Post Top Ad

காணி, பொலிஸ் அதிகாரங்களை சிங்களவர்கள் மறுப்பது ஏன்?

சிறிலங்காவில் நிலம் மீதான உரிமையானது தனியார் காணிகள், அரச காணிகள் என இரண்டு விதமாக அமைகிறது. இவ்வாறு உரிமை கொண்டாடப்படும் நிலமானது தற்போதைய நிலையில் சிறிலங்காவில் ஆத்மார்த்த ரீதியாக எவ்வித தூய்மை தன்மையும் அற்றது  என்பதை அனைவரும் தெளிவாக அறிவார்கள்.

நிலம் தொடர்பான முதலாளிதுவ பெறுமதி

சிறிலங்காவில் இன்றைய நிலையில் சிங்களவர்ளை பொறுத்தவரை நிலமானது சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் ஓர் நுகர்வு பண்டமாகும். இதனை சிங்கள சமூகத்தினை சேர்ந்தவர்கள் மிகநன்றாக அறிவார்கள்;. மக்கள் அவசர தேவைகளின் போது தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்கின்றார்கள் அல்லது வேறு ஒருவருக்கு அவசர தேவைகள் ஏற்படும் போது அவருக்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலையில் வாங்குகின்றார்கள். சில நேரங்களில் எமக்கு சொந்தமான நிலத்தை வங்கியில் அடகு வைப்பதன் மூலம் கிடைக்கும் மூலதனத்தினை கொண்டு அக்காணியில் வீடு கட்டி கொண்டு, பின்னர் வாங்கிய வங்கி கடனை தவனை முறையில் சிறிது சிறிதாக அடைக்கின்றார்கள்.

அரசிற்கு சொந்தமான நிலங்களை பொறுத்தவரை அபிவிருத்தி செய்யப்பட்ட நிலங்கள், மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுபவர்களால், அவ்வப்போது அவர்களுக்கு நெருங்கியவர்களுக்கு, அவர்களுக்கு தேவைப்பட்டவர்களுக்கு, வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, வரவு செலவு திட்டத்தில் வரவின் பக்கத்தில் சேர்க்கப்படுகிறது. இன்று அத்துடன் நின்று விடாது சிறிலங்காவின் நிலங்கள் அதே மக்கள் பிரதிநிதிகளால் வெளிநாட்டினருக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நான் மேற்குறிப்பிட்ட விடயங்களை என்னை விட சிறிலங்காவின் சிங்கள பௌத்தர்கள் நன்கு அறிவார்கள். அவர்களில் சிங்கள தேசியவாதத்தின் தத்துவார்த ஆசான்களான நலிந்த சில்வாவும் குணதாச அமரசேகரவும் மிக நன்றாக அறிவார்கள். தெளிவாக கூறினால் சிறிலங்காவின்; சிங்கள சமூகத்தினை பொறுத்தவரையில், நிலம் என்பது பணத்திற்கு விற்பனை செய்யப்படும் பொருளாகும்;. அப்பொருள் வெறும் பரிவர்த்தனை குணாம்சங்களை மாத்திரமே கொண்டிருக்கிறது. இன்றைய சிங்களவர்கள் நிலம் தொடர்பாக ஆத்மார்த்த தூய்மையான உணர்வுகளை கொண்டவர்கள் அல்ல. அவர்களை பொறுத்தவரை நிலம் என்பது விற்பனை செய்யக்கூடிய, பரிமாற்றம் செய்துகொள்ளக் கூடிய பத்தோடு பதினொன்றாய் அமைந்த பரிமாற்று பண்டமாகும். அந்த உணர்வு எத்தகையது என்றால், சிறிலங்காவின் இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சூழலிற்கு ஏற்படும் ஆபத்துக்களை கருத்திலெடுக்காமல், உல்லாச விடுதிகள் அமைப்பது தொடர்பாக இங்கு எந்த சிங்களவர்களுக்கும் பிரச்சினை உருவாக்குவது கூட இல்லை. கொழும்பில் சூழலியல் தொடர்பாக செயலமர்வுகளை நடத்தும் மத்தியதரவர்க்கத்தினர் கூட, பாசிக்குடா கடற்கரையில் அமைந்திருக்கும் 'மாலு மாலு' உல்லாச விடுதிக்கு சென்று அந்த கடற்கரை பிரதேசத்தினை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாது மாசுப்படுத்தி களிப்படைகின்றனர். இந்த இரட்டைவேடம் தொடர்பாக எந்த சிங்களவர்களுக்கும் பிரச்சினைகள் எழுவதும் இல்லை. 

பொலிஸ் தொடர்பான பொதுமக்களிள் பார்வை

சிறிலங்கா பொலிசானது அரச நிறுவனங்களிலே அதிகபடியான ஊழல் துஷ;பிரயோகத்திற்கு உள்ளான நிறுவனமாகும். பொலிசிலே தற்போது நேர்மையான அதிகாரிகள் என்று எவருமில்லை. சிறிலங்காவில் நாளாந்த வாழ்க்கையில் பொலிசார் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரிகளாக அன்றி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடம் வழங்குபவர்களாகவே செயற்படுகின்றனர். 

இரவு வேளைகளில் தண்டபண புத்தகத்துடன் சந்திகளில் காத்திருக்கும் பொலிசார் ஒரு போதும் சட்டத்தை நிலைநாட்ட காத்திருப்பதில்லை. இந்த பொலிசுகாரர்கள் பொதுவாக இரண்டு விதமான வேலைகளை செய்கின்றார்கள். 

முதலாவது சட்டத்தை மீறுவதற்கு இடமளித்து அதில் இலாபத்தை பெற்றுகொள்கின்றார்கள் அல்லது தான் சட்டத்தை மீறுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் நன்மையடைகின்றவர்களிடம் அதற்கான கப்பத்தை பெற்று கொள்கின்றார்கள். 

இரண்டாவது, பொலிஸ் என்பது சட்டத்தை பாதுகாக்கும் அல்லது சட்டத்தை மதிக்கும் பிரசைகளை உருவாக்கும் நிறுவனம் அல்ல, 'மூலதனத்தை' சேகரிக்கும் வாளிகளாகும். பொலிசார் அரசிற்காகவும், தனக்காகவும் செல்வத்தை சேகரிக்கின்றார்கள். இதற்கு மேலதிகமாக ஏனையவர்களை துன்புறுத்துவது மூலம் இன்பமடைந்தும் கொள்கின்றார்கள்(sadism).

மேற்குறிப்பிட்ட விடயத்தினையும் என்னை விட நாட்டின் சிங்கள பௌத்தர்கள் நன்கு அறிவார்கள். குறிப்பாக நலிந்த சில்வாவும், குணதாச அமரசேகரவும் நன்கு அறிவார்கள். தெளிவாக கூறினால் பொலிசானது ஊழல் துஷ;பிரயோகம் நிறைந்த, அடக்கியாளும், மற்றவர்களின் சிற்றின்பங்களுக்கு எதிரான நிறுவனமாகும். அதில் எந்த அதிகாரியும்  ஆத்மார்த்த உணர்வுடன் பணியாற்றுவதில்லை. சட்டபுத்தகங்களிலில் இருப்பது போல் வடகிழக்கிற்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் போது அந்த கட்டமைப்புக்கள் தெற்கில் தொழிற்படுவது போன்றே அங்கும் தொழிற்படும். சிறிது காலத்தில் வடகிழக்கின் நிலங்கள் விற்பனை பண்டமாவதோடு, பொலிசானது (தமிழ் பொலிஸ்) சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதாக அமையாது மற்றவர்களுக்கு துன்பம் தரும் ஓன்றாக அமையும்.

வடகிழக்கிற்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படுவதை பேரினவாதிகள் எதிர்ப்பதேன்?

இதனை விளங்கி கொள்ள புறவய உண்மைகளை (objective)  கொண்டு ஆய்வு செய்வதினால் பிரச்சினை தீரபோவதில்லை. மாறாக பிரச்சினை பலமடங்காக அதிகரிப்பதே நடக்கும். அதனை விடகாணி பொலிஸ் அதிகாரம் தொடர்பான எமது புறநிலைஉண்மை (objective)   சார் விமர்சனங்கள் எம்மை யதார்த்திலிருந்து வெளிநோக்கியே அழைத்து செல்லும். மனிதன் இனவாதியாவது புறநிலை(objective) காரணிகளால் அல்ல அகநிலை (subjective) எதிர்மறை அச்சம் காரணமாகவே ஆகும். ( சம்பிரதாய மார்க்சிசமும் (பின்நவீனத்திற்கு முற்பட்ட மார்க்சியத்தை சம்பிரதாய மார்க்சியம் என குறிக்கின்றேன்) சம்பிரதாய லிபரலிசமும்  எப்பொழுதும் புறநிலை(objective)  அடிப்படையிலே இதனை விளக்க முயற்சிக்கின்றன. உதாரணமாக இனவாதம் ஏகபோக மூலதனம் காரணமாகவே உருபெறுகிறது, மதம் அரசிலிருந்து பிரிக்கபட முடியாதாகவிருப்பதால் அரசு இனவாத கட்டமைப்பாகும் என்பன போன்ற சம்பிரதாய மார்க்சிய கோட்பாடுகளை குறிப்பிடலாம்)

இறுதியாக...

சமகால உலகமய முதலாளித்துவத்தினுள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக மனிதர்கள் தங்கள் சமூக வாழ்வியல் அனுபவங்கள் ஊடாக அறிந்து வைத்திருக்கும் விடயமொன்றுள்ளது. நடக்கும் நிகழ்வுகளையும் சம்பவங்களையும் பார்க்கும் போது காணி, பொலிஸ் அதிகாரங்கள் மனிதனின் சுதந்திரத்தினை விரிவுபடுத்துவதற்கு மாறாக மட்டுபடுத்துகின்றது. இவ் சமூக உண்மைநிலைகள் மூலம் பெற்ற அனுபவம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் கணத்தில் சகலதும் தலைகீழாகும். சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ் மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்க்கின்றார்கள். உண்மையில் அது இதுவரை தீர்க்கப்படாத அரசியல் பிரச்சினையாகும். சிங்கள நனவிலியானது (unconscious) காணி, பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது என்பது தாம் அனுபவிக்கும் வினோதத்தை (enjoyinment) தன்னிலிருந்து பறிப்பதாக கொள்கிறது. 

யதார்த்த சமூக நடைமுறைக்குள் கிடைக்காது என்று நன்கு தெரிந்த ஒன்று நடைமுறை உலகில் கிடைக்கும் என்று மனிதர்கள் சிந்திப்பதேன்?

மனிதன் ஏதேனுமொரு மாய்மாலத்தில் சிக்கிகொள்வது தொடர்பான மார்க்சிய அடிப்படையை  
 ( நுகர்வுபொருட்களின் இரட்டை தன்மை) கருத்திற்கொள்ளும் பேர்து பெறக்கூடிய 'மனிதர்கள் ஒன்றை பற்றி; அறியார்கள், ஆனால் அதனையே அவர்கள் செய்கின்றார்கள்' (உதாரணம் - கிறிஸ்துவை சிலுவை அணிந்து ஆணியறையும் ரோம் நகர சிப்பாய்கள் தான் செய்வது என்னவென்பதை அறியார்கள், ஆனால் அதனை அவர்கள் செய்கின்றார்கள்) எனும் சூத்திரத்தின் படி மாய்மாலமானது, விளங்கி கொள்ளும் தன்மையிலோ அல்லது விளங்கா தன்மையிலோ அல்ல சமூக உண்மைநிலையிலே (Social Reality தொழிற்படுகிறது எனும் முடிவிற்கு வர முடியும். சுருக்கமாக சொல்வதானால் மனிதர்கள் ஒன்றை அறியமாலிருக்கும் நிலையில் அவர்களை முட்டாளாக்கி விட முடியாது, அவர்கள் செயல்களை முன்னெடுக்கும்(doing) போது தான் அவர்களை முட்டாள்களாக்கிட முடியும். உண்மையில் மனிதர்கள் சமூக உண்மை நிலைமைக்குள்ளிருந்தவாறே அறியாமையில் சிக்கி கொள்கின்றார்கள்.

   சமூக நடைமுறையில் நாம் இலகுவாக தவிர்த்துவிடும் காரணியொன்றை பின்வருமாரு முன்வைக்கலாம். மனிதன் ஏதேனும் ஒன்றை சமூக உண்மைநிலை என கரும் போது மாய்மாலத்தலில் சிக்கிகொள்கின்றான். ஒன்றை குறித்த அறிவானது நடைமுறைக்கு வரும் போது அவன் மாய்மாலத்திலிருந்து வெளிவர முடியும். ஆகவே சம்பிரதாய மார்க்சிச கொள்கைக்கமைய மனிதன் செயற்படும் போது அது குறித்து அறியாமல் செயற்படுகின்றான் என்று நினைப்பது ஓர் அனுமானமாக உண்மையாகும். பொதுவாக நோக்கினால் மேற்குறித்த காரணிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.

1) சமூக உண்மைநிலையை கட்டமைப்பாக்கும் மாய்மாலம்.
2) மேற்குறித்த மாய்மாலம் நனவிலி என்பதால் எமது பிரக்ஞை அதனை தோற்றபாடாக அறியாமை.

மாயை குறித்த சம்பிரதாய மார்க்சிச கருத்துகளை நோக்கினால் தற்போது நாம் வாழும் சமூகத்தை 'பின் - மாய்மால' சமூகம் என்றே பெயரிட வேண்டும். ஆனாலும் சமகால சமூகத்தில் பிறர் எமக்கு மாய்மாலமாவது  தெரிந்த காரணத்தினாலே வாழ முடிகிறது, 'பின் - மாய்மால' சமூகத்தில் வாழும் மனிதனின் போலி பிரக்ஞையை cynicism என்றே குறிப்பிட முடியும். ஏனைய மனிதர்கள் 'உண்மை' என்று கருதும் விடயங்களை சமூக வாழ்க்கைக்குள் நாம் 'பொய்' என்று காண்கின்றோம். ஆனால் மேற்குறிப்பிட்ட அனுமானங்களின் மூலம் நாம் வாழ்வது பின்- கருத்தியல் சமூகம்(post ideological Society) என்று அர்த்தபடுத்த முடியாது.

ஒருவர் கூறும் கூறும் விடயங்களை சர்வசாதாரணமாக புறந்தள்ளுவதன் (உதாரணம் - முகபுத்தக பின்னூட்டம் ஊடாக) மூலம் கருத்தியல் உலகிலிருந்து எம்மால் ஒதுங்கிட  முடியாது. கருத்தியல் மாயையில் நாம் அகப்படுவது 'சிந்திக்கும் போது' அல்ல 'செயற்படும் போதே' ஆகும். கருத்தியலுடன் இருக்கும் எமது இந்திரிய பிணைப்பு நிலைப்படுத்தபடுவது பிரக்ஞையால் அல்ல நனவிலி நிலையாலே ஆகும். இவ் நிபந்தனைக்குட்பட்ட வெளித்தன்மையை பின்வருமாரு விவரணபடுத்தலாம்.

மேலும் சம்பிரதாய மார்க்கசியத்திலிருந்து வேறுபட்டதான சமகால சமூக கருத்தியல் இயங்கும் விதத்தை வரைவிலக்கனபடுத்திட முடியும். 'மனிதர்கள் செயல்களை மேற்கொள்ளும் போது என்ன செய்கின்றோம் என்பதை நன்கு அறிந்தே செய்கின்றார்கள், நன்கு அறிந்திருந்தும் அதனையே செய்கின்றார்கள்' (அவர்கள் ஒரு மாயைக்குள் இருந்து இயங்குவதனை அவர்கள் அறிவார்கள். ஆனாலும் அந்த மாயைக்குள்ளிருந்து விடுபடாமைக்கு அவர்கள் எதிர்பார்க்கும் பிரதிபலனே ( வினோதம் -enjoyinment) காரணம். உதாரணமாக தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கின்றதா என கேள்வி எழுப்பி, வருந்தும் வகையில் கட்டுரை எழுதும் புத்திசீவிகள், அவர்களின் அறிவிற்கு எட்டிய வரை, அவர்கள் செய்வது இரண்டாம் தரமான செயல் என்பதை நன்கு அறிவார்கள். ஆனாலும், தாங்கள் எழுதும் கட்டுரை செய்திதாள்களில் பிரசுரமானால் (அதனை யாரும் வாசிக்கா விடினும் கூட) சமூக நிலைமைகளை புரட்டி போட முடியும் என்பது அவர்களின் நனவிலி  மனச்சிந்தனையாகும். அதற்காக அவர்கள் எதிர்பார்க்கும் பிரதிபலன் (வினோதம்-enjoyinment) நனவிலி சமூக அங்ககீகாரம் ஆகும். தன்னிடமிருந்து பறிபோன வினோதத்தை(enjoyinment)  மீளபெற நரம்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் இதேபோலவே சேர்த்தல் விலத்தல்களை செய்வார்கள். ஆகவே நாம் இந்த விடயத்தில் இதற்குள் அடங்கியிருக்கும் அதீத வினோதம் (enjoyinment)  குறித்தே அவதானம் செலுத்த வேண்டும். 
சுருக்கமாக சொல்வதென்றால் சகல சிறந்த சிங்கள பௌத்தர்களும் நன்கு அறிந்த வகையில் காணி, பொலிஸ் அதிகாரம்  என்பது மேலும் ஆத்மார்த்த உணர்விற்கு அல்லது நல்லாட்சிக்கு உரித்தான கருவிகள் இல்லை . அவை ஆத்மார்த்த ரீதியில் தூய்மையற்றது. உண்மையில் இவ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்குவதால் மேலதிகமாக எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை என்பதுடன் சிங்கள மக்களுக்கு நடந்ததே எதிர்காலத்தில் நடக்கப்போகின்றது. ஆனால் இந்த புரிதலிற்கு முரணாக சிங்களவர்கள் செயற்படும் போது அவர்களுக்கு கிடைக்காத வினோதம் தமிழ் மக்களுக்கு கிடைத்துவிடும் என்று நம்புகின்றார்கள். இந்த நம்பிக்கை நனவிலி நிலையில் உருபெருவதாகும். நாம் சிந்திக்கும் போது அறிவு எமக்கு வழிக்காட்டியாகவிருப்பினும் செயற்படும் போது எமக்கு வழிகாட்டுவது மாய்மாலம் ஆகும். இந்த கண்காட்சிக்குள் தமிழர்களுக்கு எப்படியிருப்பினும் சிங்களவர்களுக்கு காணி பொலிஸ் அதிகாரம் என்பது கருத்தியல் ரீதியாக உயர்  சிறப்பு வாய்ந்த வஸ்துக்களாக தெரிகின்றன. அவை உண்மைகளை பாதிக்காமல் இருப்பது இதனால் தான். தமிழர்களின் ஆழ்ந்த விருப்ப புதிருக்கு சிங்களவர்களின் பதில் அந்த ஆசை குறித்து எங்களுக்கு சந்தேகம் இருக்கின்றது எனபதாகும்.

Post Top Ad

My Instagram