Post Top Ad

இடது சாரிகள் என்றால் யார்?

சிறிலங்காவில் அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் இளையவர்கள் பலருக்கு இடதுசாரி என்றால் என்ன என்று தெரிவதில்லை. வரலாற்று கதைகளின் அடிப்படையில் இடதுசாரிகள்  என்ற சொல் 'ஹெகலின் தத்துவஞானத்தை' விமர்த்தவர்களுக்கும், அதனை ஏற்று கொண்டவர்களுக்கும் இடையில் நடந்த விவாதங்;ளினிடையே உருவாகியது.

ஹெகலின் தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இடதுசாரியானார்கள். மறு பிரிவினர் வலதுசாரிகள் ஆனார்கள். அதன் அர்த்தமானது பெரும்பலானவர்கள் பின்பற்றிய கொள்கையை வழிதொடரலும் அதற்கெதிரான மாற்றத்தை முன்மொழிதலும் ஆகும். உதாரணமாக அநேகமாக மனிதர்கள் உணவு உண்பது வலது கரத்தால் ஆகும். இடதுகையால் உணவு உண்பவர்கன் அபூர்வமாக சிலரே ஆகும். அரசியலை புதிய வடிவில் சிந்தித்தவர்கள் இடதுசாரிகள் ஆனார்கள், பழைமைவாத முறையில் சிந்தித்தவர்கள் வலதுசாரிகள் ஆனார்கள். இடதுசாரிகள் எனப்படுபவர்கள் எப்போதும் சிறுபான்மையினர் தான். 

சிறிலங்காவில் இடதுசாரி என்பதற்கு மூன்று வகையான அர்த்தங்கள் இருக்கின்றன. 

1-மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் - அதாவது சமூக மாற்றுத்தை நோக்கமாக கொண்டவர்கள்.

2-மாற்றம் ஏற்படுத்தும் வழி முறையாக மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள். முதலாளித்துவத்தை வீழ்த்தும் விஞ்ஞானமாக மார்க்சியம் இருப்பதே இதற்கு காரணம். இலாபத்தை நோக்கமாக கொண்ட உற்பத்திகள் மாதிரிகள் முதலாளித்துவம் ஆகும்.

3-தனிசொத்துடமை குறித்த விமர்சனம். இங்கு மக்களின் சொத்துக்களுடனான உறவை மாற்றி அமைப்பதன் மூலம் சமூகத்தை மாற்றுவது கருத்தில் கொள்ளப்படுகிறது, இங்கு பொதுமக்களின் கருத்துக்கள் கருத்துக்களுக்கு இடமில்லை. உண்மையில் இது பாசிசவாதமாகும்.

Post Top Ad

My Instagram