுவாக அந்த நாடுகளில் தலையிடலாம். இதற்கேற்ப உலகின் ஏகாதிபத்திய தரகு வங்கியான உலகவங்கி மக்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதிலிருந்து அரசுக்கள் விலகி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றது. 

தண்ணீர் மனித வாழ்வுக்கும் சமூக இருப்பிற்கும் அடிப்படையான விடயமாகும். அதன் காரணமாக தான் உலக நாகரீகங்கள் எல்லாம் நதிக்கரையோரங்களில் தோன்றின. சிறிலங்காவை பொறுத்த வரையில் கூட புராதன குடியேற்றங்கள் அனைத்தும் நதிக்கரையோரங்களிலே தோன்றின.

இத்தைகய தனிநபர் வாழ்க்கைக்கும் சமூக இருப்புக்கும் வலுவான ஆதாரமாக காணப்படும் தண்ணீரை சிங்கள சோவனிச பேரினவாத அரசு தமிழ் பேசும் மக்களின் உடைமைப்பாட்டு போராட்டத்தை நசுக்கும் ஆயுதமாக கையிலெடுத்துள்ளது. ஏலவே, தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பிற்கு உணவை இவர்கள் ஆயுதமாக பயன் படுத்தியதை உலகமறியும்.தமிழ் பேசும் மக்களின் உடைமைப்பாட்டு போராட்டத்தை சகல வழிகளிலும் நசுக்கி அடக்கி தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்தி முழுத்தீவையும் சிங்களவர்களின் உடைமையாக்கிட கங்கணம் கட்டி செயற்படும், சிறிலங்கா அரசு, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வை வழங்குவதை காலம் தாழ்த்தியே  வருகிறது. அவர்கள் காலம் தாழ்த்துவதன் அல்லது ஒன்றுக்கும் உதவாத தீர்வுத்திட்டங்களை முன்வைப்பதின் பின்னால் அவர்கள் முன்வைக்கும் உண்மையான தீர்வுதிட்டம் மறைந்துள்ளது. தமிழ்  மக்களின் உடைமைப்பாட்டு கோரிக்கைக்கு ஆதாரமாக இருக்கும் பாராம்பரிய வாழ்விட பிரதேசத்தையும், குடித்தொகை செறிவையும் சீர்குழைத்து சிங்களவர்களை குடியமர்த்தி, உமைப்பாட்டு கோரிக்கையை அழித்தொழிப்பதின் மூலமும், தமிழர்களை சிங்களவர்களுடன் இணங்கி வாழவேண்டிய  எதிர்க்க முடியாத வாழ்வியல் சூழலிற்குள் தள்ளிவிடுதன் மூலமும் சிங்கள பௌத்த ஐக்கிய இலங்கையே அவர்களின் மறைமுக தீர்வுதிட்டம். தமிழ் பேசும் மக்களின் உடைமைப்பாட்டு போராட்டத்தை பொறுத்தவரையில் யாழ்ப்பாண மாவட்டம் விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாத கேந்திர நிலையமாக இன்று வரை காணப்படுகிறது. ஏனைய பிரதேசங்களிளெல்லாம் இலகுவாக குடியேற்றங்களை செய்து வரும் அரசால், யாழ்பாணத்தில சிங்கள் குடியேற்றங்களை செய்வதும், குடியேற்றம்செய்யப்பட்டவர்களை தொடர்ந்தும் அங்கே நிலைக்க செய்வதும் பெரிதும் சிரமத்திற்குரிய விடயமாகவே இருக்கின்றது. யாழ்பாண மக்களின் சமூக,பொருளாதார வாழ்வியல் அம்சங்கள் அதற்கு பிரதான காரணமாகும். யாழ்பாணத்தில் ஏற்படுத்தும் குடித்தொகை சிதைப்பு தமிழர் போராட்டத்தை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கை என்பதை உணர்ந்துள்ள அரசு, அதற்கமைவாக தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பத்து லட்சம் மக்களை 2030 ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தி என்ற போர்வையில் குடியமர்த்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியுள்ளது. எனினும் மிக இறுக்கமான காணி ஒழுங்கமைப்பை கொண்டுள்ள வெறும் 1024 சதுரகிலோமீற்றர் பரப்பளவு கொண்ட பிரதேசத்தில் இதனை செய்வது கடினமான விடயமாகும். கைத்தொழில் அபிவிருத்திக்காகவும், குடியேற்றங்களிற்காகவும் காணிகளை உறுதிசெய்திடும், கையகப் படுத்திடும் வகையில் இராணுவ முகாம்களை அமைத்து தொடர்ந்து அரசு காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதில் முக்கியமாக பிரதேசம் வலிகாமமாகும். இங்கு தான் யாழ்பாணத்தின் நிலத்தடி நீர்வளம் நிறைந்துள்ளது.



இந்த வலிகாமம் பிரதேசத்தில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் காணிகளை ஆக்கிரமித்துள்ள அரசால், அதை தக்க வைப்பதும், மேலும் காணிகளை சுவீகரிப்பதும்  மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் சற்று கடினமான விடமே ஆகும். இந்த நோக்கத்தில் தான் அரசு யாழ்பாண இளைய சமூகம் வெளி நாடுகளுக்கு புலம்பெயர்வதை மறைமுகமாக ஊக்குவித்து வந்தது. எனினும் தற்போது அதற்கான உத்தியாக குடிநீரை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றது.

சுன்னாகம் பகுதியில் நோர்த்தன் பவர் நிறுவனத்தால் நிலத்தடி நீர் மாசுப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் இந்த பின்னனியிலேயே நடத்தப்பட்டுள்ளது. நோர்த்தன் பவர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட முன்பும் அந்த பகுதியில் எண்ணை கழிவுகளை கொண்ட பாரிய கிணறுகள் இருந்துள்ளமை செயற்கை கோள் படங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த கிணறுகளிற்கு தற்போது எண்ண நடந்தது என்று தெரியவில்லை.

மேலும்;,கடல் மட்டத்திலிருந்து 15 கிலோமீற்றருக்கு தொலைவில் அமைந்துள்ள எந்த பிரதேசத்தையும் கொண்டிராத, நிலத்தடி நீரை மாத்திரமே ஒரே நீர் மூலமாக கொண்டுள்ள யாழ்பாணத்தில், நிலத்தடி நீரை மாசப்படுத்தினால் அது எத்தகைய விளைவை தரும் என்பதை அறியாதவர்கள் அல்ல நோர்த்தன் பவர் நிறுவனத்தினர். அதனை விட எண்ணைக் கழிவுகளை நிலத்தில் கலந்துவிடுவதை விட விற்பனை செய்வதின் மூலம் அதிக இலாபத்தையும் ஈட்ட முடியும். நிலைமை இவ்வாறு இருக்க எண்ணை நிலத்தடி நீரில் கலந்தின் பின்னால் அரசின் சதிதிட்டம் இருப்பது ஊர்ஜிதமாகிறது.


வலிகாம பகுதியில் அரசு ஏற்படுத்திவரும் கட்டுமானங்கள் குறித்து விளக்கும் செய்மதி படங்கள் (நன்றி - கூகிள்)




சுன்னாகத்தில் ஆரம்பித்த இந்த எண்ணை கலப்பு இன்று முழு வலிகாமம் பிரதேசத்தையும் ஆக்கிரமித்து வருகிறது. சீதன நடைமுறை மூலம் காணியுரிமை தக்கவைக்கப்படும் வழக்கம் கொண்ட யாழ்பாண சமூகத்தில் இந்த எண்ணை கலப்பு விவகாரம் முக்கிய பிரச்சினையாகியுள்ளது. தற்போதும் கூட சீதனமாக சுன்னாகம் பிரதேசத்தில் காணிகளை பெற்றுக்கொள்ள பலர் தயக்கம் காட்டி வருகின்றமையை அவதானிக்க கூடிய தாகவிருக்கிறது. நிலைமை இப்படியே தொடருமானால், பெண் பிள்ளைகளுக்கு சீதனம் கொடுப்பதற்காக ஒன்றில் காணிகளை விற்க நேரிடும் அல்லது காணிச்சீதனம் வாங்காத வெளிநாட்டு மாப்பிள்ளைகளை தேட வேண்டும். இது நடந்தால் ஒரு தலைமுறையே வழரைவாக புலம் பெயரும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காணிகளை அரசு பொறுப்பேற்கலாம் அல்லது பினாமிகளைக் கொண்டு கொள்வனவு செய்யலாம். இதுவே அரசின் எதிர்ப்பார்ப்பாகும்.

இதே போன்ற ஒரு நடவடிக்கையே இரத்தினபுரி காவத்தை பிரதேசத்திலும் நடத்தப்பட்டது. காவத்தை பிரதேசத்தில் தொடர்ச்சியாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் காரணமின்றி கொலை செய்யப்பட்டார்கள். தொடர் கொலைகள் ஏற்படுத்திய பீதியினாலும், பெண்களை தனியாக விட்டு செல்ல முடியாத அச்சத்தினாலும் பலர் காணிகளை விற்று விட்டு வேறு இடங்கள் நோக்கி சென்றனர். இவற்றின் பின்னால் இருந்த விடயம், அப்பகுதி இலங்கையின் மாணிக்கல் அதிகம் காணப்படும் இடம் என்பதேயாகும். இந்த காணிகளை சிலர் சுவீகரிப்பதற்காகவும் மக்களை வெளியேற செய்வதற்காகவும் நடத்தப்பட்ட மோசடி திட்டமே காவத்தை கொலைகள் ஆகும். இது போன்ற ஒரு மிலேச்சத்தனமான திட்டமே வலிகாமத்திலும் நடத்தப்படுகிறது.

இந்த உண்மையை புரியமாலும், தெரிந்தும் மூடிமறைத்தும், வெறும் சுத்தமான குடிநீரை மட்டும் கோரி போராடுவதானது, அரசின் மறைமுக திட்டத்திற்கு ஆதரவளிக்கும் ஒன்றே ஆகும். குடிநீரை ஆயுதமாக பயன்படுத்தி தேசிய அந்தஸ்த்தை அழிக்க நினைக்கும் அரசின் சதியை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தும் போராட்டமே இந்த விடயத்தில் நிரந்தர தீர்வையும், பாதுகாப்பையும் பெற்று தரும். இந்த போராட்டத்தின் மூலமே வலிகாமம் மக்களின் இருப்பை தக்கவைக்க முடியும் என்பதோடு குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வை பெற முடியும். 

இதனை தவிர்த்து குடிநீரிற்காக மாத்திரம் போராடுவோம் ஆயின் அது இந்த விடயத்தில் மையபிரச்சினையில் இருந்து விலகி செல்வதாகவே இருக்கும். அத்துடன் சர்வதேச தண்ணீர் வியாபார முதலாளிகள் நுழைய இடம் ஏற்படுத்தி கொடுப்பதாகவே அதன் முடிவும் அமையும். இந்த பிரச்சினையில் கருவியாக இருக்கும் நோர்த்தன் பவர் நிறுவனத்துடன் இலங்கையை போர்குற்ற விசாரனையிலிருந்து காப்பாற்ற அயராது உழைக்கும் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் தேவா உட்பட, முக்கிய அரசியல் வாதிகளின் நெருங்கிய உறவினர்கள், நிதி   உதவியாளர்கள், வியாபார புள்ளிகள் தொடர்பு பட்டிருக்கும் நிலையில் இந்த பிரச்சினையில் உண்மையை அரங்கிற்கு கொண்டு வர உண்மையான மக்கள் சக்தியின் போராட்டம் மூலமே முடியுமானதாகவிருக்கும்.

இந்த பிரச்சினையில் பின்னாலிருக்கும் பேரினவாதமும், ஏகாதிபத்திய தரகுகளும் அவர்களின் கைக்கூலி ஊடகங்களும் உண்மையை திசைதிருப்பும் வகையில் இதனை குடிநீர் பிரச்சினையாக்கி தற்காலிக தீர்வை தந்து ஏமாற்றும் வகையில், போராட்டங்களை நடத்தியும், ஏற்பாடு செய்தும் ஊக்குவித்தும் வருகின்றனர். எனவே மக்கள் இந்த பிரச்சினையில் தெளிவடைவதோடு, அதன் தீவிரத்தை உணர்ந்து எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

Post Top Ad

My Instagram