Post Top Ad

தடைகளைத் தாண்டித் தொடரும் போராட்டம் - தமிழக மாணவர்களின் போராட்டம் 03

ஜெனீவாக் கூட்டம் முடிந்த கையோடு கல்யாண வீட்டில் பந்தியை பதம்பார்த்து முடித்தவர்கள் போல் மாணவர் போராட்டமும் நீர்த்துப் போகும் என்று சிலர் அரசியல் ஆய்வு என்ற பெயரில் ஆருடம் கூறினார்கள். மனித உரிமைக் கூட்டம் முடிந்த பின் மாணவர்கள் வழமை போல் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த போது பலர் அதனை நம்பிவிட்டனர். ஆனால் மாணவர் போராட்டம் தொடருகின்றது.
 தினமும் சாலை மறியல் செய்வதும் மெரீனாவில் ஆர்ப்பாட்டம் செய்வதும் தான் போராட்டம் என்று கருதினால் மேற்சொன்ன ஆருடங்கள் உண்மை தான். ஆனால் இலக்கை அடைய வேண்டும் என்றால் மிக நீண்ட பொறுமையான செயற்பாடுகள் அவசியம். வெற்றிபெற சமூகத்தில் உறுதியான கருத்தியலை உருவாக்கிட வேண்டும். மாணவர்கள் அதனை ஒரளவிற்கேனும் உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. போராட்டத்தினை மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கைகளை அவர்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள். ஒரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாணவர் போராட்டங்களுக்கு சார்பாக செவிசாய்ப்பது போல் காட்டிக்கொண்டு மாணவர் தலைவர்களின் மீது அடக்குமுறையை ஆரம்பித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலாளித்துவவாதிகளின் ஊடகங்கள் மாணவர் போராட்டங்கள் மீது அவதூறுப் பிரச்சாரங்களை நடத்துகின்றனர். இதனை எல்லாம் தாண்டி மாணவர்கள் முன்செல்ல வேண்டியுள்ளது. அநேகமாக அவர்களின் அடுத்ததிட்டம் மே 19 அன்று பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவே இருக்கும். 

Post Top Ad

My Instagram