Post Top Ad

யார் தீட்டானவர்கள்

மனித இனத்திற்கு பயனுள்ள பல பொருட்களை கண்டுபிடித்தது பெண்கள் தான். விவசாயம்இ பானைகள் செய்தல்,கூடைகள் பின்னல் தொடக்கம் ஆடைகள் வரை பட்டியல் நீண்டு செல்கின்றன. மாதவிடாய் ஏற்பட்டு இரத்தபோக்கு வரும்போது அன்றைய ஆதிப்பெணகள்  காடுகளில் கிடைத்த பஞ்சு தோல் பொருட்களை பயன்படுத்தத் துவங்கிக் காலப்போக்கில் துணியைக் கண்டுபிடித்தனர் என்கிறது வரலாறு. விலக்கப்பட்ட ஆப்பிள் பழத்தை ஏவாள் சாப்பிட்ட பின் வெட்க உணர்வு தோன்றி ஆடைபிறந்தது எல்லாம் ஏழுமலை, ஏழுகடல், ஏழு மைல் தாண்டிய வடிகட்டிய பொய்கள். இரத்த போக்கு என்ற உயிரியல் நிகழ்வை ஒட்டி பிறந்த தேவைகளே ஆடைகளின் துணிகளின் கண்டுபிடிப்பு வரை மனித இனத்தை அழைத்து சென்றது. அதையும் கடந்து அந்த கண்டுபிடிப்பும் அந்த கண்டுபிடிப்பிற்கு காரணமான உயிரியியல் நிகழ்வும் பெண்களை ஆணாதிக்கம் என்ற சமூகசிறையிலே கலாசார கைவிலங்கால் கைதியாகும் நிலை வரையும் அழைத்து சென்றுள்ளது.

"மஜா" என்ற விக்ரம் நடித்த படத்தில் 'தை மாசம் ஊரு கூட்டு...." என்ற அருமையான நாமுத்துகுமார் தொழில்முறை கவிஞர் எழுதிய பாடல் ஒன்று இடம்பெரும். அந்த பாடலில் பின்வருமாரு ஒரு வரி உண்டு  ' மாசத்தில மூனு நாளு நீ எங்க போய் படுப்ப.. "   பல வெள்ளை வேட்டி ஆசாமிகள் ஆபாசம் ஆபாசம் என்று பொhpந்து தள்ளியிருந்தார்கள். அப்படி என்ன ஆபாசம்  பொதிந்துள்ளது? எத்தனை பொpய சமூக உண்மையை கூறியிருக்கின்றார் அந்த தொழில்முறை கவிஞர். 'மாதவிடாய் ஏற்படும் மூன்று தினங்களும் உடலுறவுகொள்ள முடியாது , அந்த மூன்று நாட்களும் என்னடா செய்வாய்"; என்று ஒரு பெண் ஆணை பார்த்து கேட்பது போல் அமைகிறது . மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது ஆரோக்கியமானதல்ல என்பது உண்மை தான். இதை எமது கல்வி முறை கற்று தருகின்றதா என்றொரு கேள்வியும் பிரச்சினையூம் இருக்கின்றது. அதுவல்ல விடயம். சாதாரண ஒரு பாடல் வரி மட்டுமல்ல இது. எம் சமூகத்திலே புரையோடி வேர்விட்டு விருட்சமாகியிருக்கும் ஒரு பிற்போக்கான  விடயம்.
மாதவிடாய் காலத்தில் உன்னால் உடலுறவு கொள்ள முடியாதே என்ன செய்வாய் என்று ஒரு ஆண் எழுதுகிறான் இதே பொருளில் பலரும் எழுதியிருக்கின்றார்கள். இப்படி எழுத தூண்டியது எது. பெண் ஆணுடன் உடலுறவு கொண்டு அவனுக்கு இன்பத்தை கொடுக்கவும் பிள்ளைபெற்றுக்கொடுக்கவும் ஆணுக்கு பணிவிடை செய்யவுமே பிறவியெடுத்தவள் என்ற அயோக்கியதனமான சமூகத்தின் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு அல்லவா அது. அந்த மெத்தனம் தானே பேணிக்கிடப்பவள் என்ற பொருள்பட 'பெட்டை" என்றவனை எக்காளமிட வைத்தது.இன்றும் கூட பெண்கள் வீடுகளில் மாதவிடாய் காலங்களில் வீடுகளில் பூஜை அறைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக இந்து மத பெண்கள் மாதவிடாய் காலத்தில் இறைவனை வழிப்பட தகுதியற்றவர்கள் , தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்படுகின்றார்கள். சில வீடுகளில்; ஒதுக்குபுறமான இடம் ஒதுக்கப்படும், அங்கே தான் இருக்க வேண்டும், வெளியில் சுற்றிதிரிய அனுமதியில்லை. அப்படி வீட்டிற்குள் சுற்றிதிரிந்தாலோ வீட்டு பொருட்களை தொட்டாலோ தீட்டு என்று அத்தனை பொருட்களும் கழுவப்படும். கோயில்களுக்கு செல்வதை நினைத்தும் பார்க்க முடியாது. ஏன் கோயிலின் கருவறைக்கு செல்வதற்கு அனுமதிக்கபடாமையும், ஆலயங்களில் அர்ச்சகராக அனுமதிக்கபடாமையும், மாதவிடாயால் பெண்கள் தீட்டானவர்கள் என்ற காரணத்தினால் தான்.
மாதவிடாயால் பெண்கள் தீண்டபடாவர்களாகின்றனரா? அறிவியல் என்ன சொல்கிறது? மனித இனம் விருத்தியடைய வேண்டுமென்றால்  சூலும் ,கருவும் சேர்ந்து கருக்கட்டல் நிகழ வேண்டும்.  சூல் பெண்னின் சூலகத்திலும், கரு ஆணின் விதைப்பையிலும் உற்பத்தியாகும். கருக்கட்டல் பெண்னின் சூலகத்தினுள் நிகழ்ந்து கரு கர்ப்பபையினுள் வளரும். மனிதனில் சூல் 28 தினங்களும்  கரு 3 தினங்களும் உற்பத்தியான தினத்திலிருந்து உயிர்ப்புடன் இருக்கும்.இந்த காலப்பகுதிக்குள் கருக்கட்டல் நிகழாவிட்டால் இவை உடலிலிருந்து வெளியேற்றப்படும். பெண்களின் உடலிலிருந்து  உற்பத்தியான ஏராளமான கருக்கொள்ளப்படாத சூல்கள் வெளியேற்றப்படும். இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சியான நிகழ்வாக நடைபெறும். ஆகவே, இந்த மாதவிடாய் வட்டம் நிகழா விட்டால் மனித இனமே வீருத்தியாகாது. நீங்களோ நானோ பிறந்திருக்க மாட்டோம்.
தீட்டு என்றால் தீண்டதகாதவை என்றர்த்தம். கீழ் சாதிகாரர்களை மேல்சாதியினர் தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கினரே அதே தீண்டாமை தான். உற்பத்தியின் நிலவுகைக்கு உழைப்பதினால் கீழ்சாதி எனப்பட்டு ஒடுக்கபட்டனர் உழைப்பாளிகள். அந்த உழைப்பாளி முதற்கொண்டு முதலாளி வரை கூட்டு சேர்ந்து, உயிருற்பத்தியின் நிலவுகைக்கு உபாதை தாங்குவதினால் தீண்டதாகாதவர்கள் எனப்பட்டு ஒடுக்கபடுகின்றனர் பெண்கள். கருவறையில் சுமக்க வேண்டும், ஆனால் கல்லறை செல்லும் போது கூட செல்லவேனும் அனுமதியில்லை. காரணம் அதே தான். பிணம் கூட தீட்டாகிவிடுமாம். அப்படியென்றால் உலகில் யாவரும் தீண்டதகாதவர்கள் தானே, நாமெல்லாம் வந்ததும், அதே யோனி பாதை வழியாக தானே.

இவையெல்லாம் பெண்களை அடக்கியாளப்படும்   ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் சுதந்திரத்தை பறித்த  அடக்கி வைக்க ஆதிக்க சமூகத்தினால் பரவிவிடப்பட்ட நடைமுறைகளே இந்த தீட்டு என்ற பம்மாத்தெல்லாம். ஆலயங்கள் தான் ஆதிசமூகத்திலே அதிகார மையங்களாக இருந்தன. அந்த அதிகார மையத்தினுள் பெண்களை அடக்கி வைத்தால் தான் அவளை தனக்கு பணிவிடை செய்பவர்களாக தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. ஆகவே மாதவிடாயால் பெண்கள் தீட்டு பட்டவர்களாகின்றனர் என்ற கருத்தை உருவாக்கி ஆலய கருவறைக்குள் செல்லவோ, அல்லது அர்ச்சகராகவோ உரிமை மறுக்கப்பட்டது. இந்த உரிமை மறுப்பின் தொடர்ச்சிகள் தான் வீட்டினுள்ளும் நடக்கின்றன.

சரி ஆலயங்களில் பெண் தெய்வங்களெல்லாம் இருக்கின்றார்களே. அதுவும் முருகன், பிள்ளையார் என இருபிள்ளைகளை பெற்ற ஆதிபராசக்தியே இருக்கிறார்களே. இவர்களுக்கு மாதவிடாய் வருமே... அப்போது ஆலயங்கள் தீட்டாகி விடாதா? செல்வத்தை தரும் லட்சுமியையும்,கல்வியை தரும் சரஸ்வதியையூம், வீரத்தை தரும் துர்க்கையையும் மாதந்தோறும்  பரலோகத்தின் பணிப்பாளர் நாயகம் விடுமுறையில் அனுப்பி விடுவாரா என்ன?
கத்தோலிக்க மத நிறுவனத்தின் சட்டதிட்டங்களை அருளிய கர்தரானவர் பெண்கள் மீதான தீண்டாமையை விளக்குவதற்கு ஒரு அதிகாரத்தையே அருளியிருக்கின்றார்.
லேவியராகமம் 15 அதிகாரத்திலே மாதவிடாய் காலங்களில் பெண்கள் தீண்டதகாதவர்கள், ஒதுக்கி வைக்கப்படவேண்டியவர்கள், மாதவிடாய் காலங்களில் பெண்களையோ, அவர்களிருந்த இடங்களையோ தொட்டவர்கள் தண்டனைக்குரியவர்கள் என பயங்கரவாத தடை சட்டம் போல பட்டியல் போடப்பட்டிருக்கின்றது.ஆனால், இதற்குள் மரியாலும் வருவாரா என்று தெரியவில்லை.

அடிமைதனங்களின் அடிச்சுவடுகளை பின்பற்றிக்கொண்டு அதை எதிர்காமல் நம் கலாசாரமாகவும் பண்பாடாகவும் பின்பற்றிக்கொண்டு விடுதலை வேண்டுமென்றால் கிடைத்து விடுமா ? சுதந்திரத்தையும் உரிமையையூம் பறித்து நிற்கும் பிற்போக்குதனங்கள் உடைத்தெறியபடல் வேண்டும். உhpமையையும் சுதந்திரத்தையும் மதிக்கும் ஆண்களும் பெண்களும் இதற்கு முன்வரவேண்டும். சமூக பண்பாட்டியலின் ஊற்றுக்கருவிகளான ஆலயங்களில் சமத்துவமும் சமவுரிமையும் நிலைநாட்டப்படல் வேண்டும். ஆலய கருவறையினுள்  பலாத்காரமான முறையிலேனும் பெண்களின் பிரவேசம் நிகழ வேண்டும். அர்ச்சகராகும் உரிமை பலவந்தகமாவேனும் நிலைநாட்டப்படல் வேண்டும். பெண்களை ஒடுக்க சமூகத்திலே பரவவிடப்பட்ட பிற்போக்கு கருத்தியல்கள் தகர்க்கப்படல் வேண்டும்.



Post Top Ad

My Instagram