Post Top Ad

சீறிப்பாய வைத்த தீப்பொறி -தமிழக மாணவர்களின் போராட்டம் செல்வழியும் செயல்வழியும் - 02

1983 ம் ஆண்டு குட்டிமணி, தங்கத்துரை உட்பட 53 பேர் சிங்கள இராணுவத்தினால் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டதுடன் தொடர்ந்த தமிழினப் படுகொலை தமிழகத்தில் பெரும் எழுச்சியை உருவாக்கியது. அதன் பின் 30 வருடங்கள் கடந்த பிறகு தற்போது ஒரு எழுச்சியைத் தமிழகம் கண்டுள்ளது. உடனடிக் காரணம் சனல் 4 வெளியிட்ட பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான நிழற்படங்களும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டமும் தான் காரணம். லயோலா கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்த உண்ணாநிலைப் போராட்டம் முழு தமிழகத்திற்கும் பரவிச் சென்றது.
மார்ச் மாதம் தமிழகத்தின் மெரினா கடற்கரையில் வரலாறு காணாத வகையில் மாணவர்கள் திரண்டனர். யுத்தக்குற்றத்திற்காக மகிந்த ராஜபக்ச தண்டிக்கபட வேண்டும் என்பதே மாணவர்களின் போராட்டக் கோசம். மெரினா கடற்கரையில் தமிழகத்தின் உட்புற கிராமபுற மாணவர்களும் நெடுந்தொலைவில் இருந்து வந்து பங்குபற்றி இருந்தார்கள். மனித நடமாட்டம் குறைந்த மெரீனா கடற்கரையின் சுட்டெரிக்கும் பகற்பொழுது முழுவதும் கடும்வெயிலையும் பொருட்படுத்தாது உறுதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மாலையில் போராட்டம் நடத்திய இடத்தில் நிரம்பிய குப்பைகளை சுத்தம் செய்துவிட்டு சென்றமை போராட்டம் நடத்தியவர்கள் மாணவர்கள் தான் என்பதினை உறுதிப்படுத்தியது.                                                                              

Post Top Ad

My Instagram