Post Top Ad

ஜேவிபி, முசோக அதிகார இழுப்பறியில் பறிக்கப்பட்டது தமிழ் பிரதிநிதிதுவம்

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தின் செயற்பாடுகளை வழிநடத்தி வந்த ஜே.வி.பி னர் என்ற தேசியவாத சமவுடைமையாளர்களில் ஏற்பட்ட பிளவி ன் பின் மாணவர் இயக்கத்தின் மீதான முழு அதிகாரமும், ஜே.வி.பி யில் இருந்து பிரிந்து வந்தவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியினரிடம் சென்றது. பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தில் செல்வாக்கு செலுத்த வேண்டுமாயின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களில் தன் கட்சி சார்ந்தவர்களை பதவிகளில் அமர்த்த வேண்டும்.
தன் கட்சி சார்ந்தவர்களை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களில் உள்நுழைப்பதற்காக மேற்படி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அண்மையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஓன்றிய  உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். தலைவர், உபதலைவர், செயலாளர் , பொருளாளர், பதிப்பாளர் என ஜந்து பதவிகளை கொண்ட மாணவர் ஒன்றியத்திற்கு தமிழர் ஒருவரும், மாணவி ஒருவரும் நியமிக்கப்படுவது என அண்மைய வருடங்களில் இணக்கம் காணப்பட்டிருந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் கல்வி கற்று வருவதும் இங்கு குறிப்பிடதக்கது. எனினும் இம்முறை ஜே.வி.பி யை சார்ந்தவர்கள், மாணவர் ஒன்றியத்தில் ஒரிரு பதவி களையேனும் பெற்று கொள்ள பகீரத பிரயத்தனத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதனை தடுக்கும் வகையில் மு.சோ.க வை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதோடு தன் கட்சி சார்ந்தவர்களை சகல பதவிகளுக்கும் நியமிக்க சகல ஏற்பாடுகளையும் செய்திருந்த வேளையில், உபத லைவர் பதவிக்கு வரவிருந்த மாணவனை ஜே.வி.பி யை சேர்ந்த மாணவர்கள் அச்சுறுத்தி பதவி நியமன நிகழ்வுக்கு செல்ல விடாது தடுத்து உபதலைவர் பதவி யை கைப்பற்றியிருந்தார்கள். 

இவர்களின் அதிகார இழுப்பறிக்குள் தமிழ் மாணவர்களை பிரதிநிதிதுவபடுத்தும் வகையிலும் மாணவிகளை பிரதிநிதிதுவபடுத்தும் வகையிலும் வழங்கப்பட்ட பிரதி நிதிதுவம் மறக்கப்பட்டுள்ளது. இதனை இவர்கள் நன்கு அறிந்திருந்தும், சிலர் சுட்டி காட்டியிருந்த நிலையிலும் அதிகார போட்டியினால் இவ்வாறு இரண்டாம் தரமாக நடந்து கொள்ள வழிக்காட்டியுள்ளன இவர்கள் சார்ந்து நிற்கும் கட்சிகள்.  

Post Top Ad

My Instagram