Post Top Ad

மௌனம் களையும் உரையாடல்



உலகை மாற்ற மனிதர்கள் உலகோடு கொள்ளும் உறவே உரையாடல். நான் உலகை நேசிக்கவில்லையெனில், நான் வாழ்வை நேசிக்க முடியாது. நான் மக்களை நேசிக்கவில்லையெனில் நான் உரையாடலுக்கு செல்ல முடியாது. அதிகாரமும் ஆணவமும் நிலவுமிடத்தில் உரையாடல் நிகழாது. வெளிப்படை குணமின்றி வாழும் மனிதனிடத்தில், மாற்று கருத்து தரிவிப்போரை இகழும் மணமுடையோர் மத்தியில், தன் அறியாமையை பிறரிடம் திணிப்போரிடத்தில் உரையாடலுக்கு வாய்பிருக்காது. ஆனால் எதிர்காலத்தில் நம்பிக்கையும், மக்கள் மீது தளராத பற்றும் கொண்டவனால் உரையாடாமலிருக்கவும் முடியாது. உரையாடல் உலகத்தையும் மனிதர்களையும் நேசிக்கும் ஒரு முயற்சி. விடுதவைக்காக, உரிமைக்காக மௌன கலாசாரம் கலளயபட உரையாட வேண்டியிருக்கின்றது. உரையாட   ஒரு களம் வேண்டியிருக்கிறது.


தாம் வாழும் சமூகத்தில் 'குரல்" இழந்தோரே ஒடுக்கப்பட்டோர். ஆதிக்க சக்திகள் தம் கலாச்சார ஊடகங்களான பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் ஒடுக்கப்பட்டோரின் குரல்வளையை நெறித்து இவர்களை பேசா மடந்தைகளாக்கி விடுகின்றன. இந்நிறுவனங்கள் உருவாக்கும் கருத்தாக்கங்களை உள்வாங்கும் இம்மக்கள், தங்களைப் பற்றியே எதிர்மறை பிம்பங்களை வளர்த்துக் கொள்கின்றனர். விமர்சன நோக்கில் பயிற்றுவிக்கப் பெறா மக்கள், தம்மை ஒடுக்கும் சக்திகளை அறியாதவராய் இருப்பதோடு ஒடுக்குமுறைகள் நியாயமானவை அல்லது இயல்பானவையே என ஏற்றுக்கொண்டு மௌனமே வாழ்வாகிப் போகின்றனர். தான் ஒடுக்கப்படும் முறைகளை அறியாதவர்க்கு விடுதலை விடை தரியாத விடுகதைகளாகவே அமையும். சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ளீடாகவுள்ள ஒடுக்குமுறையை அறியாதவர் கற்றவராகவோ, அதை போதிக்காதது கல்வியாகவோ அமைய முடியாது. வெறும் சமூகத்தில் வாழ்பவனுக்கு சமூகத்தில் நிலவும் அநீதிகள்,சவால்களுடன் சமராட முடிவுகளை எடுக்க தயார்படுத்துவதற்கு மாறாக   தகவல்களை அறியதந்து மனிதனை தகவல் பெட்டமாக மாற்றியிருக்கும் கல்விமுறை எமது சமூக நடவடிக்கைளில் நிலவும் மெத்தனம் மற்றும் உணர்வுபூர்வமற்ற சிந்தனைகளின் பெருக்கத்திற்கு காரணமாக அமைகிறது. தகவல் பெட்டகமாக்கப்பட்ட விமர்சன நோக்கற்ற உணர்வுபூர்வமற்ற சமூகம் துப்பாக்கியையும் சீருடைபடைகளையுமே ஒடுக்குமுறையாக கணிக்கின்றது. ஒடுக்குமுறையூடன் மோதாமல் ஒடுக்குமுறையின் விம்பத்துடன் மாத்திரம் போராடுவதால் எதிரியை தப்பிக்க வைத்து உண்மையான ஒடுக்குமுறைக்கு தன்னை தானே பலியாக்கின்றது. ஒடுக்குமுறையின் ஒரு வடிவத்துடன் மாத்திரம் மோதும் ஏனையவை எம்மை எதிர்ப்பின்றி வெற்றிக்கொள்கின்றன. ஒடுக்குமுறையின் அத்தனை வடிவங்களையும் ஒரே சமயத்தில் எதிர்க்க வேண்டுமெனின் சிந்தனை மாற்றம் அவசியம்,சிந்தனைகள் செயலாக்கம் பெறல் வேண்டும். இந்த சிந்தனை மாற்றத்தை துரிதபடுத்தும் விமர்சன பார்வையை வழங்கி தனிநபர் தன் வாழ்வியல் சூழலோடு உலகின் ஒட்டுமொத்த பரினாமத்தையும் பொறுத்தி பார்க்கும் புரிதலை ஏற்படுத்தல் அவசியமானதாகும்.



Post Top Ad

My Instagram