Post Top Ad

அரசியல் சகாக்களை காப்பாற்றிவிட்டு அப்பாவி மக்களை பலிகொடுத்த கூட்டாட்சி #பகுதி 06


உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புகளில் 250 பேருக்கும் அதிகமானோர் பலியாகினர், 500 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததார்கள். குண்டுவெடிப்பின் பின்னர் இசுலாமிய மதசமூகத்துக்கும் ஏனைய சமூகத்தினருக்குமிடையே நம்பிக்கையின்மையும் பதற்றமும் உருவாகியது. கல்வி நடவடிக்கைகள், வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளானது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியது.

இன்றும் இசுலாமிய மத சமூகத்துக்கும் ஏனையவர்களுக்கும் இடையிலான விரிசல்களும் குரோதமும் விரிசலடைந்த நிலையில் தான் இருந்து வருகின்றது.

இத்தனைக்கும் காரணமாக இருந்த குண்டுவெடிப்புக்களை தடுக்க கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தும், போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் ரணில் - மைத்திரி கூட்டாட்சியின் அக்கறை இன்மை காரணமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அல்லது தெரிந்தே மக்களை பலிகொடுத்திருக்கின்றார்கள்.

தாக்குதலை நடத்திய தேசிய தவ்கீத் ஜாமாத் அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பாகவும், பின்புலமாக செயல்பட்ட ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இசுலாமிய அரசு அமைப்புடன் இலங்கையை சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளமை தொடர்பாகவும் 2014 ஆம் ஆண்டிலிருந்தே தகவல்கள் வெளியாகி இருந்தன.

2014 ஆம்ஐ ஆண்டே ஐஸ்ஜஎஸ் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் சிலர் இலங்கைக்கு வந்துள்ளது   அரசாங்கதரப்புக்கு தெரியும் என ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற கேள்வி பதில் ஒன்றின் போது தெரிவித்திருந்தார்.

2017 மார்ச் 10 அன்று காத்தான்குடி பகுதியில் சஹரான் குழுவினர் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குலொன்று தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது (முறைப்பாட்டின் பின்னர் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 6 பேரில் இரண்டு பேர் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியிருந்தார்கள்).

அதே மாதம் 27 ஆம் திகதி காத்தான்குடியில் இயங்கும் அல்லாஹ் அப்துல் ஜவாத் ஆலிம் நிதியம் எனும் அமைப்பினால் தேசிய தவ்கீத் ஜமாத் அமைப்பினதும் மௌலவி சஹரான் தொடர்பாகவும் பிரதமர், சனாதிபதி, பிரதி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு முறைப்பாடு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டில் சஹரான் குழுவினர் இசுலாமிய மதத்தின் பெயரில் வன்முறையை விதைக்கும் கடும்போக்கு கருத்தை பிரச்சாரம் செய்து வருவதாகவும், இசுலாமிய மதம் வாளை அடிப்படையாக கொண்ட மதம் என்ற கருத்தை வளர்ப்பதாகவும், இலங்கை இசுலாமிய நாடு அல்ல, இலங்கையின் தேசிய கொடியை இசுலாமியர்கள் மதிக்க கூடாது, நாட்டை நேசிக்க கூடாது, இலங்கை முஸ்லிம் நாடோ, முஸ்லிம்களின் நாடோ அல்ல - இலங்கையை முஸ்லிம் நாடாக்கி இசுலாமிய கொடியை ஏற்றும் போது தான் இசுலாமியர்களுக்கு விடுதலை போன்ற கருத்துகளை பிரச்சாரம் செய்து வருவதாகவும், இவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாரும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு பிரதமர் அலுவலகம் ‘கடிதம் கிடைத்தது, நன்றி’ என பதிலும் அனுப்பியுள்ளது. மேலும், காத்தான்குடி பகுதியில் இசுலாமியர்கள் சஹரான் குழுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தார்கள்.



சஹரான் குழுவினர் மாவனெல்லையில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதில் தொடர்புபட்டுள்ளதாக 2018 டிசம்பர் மாதம் முஸ்லிம் கவுன்சில் முறைப்பாடு செய்திருந்தது.

இசுலாமிய சமூகத்திலிருந்து சஹரான் குழுவினரின் செயல்பாடுகள் தொடர்பாக போதுமான தகவல்கள் முறைப்பாடுகள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் உரிய தரப்புக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், ரணில் - மைத்திரி கூட்டாட்சி தரப்பினர் சஹரான் குழுவினருடன் அரசியல் நட்பு பாராட்டியதால் எந்த நடவடிகையும் எடுக்கபடவில்லை.

தாக்குதல்கள் தொடர்பாக போதுமான புலனாய்வு தகவல்களும் கிடைத்திருந்தன.

இந்த வருடம் சனவரி மாதம் புத்தளம் வணாத்திவில்லு பிரதேசத்தில் குண்டு தயாரிக்கும் இடம் ஒன்று புலனாய்வு பிரிவால் கண்டு பிடிக்கப்பட்டது. மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புடன் தொடர்பட்டவர்கள் இதனுடன் தொடர்பு பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்து. எனினும், கூட்டரசாங்க அமைச்சர்களின் தலையீட்டினால் விசாரணைகள் சரியாக முன்னெடுக்பட்டிருக்கவில்லை. இதன் போது சந்தேகிக்கப்பட்டவர்களே ஏப்ரல் 21 இல் குண்டு தாக்குதல் நடத்தியிருந்தார்கள்.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு 20 நாட்களுக்கு முன்னதாக ஏப்ரல் முதலாம் திகதியே வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் குண்டு தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதை அரசுக்கு அறிவித்திருந்தன.

ஏப்ரல் 09ம் திகதி தாக்குதல் நடத்தத் திட்டமிடப்படுவது தொடர்பான புலனாய்வு அறிக்கை அரச புலனாய்வுத் துறையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் நிலாந்த ஜெயவர்தன அவர்களால் பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையில் தேசிய தவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹட் சஹரான் மற்றும் அவனின் சகாக்கள் தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் நடத்தத் திட்டமிடுகின்றார்கள் எனவும், பிரசித்தி பெற்ற தேவாலயங்களும், இந்திய உயர்ஸ்தானிகராலயமும் பிரதான இலக்காக இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18 ஆம் திகதியும் மேற்கூறிய வகையில் பொலிஸ் மா அதிபருக்குப் புலனாய்வு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஏப்ரல் 16 ஆம் திகதி காத்தான் குடி தாழங்குடா பகுதியில்  உந்துரொளி ஒன்றில் சோதித்துப் பார்க்கும் வகையில் குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதையும், வெடிப்பினால் உந்துரொளியின் பாகங்கள் 50 மீற்றர் தூரம் வரை சிதறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே அறிக்கையில் 2018 டிசம்பர், 24ம் திகதி மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்பில் தொடர்புடைய ரில்வான் எனும் நபர் குண்டுகளை தயாரிப்பது தொடர்பாக 2017 அக்டோபர் 5,6,7 ஆகிய தினங்களில் நுவரெலியாவில் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார் எனவும், சஹரான் குழுவினருடன் நெருக்கமாக வேலை செய்பவர்கள் காத்தான் குடியில் அதிகமாக வசிப்பதால், இது குண்டு தாக்குதலுக்கான சோதனையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 19 ஆம் திகதியும் ஒரு புலனாய்வு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 16 ஆம் திகதி காத்தான் குடி தாழங்குடாவில் உந்துரொளியில் வெடிப்பை நடத்திய நபர் சஹரானுடன் நெருக்கமாக வேலை செய்பவர் என்றும், கொழும்பில் வேலை செய்வதையும், ஒருவாரக் காலத்துக்கு முன்னர் மதவாச்சியில் வசிக்கும் அவரின் மனைவியைப் பார்க்க சென்றுள்ளமையையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தாக்குதலுக்கு முதல் நாள் 20ம் திகதி தேசிய தவ்கீத் ஜமாத் தொடர்பாக முழுமையாகத் தொகுக்கப்பட்ட புலனாய்வு அறிக்கை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சஹரானின் பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் தொடர்பாகவும், அவருடன் தொடர்பு பட்டவர்கள் தொடர்பாகவும், சஹரானின் சகோதரியும் இதில் தொடர்பு பட்டுள்ளதையும், இவர்களிடம் கைத்துப்பாக்கி, ரி56 துப்பாக்கிகள் இருப்பதையும், இவர்கள் மீது பொலிஸ் பிடியாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும், காத்தான் குடி பொலிஸ் அதிகாரியுடன் நட்புறவில் இருப்பதால் கைது செய்யப்படவில்லை என தாக்குதல் தொடர்பான சகல விடயங்களும் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட அன்று காலை 7 மணியளவிலும், கத்தோலிக்க தேவாலயங்களில் தாக்குதல் நடக்கப் போவதாகப் புலனாய்வுத் துறை தகவல் அனுப்பியுள்ளது. ஆனால், 7.45க்கு குண்டு வெடிக்கும் வரை கூட்டாட்சி அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் தான் , கரத்தினால் ரஞ்சித் மல்கம் அவர்கள் குறைந்தது தனக்குத் தனிப்பட்ட முறையில் அறிவித்திருந்தாலும் பலியான உயிர்களைக் காப்பாற்றி இருப்பேன் என ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார். 

சகல தகவல்களும் அரச புலனாய்வுத் துறையால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டாட்சி அரசாங்கம் மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், சனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவுக்கும், நீதியரசர்களின் பாதுகாப்பு பிரிவுக்கும், வெளிநாடுகளின் தூதுவர்களின் பாதுகாப்பு பிரிவுக்கும் முன்கூட்டிய எச்சரிக்கையை வழங்கியிருந்தார்கள்.

வழமையாக உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனை கூட்டங்களில் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அன்றைய தினம் பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கவில்லை. தாக்குதல் நடக்கப்போவதைத் தனது தந்தை முதல் நாளே தனக்குச் சொல்லியதாக அமைச்சர் ஹரின் பெர்னான்டோ சொல்லியிருந்தார். அமைச்சர் மனோகணேசன் அவரின் பாதுகாப்பு பிரிவு தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை தந்ததாக டிவிட்டரில் கூறியிருந்தார்.

ஆனால், மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதலின் பின் ரணில் விக்ரம சிங்க தன்னை வழமையாக நடக்கும் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு அழைக்கவில்லை எனப் பொறுப்பில்லாமல் கூறியிருந்தார். ரணில் விக்ரம சிங்க பிரதமர் என்ற வகையில் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் ஆவார். கூட்டங்களுக்குச் செல்ல வேண்டியது அவரின் கடமை.

இதே ரணில் விக்ரம சிங்க, மத்திய வங்கி பிணை முறி மோசடியின் பின் மைத்திரிபால அவர்கள் மத்திய வங்கிக்குச் செல்ல முனைந்த சந்தர்ப்பங்களில் எல்லாம், அவருக்கு முன்பே வங்கிக்கு சென்று, தனது அமைச்சின் கீழ் இருக்கும் நிறுவனத்தில் தனது அனுமதியில்லாமல் ஆய்வு நடத்தமுடியாது எனத் தடுத்திருந்தார்.

மேலும், மாவனல்லை புத்தர் சிலை உடைப்பின் சூத்திரதாரிகளை விசாரணைக்கு உட்படுத்திய போது அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் விசாரணைக்குத் தடை ஏற்படுத்தியதாக, ஐதேகவின் செயலாளராக இருந்த அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களே கூறியிருந்தார்கள். மாவனல்லையில் சிலை உடைத்தவர்களே புத்தளம் வனாத்திவில்லுவில் குண்டு தயாரிக்கும் இடம் தொடர்பாகவும் சந்தேகிக்கப்பட்டார்கள். அது தொடர்பான விசாரணையும் கூட்டாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களின் தலையீட்டினால் தடுக்கப்பட்டதை பாராளுமன்றில் அரசாங்க தரப்பைச் சேர்ந்தவர்களே சொல்லியிருந்தார்கள்.

எனவே, ஏப்ரல் 21 குண்டு தாக்குதலில் பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களுக்கு ஐதேக தலைமையிலான  கூட்டரசாங்கமே காரணமாகும். அவர்களின் மக்கள் மீதான கரிசனை இன்மையே காரணமாகும் என்பது வெளிப்படை. மேலும், அமெரிக்காவால் மறைமுகமாக வழிநடத்தப்படும் ஐஎஸ்ஜஎஸ் பின்புலத்துடன் நடந்த இந்த தாக்குதல்களை அரசாங்கம் தெரிந்தே நடக்க அனுமதித்ததா எனும் சந்தேகமும் பலமாக எழுகின்றது.

எப்படியாயினும், பலியான உயிர்களுக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் ரணில் - மைத்திரி கூட்டரசாங்கமே பொறுப்பு. தாக்குதல் நடத்தியவர்கள் போல், தாக்குதல் நடக்க அனுமதித்தவர்களும் குற்றவாளிகளே. இவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எனவே, ஐதேக வுக்கு வாக்களிப்பது அவர்களை இந்த குற்றச்சாட்டிலிருந்து பாதுகாப்பதாகும்.

குறிப்பாக ஏனைய சமூகத்தின் குரோதத்துக்கு ஆளாகி மன உளைச்சலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருக்கும் இசுலாமியச் சமூகம் ஒருபோதும் ஐதேக வாக்களிக்கும் தார்மீக காரணங்களைக் கொண்டிருக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram