Post Top Ad

அமெரிக்காவை ஆட்சி செய்வது யார் ?

அநேகமான தமிழ் இணையத் தளங்கள் அமெரிக்க அரசாங்கம் ஸ்தம்பிம்பித்தது தொடர்பான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டடிருந்தன. ஆனால் அதற்கான காரணங்களை அவர்கள் வெளியிடவில்லை. சிறிலங்காவை போலவே
அமெரிக்காவிலும் வெவ்வேறு வர்த்தக பெரும்புள்ளிகள் குறிப்பிட்டளவு உறுப்பினர்களை பாரளுமன்றத்திற்கு அனுப்புகின்றார்கள். இம்முறை அமெரிக்காவின் பெடரல் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தனியார் காப்புறுதி நிறுவனங்களின் நிதியில் தேர்தல் வெற்றிகளை பெற்றுகொண்டவர்களே ஆகும்.இவர்களின் நோக்கம் அமெரிக்காவின் வறிய மக்களை உள்வாங்கும் தேசிய சுகாதார காப்புறுதி திட்டம் செயற்படுத்தபடுவதை தமாதமாக்குவதாகும். 

சில முட்டாள்களுக்கு ஏற்ற வகையில் இவ்விதம் நாட்டை ஆட்சி செய்பவர்கள் வேறுயாருமல்ல, சனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட் மக்கள் பிரதிநிதிகள் ஆவர். அந்த மக்கள் பிரதிநிதிகளை வழிநடத்துபவர்கள் வர்த்தக பெரும் புள்ளிகளாகும். இந்த வெள்ளை நிற தோல் கொண்டவர்களை தெரிவு செய்வது வீடுகளில் தொடர்நாடகம் பார்க்கும் மத்தியவகுப்பு பெண்களாக இருக்கலாம், ஆனால் இந்த வெள்ளை நிற தோல்காரர்களை முதலாவதாக இவர்களுக்கு தெரிவு செய்து தருவது வர்த்தக பெரும் புள்ளிகளாவர். இதேபோல் சிறிலங்காவில்  மக்கள் உண்மையாக மகிந்த சிந்தனைகளுக்கு அடிவருடிகளாகவில்லை, மகிந்த சிந்தனையை வழிநடத்தும் மூலதன உரிமையை கொண்ட வியாபாரிகளுக்கே அடிவருடிகளாகியுள்ளனர், ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், வாக்களிக்கும் போது மறந்து விடுவதே (நாம் செயல்பாட்டிற்கு வரும் இடத்தில்) பிரச்சினைக்குரியதாகும். பொதுமக்கள் அரசில் செய்வதற்கு நிதி உதவி அளிப்பதில்லை என்பதால், அது வியாபாரிகளிடமிருந்து பெறப்படுகிறது.

Post Top Ad

My Instagram