Post Top Ad

தோழர் சமீர கொஸ்வத்தவின் மே நாள் உரை


'சமவுடமை வாழ்க்கை' என்பதே எமது மே தின தொனி பொருளாகும்.126 வருடங்களுக்கு முன் 8 மணித்தியாள வேலை நேரத்திற்காக போராடி இரத்தம் சிந்திய தொழிலாளர்களின் செங்குருதியினால் சிவப்பாகிய செங்கொடியை தாங்கி நாம் தொழிலாளர் நாளை கொண்டாடி கொண்டிருகின்றோம். அன்று 8 மணித்தியாள வேலை நேரத்திற்கு போராடிய தொழிலாளர்கள் இன்று 16 மணித்தியாளம் வேலை செய்ய தயாராய் இருக்கின்றார்கள். ஒரு மேலதிக கொடுப்பனவு வேலை நேரம் கோருகின்றனர்.
அன்று சுரண்டலுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் இன்று விரும்பி சுரண்டலுக்காக தன்னை அர்பணித்து நிற்கின்றார்கள் . சுரண்டலுக்கு எதிராக போராடிய தொழிலாளர்களை நினைவு கூறும் மே தினத்தை சுரண்டலுக்கு தன்னை பலி கொடுக்க தயாராய் இருக்கும் தொழிலாளர்கள மத்தியிலே கொண்டாடுகின்றோம் . இந்த மாற்றம் நெருக்கடி தொடர்பாக சமூகத்துடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என நினைக்கின்றோம்.  சுரண்டலுக்கு எதிராக போராடிய சர்வேதேச தொழிலாளர் தினம் இன்று மேலும் சுரண்டலுக்கு துணை நின்று எப்படியாயினும் முதலாளித்துவ முறையினுள் தன் இருப்பைதக்க வைக்கும் நிலைக்கு தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளது. இதற்கு தொழிற்சங்கவாதம் தொழிற்சங்கவாதிகள் இடதுசாரி தலைவர்கள் செய்த பெரிய தவறுகாரணமாயிருக்கின்றது. அந்த தவறு எங்கு எப்படி நடந்தது என்று ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்து கொண்டு முன் செல்ல வேண்டியது முக்கியமானது என கருதுகின்றோம். 
இன்று சர்வதேச தொழிலாளர் தினம் பெரும் கூத்தாக மாறியுள்ளது.  அரசியல் பலத்தை காட்டும் கண்காட்சியாக மாறியுள்ளது. ஆகவே சிறிதும் வெட்கம் இல்லாமல் குற்ற உணர்ச்சி இல்லாமல் முதலாளி துவ கட்சிகளுக்கும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி பேருந்துகளில் கூட்டத்தை கொண்டு வந்து நிரப்பி மே தினம் கொண்டாடுகின்றோம் என கூற முடிந்துள்ளது. முதலாளிதுவ அரசாங்கத்திற்கும் அரசியல் வாதிகளுக்கும் மே தினம் கொண்டாடுகின்றோம் என கூற முடிந்துள்ளது. முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் சிறு முதலாளிதுவவாத இனவாத தலைவர்கள்,கட்சிகளுக்கு மே தினம் கொண்டாட கூடியதாக இருக்க காரணம் இடதுசாரிகள் தங்கள் கடமையை செய்வதை கைவிட்டமையே ஆகும். முதலாளித்துவத்தை வீழ்த்துவதை நோக்காக கொண்டு செயற்பட்டிருந்தால்  முதலாளிதுவ கட்சிகள் கண்காட்சி நடத்த ஊடுருவ சந்தர்ப்பம் இருக்காது. இதனை மாற்ற வேண்டி இருக்கின்றது. ஆகவே மே தினத்தில் முதலாளி வர்க்கத்திற்கு குட்டி முதலாளிகளுக்கு இனவாதிகளுக்கு உரிமை இல்லை. உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்கு உழைக்கும் வர்க்கத்திற்கு அந்த ஒடுக்கப்பட்டவர்களை உழைக்கும் வர்க்கத்தினை அறிந்து கொண்ட அவர்களின் வாழ்கையை அறிந்து கொண்ட அதனை மாற்ற நடக்கும் போராட்டத்திற்கே உரித்துடையது உடையது ஆகும். ஆகவே முதலாளித்துவம் எமக்கு வழங்கி இருக்கும் வாழ்க்கை என்ன அதனை மாற்றிட வேண்டுமா என சிந்திப்போம். அன்பிற்குரிய தோழர்களே தோழியர்களே. இன்று முதலாளிதுவத்திற்குள் குழந்தைகள் பிறப்பது பொய் பித்தலாட்டத்துடன் தான்.  பிறப்பு சான்றிதழில் இருந்து பொய் பித்தலாட்டம் ஆரம்பிக்கின்றது. ஏன்? பிறந்த குழந்தையை அனுப்ப முதலாளித்துவ பாடசாலை ஒன்று தேவை.  ஆகவே முதலாளிதுவம் உருவாக்கி தந்துள்ள கனவை நிறைவேற்ற, உருவாக்கியுள்ள போட்டியில் முன்னேற பிறப்பிலிருந்து எம்மாற்ற ஆரம்பிக்கின்றோம். பெற்றோர்கள் முதலாளிதுவத்திற்கு தேவையான மனிதனை உருவாக்க முதலாளித்துவ கனவுகளை தன் குழந்தையிடம் திணிக்கும் நடவடிக்கையை செய்யும் பொறுப்பை சிறப்பாக கையிலெடுத்துள்ளனர்.பிரபல பாடசாலையை தேடுகின்றனர். அங்கிருந்து தான் ஆரம்பிகிறது, அதன் பின் வாழ்கையை தேடி ஓடுகின்றார்கள். போட்டி உருவாக்கப்படுள்ளது, போட்டி இடு போட்டி இடு என்று கூறப்படுகின்றது. அடுத்தவனை முந்தி செல் என்று கூறப்படுகின்றது. எதை செய்தேனும் வெற்றி பெறு என்று கூறப்படுகின்றது, உனக்கு ஒரு கனவு இருக்கிறது அதை அடைய இன்னும் நூற்றுகனகானவர்களின் கனவுகளை சுக்கு நூறாக்கு என்று கற்பிக்கபடுகின்றது. ஆகவே தான் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை உதைத்து தள்ளும் பிள்ளைகள் உருவாகி உள்ளார்கள். வாழ்க்கை ஆரம்பிப்பது இவ்வாறு தான், பிள்ளைகளுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை இது தான். முதலாளிதுவ முறைக்குள் உலகை எதிர்கொள்ள கற்பிப்படுவது இல்லை. முதலாளிதுவத்திற்குள் எப்படி மிலேச்சதனமானவனாக மாறி எப்படி மிலேச்ச முறைய தொடர்ந்து தக்க வைத்து செல்லலாம் என்றே கற்பிக்கப்படுகின்றது. அவ்வாறக அவர்கள் இளமை பருவத்தை அடையும் போது வாழ்க்கை என்று ஒன்று இருப்பதில்லை. ஆனால் கனவுகள் நிறைந்திருக்கும். தன்னை இழந்த தன் அடையாளத்தினை தொலைத்தவனாகின்றான் மனிதன். அவனுக்கு முன்னால் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. இழந்த அடையாளம் அந்த பொருட்களில் தான் இருக்கின்றன அதில் தேடி கொள் என்று கூறப்படுகின்றது. அவ்வாறு கனவுகளை சுமந்து வரும் இளைஞர்களுக்கு அன்பு கிடைப்பதில்லை. மனித உறவுகள் கிடைப்பதில்லை. நாளைய தினம் பாதுக்காப்பனதாக இருபதில்லை. வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி கொள்ள முறை ,நம்பிக்கை இல்லை. இதற்குள் தான் முதலாளித்துவம் பொருட்களை குவித்து வைத்து உன்னை இதற்குள் தேடி கொள் என்று சொல்கிறது. அந்த பொருட்களை  வாங்க போட்டி போடுகின்றார்கள் செய்ய முடிந்த அனைத்து எமாற்றுகளையும் செய்கின்றார்கள். அப்படியே பொருட்களை வாங்கி விட்டாலும் அதிலும் திருப்பதி கிடைப்பதில்லை. இங்கு தான் கனவுகள் நம்பிக்கை விழ ஆரம்பிக்கின்றது.வாழ்க்கை இது அல்ல வேறு என்பது புரிகின்றது. ஆனால் எஞ்சி இருப்பதோ அதிருப்தி நெருக்கடி எதிர்பார்ப்பு தான். ஆகவே இந்த நெருகடியில் சிக்குண்ட மற்றையவரையும் தள்ளி விட தயாராய் இருக்கும் மிருகமாக மனிதன் உருவெடுக்கின்றான். இதில் விரக்கியடைந்த நம்பிக்கை இழந்தவர்கள் தற்கொலை வரை செல்கின்றனர் . இது தான் முதலாளித்துவம் இளையவர்களுக்கு வழங்கி உள்ள வாழ்க்கை. வாழ்க்கைக்கு பதிலாக மரணத்தை தேர்ந்தெடுக்க கட்டாயபடுத்தி உளார்கள் .8 மணித்தியால வேலை நேரத்திற்காக போராடிய அவர்களின் இரத்தத்தினால சிவப்பாகிய கொடியை சுமந்து கொண்டு இவ்விடத்திற்கு வந்தோம். ஆனால் 8 மனித்தியாலத்திற்கு பதிலாக 10 மணித்தியாலம் 12 மணித்தியாலம் ஏன் 16 மணித்தியாலம் வேலை செய்யவும் தயார். ஒரு வேலைக்கு பதிலாக 2 அல்லது 3 வேலை செய்யவும் தயார். சின்ன சின்னவற்றிற்கும் மாற்றீடுகள் செய்யும் நிலை உருவாகியுள்ளது, வேலை தளங்கள் அவ்வாறான ஒன்று தான். பண்டமாற்றம் செய்ய எதுவும் இல்லாதவர்கள் தன்னை விற்கிறார்கள். எதை வேண்டுமானாலும் விற்பனை செய் உன்னை விற்பனை செய் அவ்வாறு செய்து முதலாளித்துவம் வழங்கியுள்ள வாழ்கையை அடைய போட்டி போடு என்று கூறப்பட்டுள்ளது, இதில் முடிவு என்பது இல்லை. அதில் மகிழ்ச்சி இல்லை, சுதந்திரம் இல்லை. அதில் மனித தொடர்புகள் இல்லை.  இந்த முதலாளித்துவம் இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு வரும் பொது மேலும் மிலேச்ச தனமுடையதாகின்றது. சந்தைகள் எல்லா இடமும் இல்லை. தன் உழைப்பை விற்க நகரங்களை நோக்கி போட்டி போட்டு கொண்டு வருகின்றார்கள். உலகில் உள்ள அணைத்து அலங்காரங்களையும் செய்து கொண்டு 2 மணித்தியாலம் பேருந்துகளில் தொங்கி வேலை  தளங்களிற்கு உழைப்பை விற்க வர வேண்டியுள்ளது. இதில் மனித தன்மையை இழந்து மிருகமான மனிதனே இன்று வேலை தளத்தில் இருந்து வீட்டிற்கு செல்கின்றான். சிந்தியுங்கள் இது தான் முதலாளித்துவம் உங்களுக்கு வழங்கி உள்ள வாழ்க்கை.முன்னைய முதலாளித்துவ முறைக்குள் எம் உழைப்பை நாமே நேரடியாக  விற்க கூடியதாக இருந்தது. ஆனால் இன்று அதற்கு இடையில் மேலும் ஒரு பிரிவினர் ஊடுருவி உள்ளனர் அந்த இடைதரகர் தான் மனிதவள(அயn pழறநச) விற்பனை. ஆகவே இந்த முதலாளிதுவத்திற்குள் எல்லாவற்றையும் இடைதரகர் மூலம் தான் செய்ய வேண்டியுள்ளது. அந்த இடை தரகர் ஒன்றில் பொருள் அல்லது செயற்பாடு அல்லது நிறுவனம் ஆகும். இந்த இடைதரகு முறை சுரண்டலை மேலும் மிலேச்ச தனமானதாக்கியுள்ளது. தொழிலில் உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமென்றாலும் வெளியேற்றப்படலாம். 
வாழ்வது எப்படி என்ற பிரச்சனை உள்ளது. எதிர்காலத்திலும் கடனாளியாக இருக்கும் வகையில் கடன் வாங்கி பொருள் வாங்கி உள்ளோம். கனவுகளை அடகு வைத்துள்ளோம் கனவுகளுக்ககா கடன் பட்டு கிடக்கின்றோம். இப்போது தொழிற்சங்கவாதிகள் இடது சாரிகள் என்று கூறி கொள்பவர்கள் இப்போது 100 ரூபாய்க்கு விற்க்க முடியாது ஆகவே 200 ரூபாவிற்கு விற்க போராடுவோம் என்று கூறுகின்றார்கள்.2000 ரூபா சம்பளம் வாங்கினால் போதாது ஆகவே 3000 ரூபா சம்பளத்திற்காக போராடுவோம் எனகிறார்கள். இப்போது இந்த விற்கும் விலையை அதிகரித்து கொள்வதால் நாம் எதிர் கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வு இருக்கின்றதா? சொல்லுங்கள் இந்த நெருக்கடிக்கு விடை இருக்கின்றதா? கூலியை அதிகரித்து கொள்வதால் விடை கிடைகிறதா,? இங்கு நிற்பதில் பலன் இல்லை. சிலர் இதன் மூலம் முதலாளிதுவத்திற்குள் நல்ல வாழ்கையை அமைத்து கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

அடுத்ததாக விவசாய நிலங்களுக்கு செல்வோம். இப்போது மழை பெய்கின்றது அது உங்களுக்கு பிரச்சனை. ஆனால் வயல் நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அதை எப்படி விற்பது என்று திட்டமிடுகின்றார்கள். விவசாயிகளை சுரண்ட வழி தேடுகின்றார்கள் உரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எப்படியாயினும் இராசாயனங்களை பாவித்து அதிக பலன் பெற செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு உற்பத்திகளை விற்ற பின் வாங்கி செல் என்று கனவுகளும் பொருட்களும் குவிக்கப்பட்டுள்ளன.வாங்கி சென்றவற்றால் வாழ்க்கை நடத்த முடியாது. கடன் . கடன் அதிகரித்து அது தற்கொலைகளில் முடிகிறது. ஆகவே இன்று ஒரு ஏக்கர் விவசாயம் செய்பவர்கள் நாளை 2 ஏக்கர் விவசாயம் செய்து எப்படி அதிகம் உழைப்பது என்று திட்டமிடுகின்றார்கள். முதலாளித்துவம் விவசாயிகளுக்கு வழங்கி உள்ள வாழ்க்கை இது தான். விவசாய தோழர்களே இதற்குள் வாழ்க்கை என்பது கிடைக்க போவதில்லை. 
மீனவர்களும் அப்படி தான். கடல் எங்களுடையது என்றாலும் உரிமை கம்பனி காரர்களுக்கு தான் உண்டு. எல்லா ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்கையும் இப்படி தான். வானம் அளவுக்கு வரி அறவிடுகின்றார்கள். மிசார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த பக்கம் மகிந்த  மேடையில் மானியம் தருவதாக கூறினாராம். முதலாளிதுவம் பொருட்களை குவித்துள்ளது. அன்று உரல் மூலம் செய்ததை இன்று மின் உபகரணங்கள் மூலம் செய்கின்றோம் இதனால் எஞ்சும் நேரம் மூலம் எமக்கு ஓய்வு அதிகரித்துள்ளதா? இல்லை. ஏன்? அந்த உபகரணங்களை வாங்குவதற்கு அதிகமான நேரம் எம்மை விற்க வேண்டியுள்ளது. இன்று மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது மனிதனாக அல்லாமல் விகாரமாகமனித தன்மை இழந்து வேலை தளத்தில் இருந்து வரும் அப்பா முன் அறையில் இருந்து சமையலறை வரை முன் குமிழ்களை அணைத்து செல்கின்றார். வாங்கி குவித்த மின் உபகரணங்களின் pடரப பிடுங்கப்பட்டுள்ளது. இன்று இவ்வாறு தான் தனி தனியாக விடை தேடுகின்றார்கள். பாவனையை குறைக்க ஆரம்பித்துள்ளார்கள். அனைத்தையும் முகாமை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். 
தனியாக விடை தேடினால் இது தான் விடை. ஆனால் மாற்றம் வர போவதில்லை. இன்று முதலாளிதுவம் விற்கும் பொருட்களில் பெறுமதி இல்லாதவையாகி உள்ளன. ஆகவே பொருட்களை விற்க போலி பெறுமதிகளை சேர்க்கின்றார்கள். போலி பெயுமதிக்காக பல பெறுமதி சேர் உறைகளில் பொருட்களை பொதி செய்கின்றனர். இவ்வாறு குப்பையை தான் நாம் வீட்டிற்கு கொண்டு வருகிறோம் இவ்வாறு வீட்டிற்கு கொண்டு வரும்  குப்பைகளை வீட்டின் முன் போடுவதா அல்லது மீதொட்டுமுல்லையில் போடுவதா என்ற பிரச்சனை எழுந்துள்ளது. குப்பைகளை கொட்டும் இடத்தை மாற்றுவதால் பிரச்சனை தீர போவதில்லை. எம் வாழ்கையை குப்பையாக்குவது நோய்களை பரப்புவது முதலாளித்துவ முறை தான். ஆகவே விடை முதலாளித்துவத்தை விழ்த்துவதில் தான் இருக்கின்றது. முதலாளித்துவம் தான் நோய்களை உருவாக்கிறது பின் நோய்களை குணமாக்குவதை வியாபாரமாக்குகின்றது. மனிதர்கள் என்ற வகையில் எமக்கு நோய் இன்றி வாழ உரிமை இருக்கின்றது. இதை முதலாளிதுவத்தினால் செய்ய முடியாது. இதன் நல்ல உதராணம் தான் ரஜரட்ட பகுதி விவசாய்கள் சிறுநீரக கற்களால் மரணிக்கும் நிலை. நோய்களை உருவாகும் முதலாளிதுவத்திற்கு பதிலாக நோய் இன்றி வாழும் உரிமை தொடர்பாக சிந்தியுங்கள். இந்த குப்பை வாழ்க்கைக்குல் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருகின்றன. ஆனால் இதனை அடைய வழி வகைகள் இல்லை. நாம் இதை தான் வாழ்க்கையாக ஏற்ற்று கொண்டுள்ளோம் . இதனை தாண்டிய வாழ்க்கை உள்ளதா என்று சிந்தியுங்கள். இந்த தேடலை நாம் செய்ய வில்லை . இது தவறு. இந்த தவறிற்கு தொழிற்சங்கவாதிகள் இடதுசாரிகளுக்கு ஒரு பொறுப்பிருக்கின்றது. ஆனால் அப்படி செய்யாமல் சம்பளத்தை அதிகரித்து கொள்வதால் தீர்வு பெற முடியும் என்று கருதுகின்றார்கள் . இடது சாரிகள் இவ்வாறான நம்பிக்கையை உருவாக்கி உள்ளார்கள் நாம் சம்பளத்தினை  ஒரு பக்கம் அதிகரித்து கொள்ள மறு புறம் முதலாளி வர்க்கம் வரியையும் விலையையும் அதிகரித்து அதை பிடுங்கி கொள்கிறது, சம்பள அதிகரிப்பிற்காக போராட கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் வென்றெடுக்க வேண்டிய எல்லாவற்றையும் இந்த சம்பள அதிகரிபிற்கு மட்டு படுத்தியதை இடதுசாரிகள் செய்தார்கள். முதலாளித்துவ முறைக்குள் விடை இருக்கின்றது என்று தேட ஆரம்பித்துள்ளார்கள். இடதுசாரிகள் முதலாளிதுவத்தை வீழ்த்த போராடுவதை கைவிட்டு இதற்குள் லிபரல் கோசங்களை முன்னெடுத்து விடை தேடுகின்றார்கள். மறு பக்கம் இது தான் வாழ்க்கை என முதலாளித்துவம் தொட்டிலிலே எமக்கு கற்பிக்க ஆரம்பித்து விடுகின்றது. குடும்பத்தில் தான் இது ஆரம்பிக்கின்றது. மகனே நீ படி மற்றரவர்களை விட நன்றாக படி  அவர்களை பற்றி சிந்திக்காதே என்று கற்பிப்பது குடும்பம் தான். பின் எல்லா இடங்களிலும் இது தொடர்கின்றது. கலை ஊடகம் கலாச்சாரம் எல்லாவற்றிலும் இது கற்பிக்கபடுகின்றது.  இது இல்லை என்று ஒருவரேனும் தைரியமாக கூற ஆரம்பித்தால் வெள்ளை வான்கள் வர ஆரம்பிக்கின்றது. வாய் பூட்டு போட படுகின்றது. முதலாளித்துவ அரச அடக்குமுறை ஆரம்பிக்கின்றது. ஆகவே இந்த முறைக்கு தனியல்பாகவும்   பலாத்காரமாகவும் அடிமை படுத்துகின்றார்கள். இந்த பாலாத்காரம் வடக்கிலும் தெற்கிலும் இன்று நடக்கின்றது. மாணவர்கள், தொழிலாளர்கள் மத்தியில் இது நடக்கின்றது. அம்பலபடுத்தினால் கேள்விகேட்டால் சாவால் விடுத்தால் முதலாளித்துவ அடக்குமுறை துரத்த ஆரம்பிக்கின்றது அப்படி தான் முதலாளித்துவம் நிலைத்திருக்கின்றது. இதற்குள் அரசியல் மிலேச்சதனமானதாகி உள்ளது. அரசியல் பூச்சியமாகி உள்ளது. இதை மாற்ற முனைபவர்களை அடக்குகின்றார்கள் இந்த அடக்கு முறை மூலம் வர்க்கத்தை அச்சுறுத்தி வைத்துள்ளனர். இதற்கு எதிராக போராட ஆரம்பித்த தொழிற்சங்கள் இடதுசாரி அமைப்புகள் எல்லாம் சந்தற்பவாதத்திற்குள் அகப்பட்டுள்ளன. போராட்டங்களை பதவிகளுக்கு விற்பனை செய்தனர். ஆகவே வர்க்கத்தின் நம்பிக்கை வீழ்ந்துள்ளது . முறைக்கு எதிராக போராட முன் வந்தவர்களை எல்லாம் இதை மாற்ற முடியாது பிரயோசனம் இல்லை என்ற நிலை வரை இடதுசாரிகள் அழைத்து சென்றுள்ளனர். ஆகவே பிரச்சனை உள்ளது. இன்று எல்லோரும் தனி தனியாக விடை தேட ஆரம்பித்துள்ளனர். ஆகவே தான் முன் கூறியது போல  pடரப பிடுங்கும் வேலை நடக்கின்றது. ஆகவே தான் அரசியல் பிரயோசனம் இல்லை இதற்கு பதிலாக ஏதாவது வேலை செய்யலாம் என்று எண்ணுகின்றனர். முதலாளித்துவம் நோய்களையும் குப்பைகளையும் எம் முன்னால் குவித்துள்ளது. நீங்களும் இதற்கு பலி ஆகலாம் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் இதில் தப்பிட முடியாது. ஆகவே இந்த மிலேச்ச அரசியலை தோற்கடிக்க வேண்டும். இன்று மனித தொடர்புகள் லாபத்தை கருத்தாக கொண்டவை .இன்று ஒவ்வொருவருக்குள்ளும் மிலேச்ச தனமான ஒருவன் தான் உள்ளான் மேலும் இதற்குள் பிரதேச இன மத வர்க்க குல பிரிவுகளை வகுத்து பொது மனித செயற்பாடுகளை இல்லாது செய்துள்ளனர். ஆகவே அனைவரினதும் மீதான ஒடுக்குமுறையை அடிப்படையாக கொண்ட பொது அடையாளத்தை நாம் முன் மொழிகின்றோம். உண்மையாக போராடியவர்கள் இருந்தார்கள் உரிமைகளுக்கு போராடினார்கள். நன்று. ஆனால் அவை அதற்குள் மட்டும் வரையறுக்கப்பட்டதால் அது முதலாளிதுவத்திற்கு வாய்பாக அமையும். போராட்டங்கள் ஒன்றிணைக்க பாடாவிட்டால் தோல்வி அடையும் .ஆகவே அந்த போராட்டங்களை தோல்வியடையாமல் முதலாளிதுத்தை வீழ்த்தும் போராட்டமாக ஒன்றிணைக்க  வேண்டும். போராட்டங்களில் பொதுவானவற்றின் அடிபடையில் இணைய வேண்டும் இது தொடர்பாக நாம் வர்க்கத்துடன் கதைப்போம் . இதற்கு தலைமை வழங்க இதில் இருந்து விடுபட போராட வாழ்க்கை தொடர்பாக தெளிவுபடுத்த வர்க்கத்திற்கு தலைமை தேவை. புரட்சிகர அமைப்பு தேவை. அந்த சவால் எமக்கு முன் இருக்கிறது. அதற்காக அந்த நம்பிக்கையில் தான் நாம் இன்று கூடி உள்ளோம். நாம் இன்று கூடியது கண்காட்சி நடத்தி செல்ல அல்ல.; வர்க்கத்திற்கு முக்கியமான செய்தியை சொல்லி செல்லவே வந்தோம். அது தான் முதலாளித்துவத்தை வீழ்த்துவோம் வாழ்கையை வென்றெடுப்போம். இந்த செய்தியை நாம் வர்க்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வர்க்கத்திற்கு சொல்ல வேண்டும் முதலாளித்துவ கனவுகள் அல்ல வாழ்க்கை என்பதை சிந்திக்க சொல்வோம். சிந்திபவர்களுக்கு சொல்வோம் சிந்தித்தால் போதாது மாற்றத்திற்காக ஒன்று சேருங்கள் போராடுங்கள் என்று சொல்வோம். மக்கள் ஆங்காங்கு சுயாதீனமாக சிறிய குறுகிய தேவைகளுக்காக போராட ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு அழைப்பு விடுப்போம். போராட ஆரம்பித்தை மதிக்கின்றோம் ஆனால் பிரயோசனம் இல்லை அதில் விடை இல்லை. ஒன்று சேருங்கள் முதலாளித்துவத்தை வீழ்த்த ஒன்று சேருங்கள் இது தான் எமது செய்தி. இது தான் செய்ய வேண்டும் யாரேனும் செய்து வைத்த பாதையில் வரட்டு தனத்துடன் செல்லாது சோசலிசம் என்று உலக நாடுகளை உதாரணம் காட்டி  செல்லாது அதன் மேல் நம்பிக்கையை உருவாக்காது . எமக்கு தேவையான வாழ்கையை நாம் வென்றெடுக்க வேண்டும் சம உடமை என்பதை வரையறைக்கு உட்படுத்தி எம்மை குறுக்கி கொள்ளாமல் மிக பரந்த நோக்கத்திற்காக மனித வாழ்கையை வென்றெடுக்கும் எமக்கு விருப்பமான உலகத்தை பார்க்கும் சமாதனமான மனித உறவுகள் நிறைந்த மனித தன்மை நிறைந்த பரந்துபட்ட விரிவடைந்த சம உடமை வாழ்கையை வென்றெடுக்க அணிதிரள்வோம். இந்த செய்தியை வர்க்கத்திற்கு கொண்டு செல்வோம்.

Post Top Ad

My Instagram