Post Top Ad

பின் நவீனத்துவம் என்றால் என்ன?

பெட்ரிக் ஜேம்ஸ், ஜென் பிரான்சுவா லியோதார்டா, ஜீன் பட்ரிலார்ட் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை வரைவிலக்கன படுத்தியவர்களில் நான் அறிந்த சிலர் ஆவர்.
மார்க்சியவாதியான பெட்ரிக் ஜேம்சன் பின்நவீனத்துவத்தை ஒரு வரலாற்று பரிவர்த்தனை நிகழ்வாக சித்தரிக்கின்றார். அதாவது வரலாற்றின் ஓரு காலகட்டத்தில் இடம்பெற்ற பண்பாட்டு அமைப்பியல் மாற்றமாகும். இந்த மாற்றம் இதற்கு முன்னிருந்த ஒன்றின் முடிவை குறித்து நிற்கிறது. அதன் படி பின் நவீனத்துவம் என்பது கருத்தியலின், கலையின், சமூக வர்க்கங்களின், சமூக சனநாயகத்தின் முடிவாகும். இம் முடிவு நிலைகள் லெனினியம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கான அறிகுறிகளாகும். 
நவீனத்துவம் என்பது மரபுகளுக்கு எதிராக ஒரிடத்தில் தேக்கமடைவதற்கு பதிலாக எல்லையில்லாது விரிவடைந்த எதிர்கால முன்னேற்றம் எனில், பின் நவீனத்துவம் என்பது கடந்தகால துன்பங்களாகும், கடந்தகாலத்திற்கு நன்மை செய்வதாகும். அதாவது பறிபோன ஒன்றின் மீதான மனிதனின் எஞ்சியிருக்கும் பக்தியாகும். உண்மையில் பின் நவீனத்துவம் முதலாளித்துவத்திற்கோ அல்லது சோசலிசத்திற்கோ எதிரான கருத்துடையதல்ல, பின் நவீனத்துவம் முதலாளித்துவத்தின் இறுதி பண்பாட்டு கட்டமைப்பாகும். இதனை எதிர்மறையான வழிகளை  விடுத்து உறுதியான திடமான வழிமுறைகளாலே களைந்திட வேண்டும். 

Post Top Ad

My Instagram