Post Top Ad

நவீனத்துவமும் சிறிலங்கா சமூகமும்

நவீனத்துவம் என்றால் என்ன?

ஐரோப்பாவில் தேவாலய ங்களின், மதத்தின் ஆதிக்கத்தில் அகப்பட்டிருந்த மக்கள் புதிய சிந்தனை நோக்கி பயணித்த புதுமலர்ச்சி காலத்திலேயே நவீனத்துவத்தின் ஆரம்ப நிலவரங்கள் கருவுற்றிருக்க வேண்டும். அதுவரை மத நம்பிக்கைகளில் ஆட்கொள்ளப்பட்டிருந்த மனிதன்
அதிலிருந்து விடுதலையாகி, நம்பிக்கைகள் அல்லது தெய்வங்களிற்கு பதிலாக காரணிகளை அடிப்படையாக கொண்ட சிந்தனை நோக்கி சென்றான். இதுவே நவீனத்துவ பார்வை ஆகும். நவீனத்துவம் வெளிப்பட்ட விதத்தினை பல தளங்களிலும் முன்வைக்கலாம். 


கல்வியில் நவீனத்துவம்
தேவாலயங்கள் நிர்வகித்த பள்ளிக்கூடங்களிற்கு பதிலாக அரசால் நிர்வகிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களில் லௌகீக கருத்துக்களை கற்பித்தமை மூலமே கல்வியில் நவீனத்துவம் வெளிபடுத்தப்பட்டது.

குடும்பத்தினுள் நவீனத்துவம்
கிராமிய குடும்பங்களின் காலத்தில், தந்தை குடும்பத்தை தன் கட்டுபாட்டின் கீழ் தக்கவைக்க அல்லது தனக்கு கீழ்படிவுள்ளதாக நடத்த தன் செல்வத்தையும் சக்தியையும் பயன்படுத்தினார். நகரங்கள் உருவாகிய பின்னர் அந்நகரங்களை அடிப்படையாக கொண்டெழுந்த குடும்பங்களில் தந்தை குடும்பத்தை தன் கட்டுபாட்டின் கீழ் தக்கவைக்க அல்லது தனக்கு கீழ்படிவுள்ளதாக நடத்த உரையாடலையே பாவித்தார். குடும்ப பிரச்சினைகளை லௌகீகமான  முறையில் தீர்ப்பதற்கு முயன்றார்.

நவீனத்துவம் உருப்பெற்ற அரசியல் சமூக பின்புலம்

மேற்கத்தைய சமூகங்களில்
கைத்தொழில் புரட்சியின் போதே நவீனத்துவம் உருபெற்றது. கைத்தொழில் மயமாக்கலுடன் பாரிய அளவில் உற்பத்திகள் ஆரம்பித்த போது நகரங்கள் உருவாகின. இதன் விளைவாக மனித வாழ்க்கை என்பது கடந்த காலம் என சிந்தித்தது மாற்றமடைந்து அதிலிருந்து விடுப்பட்டு மனிதவாழ்க்கை என்பது எதிர்காலம் என்று சிந்திக்கும் போக்கு உருவாகியது. நவீனத்துவத்தின் பிரதான கோசமாகவிருந்ததும் இதுவே ஆகும்.

சிறிலங்காவில் நவீனத்துவம்
போர்த்துகேயர்களின் வருகையுடன் நவீனத்துவம் சிறிலங்காவில் உள்நுழைந்தது. செயிலான் என்ற சொல்லை அறிமுகபடுத்தியதும் போர்த்துகேயர்கள் தான். போர்த்துகேயர் வசித்த கடற்கரை பிரதேசங்களிலிருந்து நாட்டின் உட்பிரதேசத்திற்கு சென்று வரும் போது செயிலானுக்கு போய் வருகின்றோம் என்றே கூறினார்கள். இந்த செயிலான் என்பது தான் பின் சிலோன் ஆனது. அந்த வகையில் மாற்றமுடியாத இறைவழிப்பாட்டு மனோபாவத்தை கொண்டிருந்த சிறிலங்கா மக்களினுள் நவீனத்துவத்தை நுழைத்து இயற்கையுடன் பிணைக்கப்பட்டிருந்த எமது வாழ்வை சீர்குலைத்தது மேலைத்தேய நாட்டு மக்களே ஆவர். இவ்விடத்தில் தான் சிறிலங்காவின் நவீனத்துவம் ஆரம்பமாகின்றது. இவ் மேலைத்தேயர்கள் கற்றுகொடுத்த வரலாற்றை மீள எழுதல் போன்ற போதனா முறைகளை  பயன்படுத்தி தான் சிறிலங்காவின் கடந்த கால பெருமைகள் கூட கட்டமைக்கப்பட்டன. அவையொன்றும் இந்த நாட்டுகாரர்களின் புரிதலுடன் நடக்கவில்லை. அதாவது சிறிலங்காவின் வரலாறு என்று தற்போது கூறபடுபவை எல்லாம் ஏதோ ஒரு வகையில் மேலைநாட்டினரின் வழிகாட்டல்களில் தான் எழுதப்பட்டன. இந்தியாவில் இப்படியான நிலை இல்லாதிருக்கலாம். ஆனால் சிறிலங்காவில் அவ்வாறு இல்லை. எந்த ஒரு இனமும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் தன் வரலாறை சரிவர தெரிந்து கொள்ள வேண்டும். கட்டுகதைகளையும் கற்பனை சம்பவங்களையும் வரலாறாக கொண்டால் மேலைத்தேயத்திடம் அடிபணிவதை தவிர வேறு வழியில்லை.

Post Top Ad

My Instagram