Post Top Ad

PB பொருளாதாரம் - வரியும் மறைமுக (கொள்ளை) வரியும்

சிறிலங்காவின் வரவு – செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விட்டது. மீண்டும் அனைவரும் தலையை பீய்த்து கொள்ளும் காலம் வந்தும் விட்டது. அத்தியாவசிய பொருட்கள் முதல்
கொண்டு ஆடம்பர பொருட்கள் வரை ( மகிந்தவின் புதல்வர்கள் பயன்படுத்தும் பொருட்களை தவிர்த்து) அனைத்தினதும் விலை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சேவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு விலை அதிகரிப்பதன் காரணத்தை யாராலும் இலகுவாக விளங்கபடுத்த முடிவதில்லை. பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பொருளாதார விமர்சகர்களும் திணறி கொண்டிருக்கும் அதே வேளை முதல்முறையாக தேசிய ஆதன வரிகள் ஆணையகத்தின் ஆணையாளரும் குழம்பி நிற்கின்றார். இந்த நெருக்கடியின் உண்மையான காரணம்; நிதி அமைச்சின் செயலாளர் PB ஜெயசுந்தரவிற்கு மாத்திரமே வெளிச்சம். சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் இருக்கும் பொருளாதார முறையை கொண்டுசெல்லும் தத்துவாசிரியர் இவர் தான் என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை.

ஜே. ஆர் யின் ஆட்சிக்கு பின் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நால்வரும் தராளமய முதலாளித்துவ பொருளாதார கொள்கையையே முன்னெடுத்தனர். 80 களின் நடுபகுதியிலேயே முன்பிருந்த வெகுசன நலன்புரி அரசை நாசம் செய்து , தராளமய பொருளாதாரத்திற்கான பருப்பொருளியல் நிலைமைகளை உருவாக்கியவர் ஜயவர்தன ஆவார். அதற்கான அடிப்படை மூலோபாயங்களை உருவாக்கியது சர்வதேச நாணய நிதியமே ஆகும். 
தனவந்தர்களிடமிருந்து வசூலிக்கும் வருமான வரியை படிபடியாக குறைத்து முழு சமூக பொருளாதாரத்திற்கும் உரித்தான மறைமுக (கொள்ளை) வரி முறையை (படிபடியாக அதிகரிக்கும் வகையில்) அறிமுகபடுத்தி அரசினதும் நலன்புரிசேவைகளுக்குமான செலவீனங்களை பொதுமக்கள் மீது சமமாக சுமத்தி, தனவந்தர்களின் 'மூலதனத்தை' பாதுகாப்பதே சர்வதேச நாணயநிதியம் படிபடியாக நடைமுறைபடுத்திவரும் பருப்பொருளியல் கோட்பாடாகும். இதன் மூலம் தனவந்தர்களிடம் சேரும் மூலதனம் மீண்டும் முதலீடு செய்யபடும் என்பதும் அதனால் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என்பதுவுமே இதற்கான நியாயப்படுத்தல் ஆகும். அல்லது இதனையே நியதிகளாக கொண்டுள்ளனர் பொருளாதார கொள்கை வகுப்பாளர்கள். இதனை PB ஜெயசுந்தரவும் நடைமுறைக்கு கொண்டுவருகிறார். இன்று நடைமுறையில் இருக்கும் பொருளாதார கொள்கையை Pடீ பொருளாதாரம் என்றதற்கு இதுவே காரணம்.

ஆனால் நடப்பதோ வேறு....

சமூகத்திற்காக வறியவர்கள் செலவிட வேண்டிய தொகை மேலும் மேலும் அதிகரிக்கின்றது. இது வறியவர்களை மேலும் மேலும் வரியவர்களாக்கும் விடயமாகும். மறைமுக (கொள்ளை)  வரி என்பது வறியவர்களுக்காக அரசு செலவு செய்யும் தொகையை அவர்களிடமிருந்தே அறவிடும் தேசபற்று முறைமையாகும். வடமகாண சபை என்ன, தமீழீழ சுயாட்சி வழங்கப்பட்டாலும் முதலாளித்துவ அரசுக்களால் இந்த கொள்கை தான் நடைமுறைபடுத்தப்படும்.

தனவந்தர்களுக்கு வருமானமாக கிடைக்கும் தொகை பெரியது என்பதாலும் அதனுடன் ஒப்பிடும் போது அறவிடப்படும் வருமான வரி மிக குறைவு என்பதாலும் அவர்களுக்கு கிடைக்கும் வரி சலுகைகள் மற்றும் இன்ன பிற சலுகைகளினாலும் அவர்களின் நிதி மூலங்கள் மறைக்கப்படுகின்றன. கறுப்பு பணம் உருவாவது இந்த யதார்த்த நிலைக்குள் தான்.  இந்த கறுப்பு பணங்கள் நாட்டிற்குள் முதலீடு செய்யப்படுவதற்கு பதிலாக வரி சலுகை கிடைக்கும் வரியிலிருந்து தப்பிக்க கூடிய இடங்களை நோக்கி நகர்த்தப்படுகின்றன. இதனால் முதலீடுகள் குறைவடையும். குறைவடைந்த முதலீடுகளின் காரணமாக அரசிற்கு கடன் வாங்க வேண்டிய நிலையேற்ப்படுகிறது. வாங்கிய கடனை செலுத்த மேலும் மேலும் மறைமுக (கொள்ளை) வரி அதிகரிக்கப்படுகிறது. இந்த பொருளாதார நிலைமையில் வருமானம் குறைவடைவதோடு வேலையின்மையும் அதிகரிக்கின்றது. பருப்பொருளியல் திட்டமிடலில் எதிர்;பார்க்கப்பட்ட அனுமானங்கள் பிழையானதாகும். இந்த பிழையான அனுமானங்களினால் சமூகம் அராஜக நிலை நோக்கி செல்லும். குற்றச் செயல்கள அதிகரிக்கும். கொள்ளையும் ஊழலும் அதிகரிக்கும். ஆனால் சிலர் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


பருப்பொருளியல் விக்கி பீடியா விளக்கம்

பருப்பொருளியல் (Macroeconomics) என்பது, பொருளியலின் ஒரு பிரிவு. இது நாடுசார் அல்லது மண்டலம்சார் பொருளாதாரச் செயற்பாடு, கட்டமைப்பு, நடத்தை ஆகியவற்றுடன் தொடர்புள்ளது.நுண்பொருளியலும், இதுவும் பொருளியலின் இரு பெரும் பிரிவுகளாகும். பருப்பொருளியல், மொத்த உள்நாட்டு உற்பத்தி,வேலையின்மை வீதம்விலைச் சுட்டெண் போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம், முழுப் பொருளாதாரமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. தேசிய வருமானம்விளைவுநுகர்வுவேலையின்மைபணவீக்கம்,சேமிப்புமுதலீடுபன்னாட்டு வணிகம்பன்னாட்டு நிதியம்போன்றவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் மாதிரிகளை பருப்பொருளியலாளர்கள் உருவாக்குகின்றனர். மாறாக நுண்பொருளியலில், நிறுவனங்கள், நுகர்வோர் போன்ற தனிக் காரணிகளின் செயற்பாடுகளும், எவ்வாறு அவற்றின் நடத்தைகள் குறிப்பிட்ட சந்தையில் காணும் விலைகள், அளவு என்பவற்றைக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் ஆய்வு செய்யப்படுகின்றது.


Post Top Ad

My Instagram