வினா-10/15: பிராந்திய புவியியல் மற்றும் பிராந்திய திட்டமிடல் ஆகியவற்றுக்கு இடையேயான உறவைப் பற்றி கலந்துரையாடி, வினைத்திறனான பிராந்திய அபிவிருத்;தி கொள்கைகளை உருவாக்குவதற்கு பிராந்திய புவியியல் அறிவு எவ்வாறு பங்களிக்கிறது என்பதை விளக்கவும்.
அறிமுகம்
பிராந்திய புவியியல் மற்றும் பிராந்திய திட்டமிடல் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட துறைகளாகும். இவை இரண்டும் பிராந்;தியங்களின் அபிவிருத்தியை; புரிந்துகொள்வதற்கும் முகாமை செய்வதற்கும் அத்தியாவசியமானவையாக உள்ளன. பிராந்திய புவியியலானது பிராந்தியங்களின் பரப்பியல் பண்புகள், பன்முகத்தன்மை, அமைப்பு கோலங்கள் என்பவற்றை பகுப்பாய்வு செய்வதில் கவனம் செலுத்தும் அதேவேளை, பிராந்திய திட்டமிடலானது, இப்பகுபாய்வையும், புரிதலையும் பிராந்தியங்களின் கட்டமைக்கப்பட்ட, சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான வழிக்காட்டிகளாக பிரயோகின்றது. எனவே, பிராந்திய திட்டமிடலாளர்கள், பரப்பியல் தொடர்பான அறிவை உள்வாங்கி ஒருங்கிணைத்து பயன்படுத்துவது மூலம் உள்ளுர் தேவைககளுக்கு ஏற்றவாறான நியாயமானதும், நீடித்து நிலைக்க கூடியதுமான கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க இயலும்.
பிராந்திய புவியியல் மற்றும் பிராந்திய திட்டமிடல் இடையேயான உறவு
பிராந்திய புவியியலானது, பிராந்திய திட்டமிடலுக்கு அடிப்படையாக அமையும் பரப்பியல் பகுப்பாய்வுகளை வழங்குகிறது. இது ஒரு பிராந்தியத்தின் பௌதீக சூழல், குடிப்பரம்பம், கலாச்சார பண்புகள், பொருளாதார நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விரிவான அறிவை வழங்குகிறது. இந்த கூறுகள் திட்டமிடலாளர்களுக்கு ஒரு பிராந்தியம் திட்டங்கள் சார்பாக கொண்டுள்ள சாதக பாதக அம்சங்களை மதிப்பிட உதவுகின்றன.
இவ்வறிவைக் கொண்டு, பிராந்திய திட்டமிடலின் போது உள்கட்டமைப்பு வசதிகள், வள மேலாண்மை, பொருளாதார அபிவிருத்து, வாழ்க்கை தர மேம்பாடு என்பவற்றை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட உத்திகளை வகுக்க முடிகின்றது. எடுத்துக்காட்டாக, இலங்கை முழுவதும் அடிப்படை சேவைகளை அணுகுவதில் உள்ள பரப்பியல் ஏற்றத்தாழ்வுகளை பிராந்திய புவியியல் எடுத்துக்காட்டுகிறது. இது திட்டமிடுபவர்களை குறிப்பிட்ட பிரதேசங்களை இலக்கு வைத்து திட்டங்களை வகுக்க துணை புரிகின்றது. எனவே, பிராந்திய புவியியல் திட்டமிடலுக்கான தரவுகளை வழங்குகின்றது, பிராந்திய திட்டமிடல் அவற்றை திட்டமிடலுக்கு பயன்படுத்துகின்றது, அத்திடமிடலின் விளைவாக புவியியல் ரீதியான மாறுதல்கள் ஏற்படுகிறது, இது சுழற்சியாக இடம்பெற்று இவ்விரு துறைகளுக்கும் இடையிலான உறவுமுறையை கட்டமைக்கின்றது.
கொள்கை வகுப்பாக்கத்தில் பிராந்திய புவியியலின் பங்களிப்பு
1. தரவுகள், தகவல்கள் அடிப்படையிலான உள்ளுர் மயமாக்கப்பட்ட முடிவெடுத்தல்:
பிராந்திய புவியியல் பகுப்பாய்வுகள், கொள்கை வகுப்பாளர்களுக்கு இடங்கள் சார்ந்த தீர்மானமெடுத்தல்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, இலங்கையின் வறண்ட மண்டலத்தில், பிராந்திய புவியியல் நீர் பற்றாக்குறையை அடையாளம் கண்டு, வறட்சியைத் தாங்கும் விவசாயம், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன உள்கட்டமைப்பு ஆகியவற்றை செயல்படுத்த படுகின்றது.
2. நீடித்து நிலைக்கும் வளர்ச்சியை ஊக்குவித்தல்:
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் அல்லது கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற சுற்றுச்சூழல் ரீதியாக அபாயங்களை எதிர்நோக்கி இருக்கும் பிராந்தியங்களை அடையாளம் காண பிராந்திய புவியியல் உதவுகிறது. இது அப்பகுதிகளுக்கான விசேட விதிமுறைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பேரிடர் முகாமைத்துவம் போன்றவற்றை திட்டமிட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவுகின்றது. (எ.கா., இலங்கையின் தெற்கு கடற்கரையில் சுனாமி அனர்த்த முன்னேற்பாடு திட்டங்கள்).
3. பிராந்திய ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்:
புவியியல் பகுப்பாய்வு நகர்ப்புற மையங்களுக்கும் கிராமப்புற புறநகர்ப் பகுதிகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்துகிறது. உதாரணமாக இலங்கையில், கொழும்பு அபிவிருத்தியில் முன்னிலையில் இருக்கும் அதேவேளை,; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பின்தங்கியுள்ளன. இவ் புரிதல் காரணமாக, கிராமப்புறப் பகுதிகளை இணைக்கவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் "100,000 கி.மீ பாதை மேம்பாட்டுத் திட்டம்" போன்ற பிராந்திய அபிவிருத்தி; கொள்கைகள் வகுக்கப்பட்டன.
4. தொழிற்பாட்டு பிராந்திய அடிப்படையிலான திட்டமிடல்:
திட்டவியலாளர்கள் நிர்வாக எல்லைகளை மட்டுமே கருத்தில் கொள்வதற்கு பதிலாக, பொருளாதார இணைப்புகள், நாளாந்த போக்குவரத்துகள் மற்றும் சேவைப் பிரதேசங்களால வரையறுக்கப்படும் தொழிற்பாட்டுப் பிராந்தியங்களை அடிப்படையாக கொள்கின்றார்கள். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இலங்கையின் மகாவலி அபிவிருத்தி திட்டம் காணப்படுகின்றது. ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை, மின் உற்பத்தி மற்றும் விவசாயத்திற்காக பல மாவட்டங்களின் பிரதேசங்களை நீர்வளத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பிராந்தியங்களாக அடையாளம் காண பிராந்திய புவியியல் உதவியது.
5. கலாச்சார உணர்த்திறன் கொண்ட திட்டமிடல்:
இலங்கை போன்ற பல்லின நாடுகளில் பிராந்தியங்களின் கொண்டுள்ள இன,கலாச்சார பரவலைப் புரிந்துகொள்வது அவசியமானதாகும். ஏனெனில், அவ்வவ் பிராந்தியங்களின் கலாச்சாரம், இனவிகிதாசாரம், பண்பாடு என்பவற்றின் தன்மைகளை உள்வாங்கிய அபிவிருத்;தி திட்டங்களை வடிவமைப்பதற்கு பிராந்திய புவியியல் உதவுகிறது, இதனால் அமைதி மற்றும் சகவாழ்வு ஊக்குவிக்கபடுவதோ, முரண்பாடுகள் தவிர்க்கப்படுகின்றது.
எடுத்துக்காட்டு:
மகாவலி அபிவிருத்தி திட்டம்
இலங்கையின் மிகப்பெரியதும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதுமான ஸ்ரீ பிராந்திய திட்டமிடல் முன்;னெடுப்பான மகாவலி அபிவிருத்தி திட்டம், அபிவிருத்தி திட்டமிடல்களில் பிராந்திய புவியியலின் முக்கியத்துவத்தையும், ஆற்றலையும் எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. 1970 களில் ஆரம்பிக்;கப்பட்ட இத்திட்டம், மகாவலி ஆற்றுப் படுகையை பகுதிகளை பரந்த பன்முக தொழிற்பாட்டு பிராந்தியங்களாக மாற்றி அமைத்தது. புவியியலாளர்கள் இவ் ஆற்றுப் படுகை பகுதி விவசாயத்திற்கு எவ்வளவு சாதகாமான தன்மையை கொண்டிருக்கின்றது, எவ்வளவு நீர்வளத்தை கொண்டிருக்கின்றது, குடியேற்றங்களுக்கு எவ்வளவு பொருத்தமானது போன்ற விடயங்களை கண்டறிந்தார்கள். இப் பரப்பியல் புரிதல் காரணமாக, தி;ட்டமிடலாளர்களுக்கு சுற்றுசூழலை முகாமை செய்தவாறே, நீர்பாசன திட்டங்கள், குடியேற்ற திட்டங்கள் நடைமுறை படுத்தி விவசாய நடவடிகடகைகளின் அபிவிருத்தியை ஏற்படுத்த இயலுமானதாக இருந்தது.
திட்டமிடல்களில் பிராந்திய புவியியலை பிரயோகிப்பதில் காணப்படும் மட்டுப்பாடுகள்
பிராந்திய புவியியல் முக்கியமான புரிதல்களை வழங்கும் அதே வேளையில், அதன் பிரயோக பயன்பாட்டில் பல முரண்பாடுகளும் உள்ளன. அவற்றை கீழ்வருமாரு வரிசைப் படுத்தலாம்.
• அரசியல் மற்றும் நிர்வாகத் ரீதியான தடைகள்: தொழிற்பாட்டு புவியியலை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் கடும் போக்கு நிர்வாகப் அலகுகளுடன் முரண்படக்கூடும்.• தரவு தொடர்பான வரம்புகள்: சில பிராந்தியங்களில், குறிப்பாக பின்தங்கிய அல்லது மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தரவு காலாவதியானதாகவோ அல்லது போதுமானதாகவோ இல்லாமல் இருக்கலாம்.• செயல்படுத்தல் ரீதியான சவால்கள்: நேர்த்தியான பிராந்திய திட்டங்கள் கூட மோசமான நிர்வாகம், நிதி பற்றாக்குறை அல்லது குறைந்த அளவிலான பொது மக்கள் பங்கேற்பு காரணமாக தோல்வியடையக்கூடும்.
இவ் வரம்புகளை அங்கீகரிப்பதானது, புவியியலை ஆட்சி நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை என்பவற்றுடன் இணைத்து பலதுறைத் திட்டமிடலை மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது.
முடிவுரை
பிராந்திய புவியியலும் பிராந்திய திட்டமிடலும் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. புவியியல் பரப்பியல் தொடர்பாக தர்க்க ரீதியானதும், கோட்பாட்டு ரீதியானதுமான புரிதலை வழங்கும் அதே வேளையில், திட்டமிடல் இந்த அறிவை செயல்பாடுகளில் பிரயோகிக்கின்றது. இலங்கையில், மகாவலிஅபிவிருத்தி திட்டம் போன்ற வெற்றிகரமான பிராந்திய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள்;, புவியியல் தொடர்பான அறிவு எவ்வாறு விளைத்திறனான கொள்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகின்றன. சில நடைமுறைக் மட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பிராந்தியங்களின் பல்வேறு தேவைகளுக்கு உரியவகையிலான, தகவல்கள் தரவுகள் அடிப்படையிலான, நீடித்து நிலைக்கும் அபிவிருத்தி கொள்கைகளை வகுப்பதற்கு பிராந்திய புவியியல் இன்றியமையாததாகவே உள்ளது.