Post Top Ad

தமிழக மாணவர்களின் போராட்டம் செல்வழியும் செயல்வழியும் - 01

எதிர்பாராத நேரங்களில் தோன்றிடும் ஒரு சில தீப்பொறிகள் முழு உலகையும் உலுக்கிவிடும். யதார்த்தங்களையும் எதிர்வுகூறல்களையும் தலைகீழாக மாற்றிவிடும். மாற்றங்கள் எதிரானதாகவோ சார்பானதாகவோ அமையலாம், ஆனால் அவற்றின் பின்னால் எல்லாம் பலமான தத்துவ கோட்பாடு இருக்கும்.
அந்த தத்துவ கோட்பாடுகள் தான் மாற்றங்களை மலர செய்தன. ஹிட்லர்,ஐன்ஸ்டீன் வரை எல்லோருக்கும் பொருந்தும். பிரபாகரனுக்கும் பொருந்தும். தமிழக மாணவர்களுக்கும் பொருந்தும்.  ஜெனீவா தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு  அரங்கேறிய அத்தனை நடவடிக்கைகளையும் பின்தள்ளி தமிழக மாணவர்களின் போராட்டம் முன்னிலை பெற்றுள்ளது. மாணவர்களின் தன்னிலையான எழுச்சியும் போராட்டங்களும் எங்கு நடந்தாலும் தட்டிக்கழித்து செல்லக் கூடியதல்ல அதனை சரியான திசை நோக்கி செல்வழிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். குறிப்பாக இதனை ஒடுக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் செய்யத் தவறிடக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இதனை மார்க்சியவாதிகளைத் தவிர வேறு யாருக்கும் இதனைச் சரியாக செய்திடும் நேர்மை இருந்திடாது. புரட்சியாளர் தோழர் லெனின் என்ன செய்ய என்ற தனது நூலில் இதனை பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால்  எல்லோரையும், அவர் அவர் போக்கில் செங்கல் வைக்கவிட முடியாது. அப்படி நடந்தால் கட்டிடம் கட்டிடமாக உருவாகாது. அதற்கு சரியான வரைபடம் தேவை, ஒழுங்குபடுத்தல் தேவை.  அவ்வாறு  வைக்கப்படும் செங்கல் சரியாக வைக்கப்படுவதற்காக அளவுகோல் பிடிக்க வேண்டும்.  மார்க்சிய இயக்கம் அதனை செய்திட வேண்டும்.

Post Top Ad

My Instagram