Post Top Ad

சிற்றின்ப மாயைகளுக்கு எதிரான புரட்சி

கொப்பரினிக்கஸ் க்கு முன் மனிதன் உலகம் தன்னை சுற்றி வருவதாக கருதி வந்தான். கொப்பர்நிக்கசிற்கு பின்னரே தான் சூரினை சுற்றி வருவதனை அறிந்துகொண்டான். இந்ந நிகழ்வானது மனிதனுள் குறிப்பாக மேற்கத்தைய நாட்டு மக்களிடையே ஒரு வித தாழ்வு மனப்பான்மையை  உருவாக்கிவிட்டது. இது வரை தன்னை சுற்றி வருகிறது என்று நினைத்த ஒன்றை உண்மையில் தான் சுற்றி வருவனை அறிந்தபோது சாதாரணமாக ஏற்படும் உணர்வாகும். ஆனால் இது எம்போன்ற நாட்டு மக்களுக்கு பொருத்தமற்றது.
அதனை தொடர்ந்து டார்வினின் மனிதனை படைத்த்து கடவுள் அல்ல. மனிதன் உயிரினங்களின் கூர்ப்பின் அடிப்படையில் தோன்றியவன் என்று தெளிவுபடுத்தினார்.
அதன் பின் ட்ரொயிட் என்பவர் நாம் கட்டுபடுத்தப்படுவது அல்லது ஆளப்படுவது எமது பிரக்ஞ (consciousness)  அல்ல எமக்குவெளியில் இருக்கும் நனவிலி மனம் (unconsciousness)  என்று நிருபித்தார்.

இதனால் மூன்றாவது தடவையும் மனிதன் ஒருகையில் தன்னை தாழ்வாக எண்ணினான். மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன் இவை நம்மவர்களுக்கு பொருந்தாது.மேற்கத்தைய நாடுகளின் சாதாரண மனிதர்கள் இவற்றை அறிவார்கள். இலங்கையை பொருத்தவரை சாதாரண மக்கள் இன்னும் உலகம் தன்னை சுற்றி வருகின்றது என்ற எண்ணத்தில் அல்லது அது குறித்த எந்த வித எண்ணமும் இல்லாமல் இருக்கின்றார்கள். பாடசலைகளில் கற்பிக்கப்பட்டாலும் அநேகர் அதனை  தர்க்க ரீதியில் விளங்கி கொள்வதில்லை. பரீடசைக்காக  மனப்பாடம் மட்டுமே செய்கின்றார்கள்.  கற்றவர்கள் இங்கு விதிவிலக்கு.

இந்தநிலையில் cognitive science, digital technology  என்பவற்றின் வளர்ச்சியானது மனிதனின் ஒட்டமொத்த சாரம்சமும்(Essence), மனிதனுக்கு புறத்தே உள்ள உலகத்திலேயே இருக்கின்றது, மனிதனுள் அல்ல என்பதை எடுத்து காட்டியிருக்கின்றது.  அண்மையில் எட்வர்ட் சினோட்டன் அம்பலபடுத்திய விடயங்கள் நாம் மிக இரகசியமானதும் அந்தரங்கமானதும் என கருதும் விடயங்கள் வேறிடங்களில் புற உண்மைகளாக்ப்படுதை அம்பலமாக்கின. அரசுக்கள் ஒவ்வொரு தனி மனினையும் எவ்வாறு கண்கானிக்கின்றன என்பதினை அவர் வெளிபடுத்தினார். எம்முடைய தனிப்பட்ட விடயங்கள் பிறரால் கண்கானிக்கப்படுகிறது என்ற பெரும்  சர்ச்சையை கிளப்பியது இந்த விடயம். மறுபுறம் மனிதனின் ஆன்மா மரபனுக்களில் புதைந்துள்ளது என்ற கோட்பாட்டை நோக்கியும் மனிதர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நான்கு மையப்படுத்தப்பட்ட பரவலாக்கப்பட்ட விடயங்கள் மேற்கத்தைய நாட்டு மக்களிடம் தான் இயங்கி கொண்டிருப்பது தன்னுள் அல்ல தனக்கு வெளியே என்ற தெளிவு ஏற்பட்டிருக்கிறது. இதன் பரவலாக்கமே சமூகத்தனை இயக்குகிறது. இந்த புரிதல் எம் நாட்டின் சாதாரண மக்களிடம் இல்லமையே மேற்கத்தைய நாடுகளில் சில முறபோக்கான மாற்றங்ளை ஏற்படுத்திய மாற்றங்கள் கூட நம் நாட்டில் பிறபோக்கான விளைவுளை ஏற்படுத்தியிருக்கினறது.
இன்று மக்களின் வாழ்க்கையின் சகல கூறுகளிலும் இதனை காணலாம். ஊடகம், அரசியல், கலை, விளையாட்டு, குடும்பம், காதல், தாம்பத்யம் என சகல விடயங்களிலும் இதன் தாக்கத்தினை அறியலாம்.மேலை நாடுகளில் நடைமுறையில் இருக்கும் தேர்தல், கட்சி சனநாயகம் இங்கு பிறபோக்கு தனங்களை ஏற்படுத்தி தோல்வி நிலையை தோற்றுவித்திருப்தும் இதனால் தான். அரசியல் தங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்ளை உணர்ந்து பிரதிநிதிகளை தெரிவு செய்தையும் அந்த உரமையை சரியாக பயன்படுத்துதையும் மேலை நாட்டு மக்கள் சரியாக செய்ய  நாமோ அரசியலுக்கும்  எமக்கும்  சம்பந்தமில்லை   அது தேவையற்றது என்று செயற்படுகின்றோம். நாமோ  நாம் நம்மால் இயக்கப்படுகின்றோம் என்ற   மமதையில் சிற்றின்ப மாயைகளில் அகப்பட்டு இன்பங்ளையும் மகிழ்ச்சியையும் தேடிசெல்கின்றார்கள். என்று  எம்மவர்களின்  மமதை  தகர்ந்து மனதில் அச்சம்  வருகின்றதோ அன்று தான் மாற்றத்திற்கான  திறப்பு எமக்கு கிடைக்கும்.  அந்த திறப்பு எம்கைக்கு வரவேண்டுமெனில் நாம் மனிதர்களை சிற்றின்ப  மாயைகளில் இருந்து விடுவிக்கும்  புரட்சியை நடத்த வேண்டும். இலஙகையில் மார்க்சிய புரட்சி ரஸ்சியாவின் மூலதனத்திற்கு எதிரான புரட்சியாகவோ சீனாவின் கலாசார புரட்சியாகவோ அல்லாமல் சிற்றின்ப மாயைக்கு எதிரான புரட்சியாகவே அமையும்.

Post Top Ad

My Instagram