Post Top Ad

ஈழவர்கள் மீதான திட்டமிட்ட குடித்தொகை அழிப்பு முறைகள்

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சிங்களக் குடியேற்றப் பிரச்சினை நீண்ட காலமாக உணரப்பட்ட ஒன்று. ஆயினும் ,தனை குடியேற்றப் பிரச்சினை,என்று வெறுமனே  இரு  சொற்களின்   சேர்க்கையாகப்   பார்த்து, கட்சி அரசியல் வாதிகளைப் போல் மேடை, ஊடக பிரசங்கமுடன் முடிக்கப்பட வேண்டிய விடயமல்ல.  மாறாக, அதன் பரிமாணங்களைப் பகுத்துப் பார்த்து, எவ்வளவு தூரம் இது பரந்திருக்கின்றதென்பதையும் அதன்  ஆணி  வேரையும்   அறிந்து கொள்ள வேண்டியது இன்றைய கால கட்டத்தில் அவசியமானதாகும். இதுவே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் முதற்படியாக அமையும். 

சிறிலங்காவில் ஆட்சி புரிந்து வந்ததும், வருவதுமான அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் சீரழித்து செல்லும் ,இச் சமூக கட்டமைப்பை பாதுகாத்து வளர்க்க வேண்டுமென்ற மனப்பால் பருகியதும் பருகிக்கொண்டிருப்பதும் வழக்கமான நிகழ்வுகள். இந்த அரசாங்க காவலர்கள் இம் முதலாளித்துவ சமூக அமைப்பைப் பாதுகாக்க இனகுரோத நடவடிக்கைகளில் தாராளமாக இறங்கி வருவதும் வெட்ட வெளிச்சமான ஒன்றே. இத்தகைய அவசியத்தை உடைய ,இனக்குரோத நடவடிக்கைகளின் ஒன்று குவிந்த நிலையை நாம் சிங்கள குடியேற்றங்களில் இலகுவாக காணலாம்.

குடியேற்ற முறைகள்

1935 இல் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க கட்சியின் காலத்தில் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் குடியேற்றங்களுக்கான சட்ட பூர்வஅடிக்கல்  நாட்டப்பட்டது.  அப்போதெல்லாம் “விவசாய குடியேற்றம்”  என்ற போர்வை ஒன்றை பயன்படுத்தியே சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆனால்,காலப்போக்கில் தமிழ் பேசுவோர் மீது வசைமாரி பொழிவதிலும், அவர்களை சிங்களவர்களை அழிக்கும் எதிரிகளாக சித்தரித்து அவர்களை அடக்கி ஒடுக்குவதிலும் அழிப்பதிலும் போட்டி போட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள்  குடியேற்றங்களை வேறு வழிமுறைகளில் அமுலாக்க  தொடங்கின. இந்த வளர்ச்சி போக்கை நுணுக்கமாக அணுகும் போது, பிரதானமாக எட்டுவகையான குடியேற்ற நடவடிக்கைகளை கருத்திலெடுக்கலாம்.

1.விவசாய குடியேற்றம்
2.தொழிற்சாலை குடியேற்றம்
3.அரச நிர்வாகிகள் ஊழியர்கள் குடியேற்றம்
4.மீன் பிடிக் குடியேற்றம்
5.மாற்றுப் பயிர்ச் செய்கைத் திட்டக் குடியேற்றம்
6.புனித நகர்த் திட்டம்
7.இராணுவ குடியேற்றம்
8.தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டத்தினூடான குடியேற்றம்

இவை 'தேசத்தின் அபிவிருத்தி" , 'மத பாதுகாப்பு", 'தேசியபாதுகாப்பு" என்ற சொற்பதங்களால் கவசமிடப்  பட்டிருக்க, அவற்றின் உண்மை சொரூபம் தமிழ்பேசும் பாமரர்களினதும், தொழிலாளர்களினதும் பிரதேசங்களை அபகரிப்பதாயும், பௌத்த மத விஸ்தரிப்பை ஏற்படுத்துவதாயும், தமிழ் பேசபவர்களின் குடித்தொகை செறிவை சகல இடங்களிலும் ஜதாக்குவதாகவே அமைந்திருக்கின்றது. அரசாங்கம் குடியேற்றக்காரர்கள் தமிழ் பிரதேசங்களில் நிலை கொண்டிருக்கும் வகையில், போதிய வசதிகளையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவ்வேறுப்பாட்டின் துணையுடன் தனது இலக்கை, தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களினது   எண்ணிக்கையை  அதிகரிப்பதன் மூலமும், அவ்விடங்களிலும்  அதனைச் சூழவும் சிங்கள ஆதிக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமும் அடைய முற்படுகிறது. தற்போது அரச நிர்வாக சேவைக்கான பரீட்சைகளில் கிழக்கு பகுதிகளில் பெருமளவில் சிங்களவர்கள் சித்தியடைய செய்யப்படுவதோடு, தனியார்  தொழில் நிறுவனங்களிலும் பெருமளவில் சிங்களவர்கள் பணிக்கமர்த்தப்படுவதிலும் அரசின் வலுவான கரமும் நிகழ்ச்சி திட்டமும் இருப்பதில் ஆச்சரியமேதும் இல்லை.

விவசாய குடியேற்றம்
நீண்டகாலமாக அமுலில் இருந்து வரும் விவசாயக் குடியேற்ற திட்டங்களில் பிரதானமானவைகளாக மகாவலி, மாதுறு ஓயா, வடமத்திய மகாண ஆற்றுத் தொகுதிகளை உள்ளடக்கிய திட்டம் என்பன உள்ளன. இத்தகைய திட்டங்கள் மூலம் கணிசமான எண்ணிக்கையில் குடியேற்றகாரர்களை கொண்ட கிராமங்களும், கிராமங்கள் இணைந்த பிரதேசங்களும் உருவாக்கப்படும். இப்பிரதேசங்களில் தபாற்கந்தோர், பாடசாலை, பொழுதுபோக்கு மையம், கூட்டுறவுக்கடை, வைத்தியசாலை, உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் ஆகியன அமைத்துக் கொடுக்கப்படும். அத்துடன் இப்பிரதேசங்கள் பெரும் தெருக்களை மருவியும் ஏனைய சிங்கள பகுதிகளுடன் நேரடியாக தொடர்பு படும்படியும், தமிழ் பிரதேசங்களைக் கூறுப்போடும் வகையிலும் திட்டமிட்ட வகையில் அமைந்திருக்கும்.

இத்தகைய திடமான அமைப்புகளிலான குடியேற்றகாரர்கள் அயலில் உள்ள கிராமவாசிகள் மீது ஆதிக்கம் செலுத்து பவர்களாக குறிப்பாக நீர்ப்பாய்ச்சல் ஆதிக்கத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக முப்படையினரது துணையும் கிடைக்கப் பெறுகிறது. மேலும், இவர்களில் சிலர்  சிவில் பாதுகாப்பு பிரிவில் இணைந்து சேவை ஆற்றகின்றார்கள். வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்பவற்றின் மூலம் இந்த குடியேற்ற பிரதேசங்கள் பெருமளவில் அபிவிருத்தி செய்யப்படுவதை காணக் கூடியதாயுள்ளது. குறிப்பாக வவுனியா, திருகோணமலை, அம்பாறை பிரதேசங்களில் இதனை அவதானிக்கலாம். மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் எஞ்சிய பகுதிகள் மேலும் இவ்வாறான பல குடியேற்றங்களுக்கு எதிர்காலத்தில் தடம் போட்டுள்ளன.

தொழிற்சாலைக் குடியேற்றங்கள்.
அரசாங்கங்கள் தொழில் ரீதியாகத் தமிழ் பேசுவோரை ஒதுக்கிச் சிங்களவர்களை ஒங்கச்செய்து வருவதனால் தொழிற்சாலைகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறைந்தளவிலேயே காணப்படுகி றது. இன்று தமிழ் பிரதேசங்களிலுள்ள  தொழிற்சாலைகளில் நிர்வாகிகளும், பெரும்பாலான ஊழியர்களும் சிங்களவர்களே ஆவர். தொழிற்சாலைச் சூழலில் குடும்ப சகிதம் குடியேறி நாளடைவில் நிரந்திரமான சம்பவங்கள் திருகோணமலை, அம்பாறை, மட்டுநகர் மாவட்டங்களில் நிறைய உண்டு. தொழிற்சாலைகளில் சிங்கள நிர்வாகி நியமிக்கப்படுவதின் பின்னனியில் அரசின் ஆதிக்கத்தை ஒங்க செய்யும் நடவடிக்கையே ஆகும்.

மலையக குடியேற்றங்கள்
மலையக பகுதிகளில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் மாற்று பயிர்செய்கை திட்டத்தின் மூலமாகவும், அபிவிருத்தி நடவடிக்கைகளில் காணிகளை இழக்கும்  சிங்களவர்களுக்கு பெரும் அளவில் காணிகளை பகிர்ந்தளிப்பதின் மூலமும் சனத்தொகை பரம்பலில் மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. இந்தக் குடியேற்ங்கள் மலையக பகுதிகளில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதிகள் சிங்கள கிராமங்களினால் சூழப்பட்டிருக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன்    மலையகம் வாழ் தமிழர்களை காணியுரிமை அற்றவர்களாகவே இருத்தி குறுகிய பிரதேசத்தில் சிறிய குடியிருப்புக்களில் அடைத்து வைப்பதுடன், அவர்களை சூழ அமைக்கப்படும் கிராமங்களில் வதியும் சிங்கள மக்கள் சமூக பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும்  இருக்கின்றனர். இவ்வாறான குடியேற்ற முறைகளை அவதானிக்கும் போது மலையக தமிழ்பேசும் மக்கள் சிங்களவர்களால் சுற்றி வளைக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டிருப்பவர்களாகவே இருக்கின்றனர். 

இராணுவ குடியேற்றங்கள்
2009 ஆம் ஆண்டிற்கு பின் அரசாங்கம் இராணுவத்தை வடக்கு கிழக்கில் குடி அமர்த்துவதில் முனைப்பு காட்டி வருகிறது. சாதாரண சிங்கள மக்களை குடியமர்த்துவதை விட இராணுவத்தில் பணியாற்றும் வறிய கிராமத்து இளைஞர்களை குடியமர்த்துவது அரசாங் கங்களில் நோக்கத்திற்கு பல சாதக நிலைமைகளை வழங்குவதோடு, அப்பிர தேசங்களில் தமிழ் மக்களை அடக்கப்பட்ட நிலையில் வைத்திருப்பதிற்கும் துணை நிற்கும். இராணுவத்தில் பணியாற்றும் சிங்கள இளைஞர்கள் வடக்கு கிழக்கில் வாழும் யுவதிகளை திருமணம் செய்வது ஊக்குவிக்கப் படுவதோடு அவ்வாறு திருமணம் செய்பவர்களுக்கு நிதி உதவியும் காணிகளும் வழங்கப் படுகின்றன.

தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டம்
2011 ஆம் ஆண்டு சனாதிபதியின் செயலணியினால் தயாரிக்கபட்ட, அப் போதைய விடய அமைச்சர் விமல் வீரவன்சவினால் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப் பட்ட திட்டமாகும். இத்திட்டம் 2030ம் ஆண்டில் நிறைவு செய்யப்படவிருக்கிறது. இந்த திட்டத்தின் நோக்கம் பூகோள ரீதியில்  இலங்கை பொருளாதாரத்தை அபிவிருத்தி  செய்வதற்காக இலங்கை பௌதீக வளங்களை நெறிபடுத்துவதும் கையாளுதலும் என்பதே கூறப்பட்டிருக்கிறது. நுணுக்கமாக ஆராய்ந்தால், இந்த திட்டத்தின் பின்னால் ஈழவர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் பெரும் திட்டம் இருப்பது அம்பலமாகும். இதுவரையிலான குடித்தொகை சீர்குழைப்பு திட்டங்களை எல்லாம் அருகிலும் நிற்க முடியாத வகையில் பாரிய அளவிளானதாக இந்த திட்டம் அமையப் போகின்றது. இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்கும் வகையில்  வடக்கு கிழக்கில் இராணுவம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டம் விளக்கப்படம்

இங்கு படத்தில் காட்டப்படும் தரவுகளே இந்த திட்டத்தின் சுருக்கமான விபரிப் பாகும். தேசிய வளங்களை அபிவிருத்தி செய்தல் என்ற பெயரில் பெரும் நகரங்களை உருவாக்கி குடியேற்றங்களை செய்வது இதில் பிரதான விடயமாகும். இந்த திட்டத்தின் பெருமளவு பகுதி வடகிழக்கை இலக்கு வைத்திருப்பது நோக்கத்தை தெளிவாக அறியதருகிறது.


பாரிய பிராந்தியங்கள் (metro region


இந்த திட்டத்தில் 5 பாரிய பிராந்தியங்கள் (metro region)  அபிவிருத்தி செய்யப்பட்டு பின்வரும் எண்ணிக்கையில் மக்கள் குடியமர்த்தப்படவுள்ளார்கள்.  


15 நகரங்கள் பாரிய நகர 15 நகரங்கள் பாரிய நகரங்களாக (metro city) அபிவிருத்தி செய்யப்பட்டு பின்வரும் எண்ணிக்கையில் மக்கள் குடியமர்த்தப்படவுள்ளார்கள். 



ஆறு மாநகரங்கள் , பாாிய நகரங்களாக அபிவிருத்தி செய்யப்பட்டு பின்வரும் எண்ணிக்கையில் மக்கள் குடியமர்த்தப்படவுள்ளார்கள். 



மேலும் மாங்குளம் விசேட நோக்கம் கொண்ட நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டு ஆறு இலட்சம் பேர் குடியமர்த்தப்படுவார்கள்.

மேற்குறித்த தகவல்களை அணுகினால், இதுவரை குறிப்பிட்டு வந்த வகைகளில் நடைமுறையில் இருக்கும் குடியேற்றங்கள். தமிழ் பேசுவோரின் வளங்களை அபகரிக்கவும் தேவை ஏற்படும் போது இனக்   கலவரங்களைச் சுலபமாகத்    தூண்டிப்    பொருளாதார நெருக்கடிகளைச்   சமாளிக்கவும் தளமாக அமைகின்றன. இங்கு காட்டப்பட்டிருக்கும்  வரி படங்கள் அவதானிக்கும்  நோக்கும் போது தமிழ்  பிரதேசங்கள், கரையோர குடியேற்றங்களாலும், விவசாய குடியேற்றங்களாலும் சுற்றி வளைத்து நெருக்கப்பட்டு திருகோணமலையினூடாகப் பிளக்கப்பட்டுச் சின்னா பின்னமாக்கப்படுவதை உணர முடிகிறதல்லவா?

எதிர்காலம்

ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இனவாதம் பேசியும், தமிழ் தேசிய இனத்தைப் பல முனைகளிலும் அடக்கி ஒடுக்குவதன் மூலமும் தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி வருகின்றன. முதலாளித்துவ அமைப்பை நிலைத்திருக்கச் செய்ய அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய இனக்குரோத நடவடிக்கைகளின் வரிசையிலேயே சிங்களக் குடியேற்றமும்அமைகிறதெனக் கண்டோம். இதனால் குடியேற்றங்களின் ஆணிவேர் இச்சமூக அமைப்பை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே குடியேற்றங்களுக்கும் முடிவு கட்டுகின்ற முடிவுக்கு வரவேண்டியதாகின்றது. இந்த வகையில் அமைய வேண்டிய குடியேற்றத்திற்கான தீர்வை சீரணிக்க முடியாதவர்கள் யானை பார்த்த குருடர்களே!

நாட்டில் சர்வ வியாபகமாக இருக்கும் தமிழ் -சிங்கள மொழிவாரி அடிபடையிலான இடையறாத உட்பூசல்களை 'முரண் பாடுகளை" கணக்கிலெடுக்கும் போது  இலங்கையில் சமூக மாற்றத்தை முதலில் ஏற்படுத்தும் வல்லமை தமிழ் பேசுவோரிடமே இருக்கின்றதென்பதை வெளிப் படையானதாகும். இதனாலேயே தமிழ் பாட்டாளிகளின் ஈழப் போராட்டம் சிங்கள பாட்டாளிகளின் விமோசனத்திற்கான முதற்படியாக அமையும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram