Post Top Ad

கோத்தபாய பொதுபலசேனாவை ஆதரிக்கின்றாரா?

பொதுபலசேனாவிற்கு அரசாங்கம் மறைமுகமாக ஆதரவளித்து வருகின்றது என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச காலி நகரில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தினை திறந்து வைத்து உரயாற்றினார். இந்த சம்பவம் பொதுபல சேனாவின் பின்னால் அரசாங்கம் இருப்பதினை உறுதிபடுத்தியதாக பலர் தெரிவித்தனர். இந்த திறப்பு விழாவில் உரையாற்றிய கோத்தபாய சில விடயங்களை பலாத்காரமாக சொல்லும் போது அது பலருக்கு பிரச்சினை ஆகின்றது என பொதுபல சேனாவின் செயற்பாடுகளை நியாயபடுத்தி உரையாற்றினார்.
கோத்தபாயவின் இந்த செயல்களுக்கு காரணம் இருக்கின்றது. கோத்தபாய தற்போது மிகுந்த செல்வாக்கும் அதிகாரமும் நிறைந்தவர் தான். ஆனால் மகிந்த இருக்கும் வரை தான் இதுவெல்லாம். மகிந்தவிற்கு பின் தன் அதிகாரத்தையும் செல்வாக்கினையும் தக்க வைத்து கொள்ள வேண்டுமாயின், மகிந்தவின் பாதையிலே தீவிரமாக பயணிக்க வேண்டும். அதாவது மகிந்தவை விட அதிகமான முறையில் இனவாதியாக தன்னை வெளிகாட்டி கொள்ள வேண்டும். அதைதவிர தன்னை மகிந்தவை விட செல்வாக்கு மிக்கவராக தன்னை நிலைநிறுத்த வேறு வழியில்லை அவருக்கு. ஆகவே தான் பொதுபல சேனாவை தன் கைக்குள போட்டு வைத்து கொண்டுள்ளார். இப்போதைக்கு மகிந்தவை கவிழ்க்க வேண்டுமானால் அவரை விட அதிகம் தேசியவாதம் பேச வேண்டும். அதற்கு தற்போதிருந்தே காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார் கோத்தபாய.

Post Top Ad

My Instagram