Post Top Ad

மகிந்தவை விளங்கி கொள்வது எவ்வாறு?



சில நாட்களுக்கு முன் மகிந்தவும் தன்னை பாசிச வாதியாக சர்வாதிகாரியாக அடையாளப்படுத்துவது நியாயமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆதாரமாக இப்படியான ஆட்சிமுறையில் சுதந்திரமாக அரசாங்கத்தை விமர்சிக்க முடியுமா என தன் தரப்பு வாதத்தை முன்வைத்திருந்தார். இதை பலர் கண்டு கொள்ளாவிட்டாலும் அதிலும் ஒரு உண்மை இருக்கின்றது. சீனா, வடகொரியா, எகிப்து, உட்பட சர்வாதிகாரத்தன்மையடைய பலநாடுகளில் சிறிலங்காவில் போன்று அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது. மீறி விமர்சித்தால் சிறையில் அடைக்கப்படலாம், சித்திரவதைக்கு ஆளாகலாம் அல்லது கொல்லப்படலாம். சிறிலங்காவில் முன்னாள் தூதுவர்களுக்கு கூட அரசாங்கத்தை விமர்சிக்க முடியும். அப்படியானால் மகிந்தவின் ஆட்சியை வரையறுப்பது எவ்வாறு?


சர்வதிகாரம் என்பது TOTALITARIANISM என்பதற்கு வழங்கப்பட வேண்டிய தவறான மொழிபெயர்ப்பாகும். TOTALITARIANISM என்பது நிலபிரபுத்துவ காலத்தில் நீரை பகிர்ந்தளிப்பதில் எழுந்த பொதுவான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உருகொண்ட கொடுஙகோல் ஆட்சியாளனையோ ஆட்சியையோ குறிப்பது அல்ல. மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தை கடந்து ஒரு இடத்தில் உணவு உற்பத்தி செய்து அதாவது விவசாயம் செய்து வாழ்ந்த போது ஏற்பட்ட பிரதான பிரச்சினை நீர் பிரச்சினை ஆகும். நீரை பகிர்ந்தளிப்பது எப்படி என்ற பிரச்சினையாகும். இதற்கு விடையாக கிடைத்த முறையே கொடுங்கோலாட்சி முறையாகும். இதுவே ஆசிய கொடுங்கோலாட்சி முறை எனப்படும்.



ஆனால் நவீன முதலாளித்துவம் ஆட்சி செய்யும் சமூகத்தில் பிரதிநிதிதுவ சனநாயகம் வீழ்ச்சியடையும் போது ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பிட உருவெடுக்கும் ஆட்சி முறையை (முதலாளித்துவ முறையின் இறுதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முனமொழியப்படும் முறை) சர்வாதிகாரம் அதாவது TOTALITARIANISM என்று குறிப்பிடலாம். அவ்வாறான இரண்டு சர்வாதிகார ஆட்சி முறைகள் ஜரோப்பாவில் உருவெடுத்தன.



1)பாசிசம்
2)ஸ்டாலினிசம்

சமகாலத்தில் நவீனத்துவம் என்பது முதலாளித்துவத்தையாகும். இவ் முதலாளித்துவத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எழும் முரண்பாடுகள் தோன்றும். அதனை நிவர்த்திக்க உலகின் பல பாகங்களில் பல மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. லத்தீன் அமெரிக்க நவீனத்துவம், ஆபிரிக்க நவீனத்துவம், ஆசிய நவீனத்துவம் என பலதை குறிப்பிடலாம். ஆனால் மேற்க்கத்தைய வெள்ளைகாரர்களை தவிர்த்து வேறு யாருக்கும் முதலாளித்துவத்தை விஞ்ஞானத்தின் மூலம் விளங்கப்படுத்த முடியாதுபோயுள்ளது. (மார்க்சிசம்) முதலாளித்துவம் என்பவற்றிற்கு மாற்றுக்கள் இல்லாத சூழலில் விதண்டாவாதமாக மாற்று முறைகள் ( தீவிர இஸ்லாம் அடிப்படைவாதம், பசுமை புரட்சி, புராதான ஆசிய வாழ்க்கை முறை) உருவாக்கபட்டிருப்பதும் இச்சூழலில் தான். 1935 முதல் 1983 வரை சிறிலங்காவின் முதலாளித்துவத்தை விளங்கி கொள்ள மார்க்சியம் விஞ்ஞானமாக கையிலெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜேவீரவாலும் ஜேவிபி யினாலும் மார்க்சியத்தின் இடத்தில் இனவாதம் பிரதீயீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்த 30 வருடங்கள் மார்க்சியம் மறக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. தற்போது மக்கள் முதலாளித்துவத்தை விளங்கி கொள்வதே இல்லை. அதற்கு பதிலாக தனி தனி சமூகங்களாக விளங்கி கொள்கின்றார்கள். இந்த நிலைமைகளில் மக்கள் அபிவிருத்தியை பௌதீக கட்டுமானங்களை கொண்டே விளங்கி கொள்கின்றார்கள். ஒரு போதும் மனிதஉறவுகளில் ஏற்படும் அபிவிருத்தியில் அபிவிருத்தியை காண்பதில்லை. இவ்வாறான சமூகத்தை சரிவர குறிப்பிட்டால் , முன்பிருந்த விவசாய சமூகமொன்று மீண்டும் நவீனத்துவத்தின் மேற்பொருந்துகை செய்யபடுவதாகும். இதனால் இச்சமூகத்தை ஆட்சி செய்யும் மையம் கொடுங்கோலானதாகும். அந்த வகையில் மகிந்த சர்வதிகாரியோ பாசிசவாதியோ அல்ல. மகிந்த ஒரு கொடுங்கோலர். ஏதேச்சதிகாரி. மகிந்தவின் அதிகாரம் பூர்ணமானது.

Post Top Ad

My Instagram