Post Top Ad

பின்நவீனத்துவ நிலவரங்களும் பின் நவீனவாதமும்

வடகிழக்கில் புலிகள் இயக்கத்தின் கட்டுபாட்டிலிருந்த, புலிகள் இயக்கத்தின் ஆதிக்கம் நிலவிய பிரேதேசங்களை தவிர்த்து பெருந்தோட்டங்கள் உட்பட்ட நாட்டின் சகல பகுதிகளும் பின் நவீனத்துவ நிலவரங்களின் ஆளுகைக்கு உட்பட்ட அந்நிலவரங்களில் முகிழ்ந்த பகுதிகளாகும்.

பின் நவீனத்துவ நிலவரங்கள் - Post Modern Condition

முதலாளித்துவ முறைமை என்பது பண்டங்களை சமூகத்திற்கு அறிமுக படுத்தி விற்பதினை நோக்கமாக கொண்ட முறையாகும். இதனையே இறுதியாக மூலதனம் என்கின்றோம். இதன்படி முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் சந்தை கட்டயாயமான தொடர்புகளை கொண்டுள்ளது.


விற்பனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையாகவிட்டால் அவை மிகை உற்பத்தி எனப்படும். இந்நிலைமையானது மூலதனம் பெருக்கமடைவதற்கு தடையான ஒன்றாகும். 1970  காலபகுதிகளில் குறிப்பாக ஐரோப்பாவிலும் , அமெரிக்காவிலும் மென்மேலும் உழைப்பின் விலையை குறைப்பதன் மூலம் ( உழைப்பிற்கான விலையே சம்பளம் ஆகும்) பண்டங்களின் விலையை குறைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.  இந்நிலைமைக்கு முன் முதலாளி வர்க்கமானது உழைப்பின் அளவை குறைத்தல் (இயந்திரங்களை பயன்படுத்தி), சம்பளத்தினை குறைத்தல் மூலம் தன் போட்டியாளர்களை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வந்தது.  இந்நெருக்கடி நிலைமைக்குள் பொருட்களின் விலையை குறைப்பதற்கு உற்பத்தி செய்யும் இடங்களை மாற்றம் செய்தல் எனும் ஒரு வழிதான் எஞ்சியது. அதன் காரணமாகவே தொழிற்சாலைகள் மலேசியா, கொரியா போன்ற நாடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ( அதாவது உற்பத்தி நடவடிக்கை நாடு கடத்தப்பட்டது). இதுவே மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பின்நவீனத்துவ நிலை அல்லது பின்நவீனத்துவம் என அறிமுகமாகின்றது.

பின்நவீனதுவவாதம் - Post Modernism

மேற்குறிப்பிட்ட விதத்தில் உலகமயமாக்கம் என கூறப்படும், மூலதனத்தை தன் நாட்டிற்குள் பெருக்கி கொள்வதற்கு ஏற்பட்ட தடையினால் தொழிற்சாலைகளை வேறுநாடுகளுக்கு கொண்டு சென்ற நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக, சமூகங்களில் பண்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. அல்லது வேறு வடிவங்களில் கட்டமைக்கப்பட்டன. பண்பாட்டில் ஏற்பட்ட இந்த ஒர் மாற்றங்களை ஒழுங்குமுறையில் முறையாக விளக்குவது அல்லது விளங்கி கொள்வது பின்நவீனத்துவவாதம் ஆகும்.

உற்பத்தி உலகமயமாக்கப்பட்டதுடன் மேலைத்தேய நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் தோல்வியடைய ஆரம்பித்தன. வேறுநாடுகளில் பொருள் உற்பத்தி செய்யப்பட்டு அந்நாடுகளுக்கு கொண்டு வரப்படுவதால் வேலை நிறுத்தங்களில் எவ்வித பலனும் இல்லாது போயின. மெய்யிலாளர்கள் இந்தநிலையை தொழிற்சங்க அரசியலின் தோல்வியாக வர்ணித்தனர். நிலைமைகளை இவ்வாறு விளங்கி கொள்வதே பின்நவீனத்துவாதம் ஆகும். காரணம் அதுவரை சாதகமான பலன்களை தந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் இந்நிலைமைக்குள் மென்மேலும் பலனற்றதாகிய ஒன்றானது. 

பின்நவீனத்துவம் - Post Modernity

மேற்குறித்த தோல்வி நிலை ஏற்பட்டதின் பின், சம்பள அதிகரித்தல், வாழ்க்கை தரத்தை உயர்வடைய செய்தல், குடும்பத்தை முன்னேற்றுதல் போன்ற விடங்களில் தொழிலாளர் வர்க்கத்திற்கு அதுகுறித்த உலக நோக்கு அல்லது கருத்தியல் அல்லது கோட்பாடு இல்லாத நிலை ஏற்ப்பட்டது. இவ்வாறு ஒர் கோட்பாடு அற்ற நிலைக்குள் அவர்களின் வாழ்க்கை புது வடிவில் ஒழுங்கமைக்கப்படுவது ஆரம்பமாகியது. இந்த நிலைமையே பின்நவீனத்துவம் என அடையாளப்படுத்தப்படுகிறது.

பின்நவீனத்துவவாதிகள்

ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து வரும் போது அது நல்ல நீர் என்று அதில் மூழ்கிட கூடாது. அதிலிருந்து வெளியேறி தப்பிக்கவே முயற்சிக்க வேண்டும். நம்மவர்கள் பின்நவீனத்துவவாதம் என்பது ஒர் தத்துவஞானம் என்றும் அத்துறையில் தத்துவஞானிகள் இருக்கின்றார்கள் என்றும், அதனை கோட்பாடாக பின்பற்ற வேண்டும் என்றும் நினைப்பவர்கள் இருக்கின்றனர். இது முற்றிலும் பிழையான சிந்தனையாகும். மேற்கத்தைய நாடுகளில் பின்நவீனத்துவம் குறித்து கதைத்த யாரும் பின்நவீனத்துவவாதிகள் அல்லர். 
உதாரணமாக தத்துவஞானியான கௌதம புத்தர் எனப்படும் சித்தார்த்தன் தான் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் ஆசைகளின் பின்னால் மனிதர்கள் சென்று சீரழிந்தமையினால், ஆசைகளிலிருந்து விடுப்படுவது எவ்வாறு என தெளிவுபடுத்தினார், அது போல உறவுகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றமானது பொருட்களுக்கிடையிலான தொடர்புகளாக மனித உறவுகள் சீரழிந்தமை, ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்தி வரும் மாற்றம் மனித சமூகத்தை இழிவின் விளிம்பிற்கே அழைத்து செல்லும் விதத்தை வெளிப்படுத்தல் பின்நவீனத்துவவாதம் ஆகும்.

லியோர்தாத் போன்ற பிரான்சிய சிந்தனையாளர்கள் மேற்குறிப்பிட்டது போன்றவர்களே. ஆனால் ஒருபோதும் இவர்கள் பின்நவீனத்துவவாதிகள் இல்லை. நவீனவாதிகள் இருந்தாலும், பின்நவீனத்துவவாதிகள் என யாரும் இருக்க முடியாது. பின்நவீனத்துவம் என்பது சகலதும் இல்லாது போகும் நிலையாகும். பலருக்கு இன்று நண்பர்கள் இருப்பது செல்போன் இருப்பதால், கார் இருப்பதால். அதுவும் உண்மையான நட்பு இல்லை. பல நட்புக்கள் சேர்ந்து குடிப்பதற்காக தான். இவ்வாறான நிலைமைகளை விளங்கி கொள்ளும் நிலையே பின்நவீனத்துவம் ஆகும். முதலில் இதனை விளங்கி கொள்ள வேண்டும். அதன் பின் இதிலிருந்து வெளிவரும் நடவடிக்கைகளில் எம்மை ஈடுபடுத்திட வேண்டும். அதற்காகவே பின் நவீனத்துவம் குறித்து பகுப்பாய்வு செய்தல் வேண்டும், அவ்வாறு செய்பவர்களை நாம் பின்நவீனத்துவவாதி என குறிப்பிட முடியாது.

Post Top Ad

My Instagram