Post Top Ad

யாகோப் ஆக ஆசைப்பட்டாயா பாலகுமாரா?

1935 ல் இராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 வது படை பிரிவில் அவன் ஒரு லெப்டினென்ட். ஜேர்மன் - ரஷ்யா யுத்தம் ஆரம்பித்த மறுநாளே யாகோப் போர்களத்திற்கு சென்று விட்டான். பிறகைதிகளுடன் சேர்ந்து ஜேர்மனி, யாகோப்பை கைது செய்துவிட்டது. பின்னர் விசாரணையின் போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டை என்று அவர்களுக்கு தெரிந்ததுவிட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது சோவித் ரஷ்யாவின் மாபெரும் தலைவராகவிருந்து வழிநடத்திய ஸ்டாலினின் அன்பு மகன் தான் யாகோப்.
ஸ்டாலினுடன் ஜெர்மனி பேரம் பேசியது. 'உங்கள் மகன் யாகோப் இப்போது எங்கள் கையில் !' வில்லன் பாணPயில் சொன்னது ஜெர்மனி.

இதயமே நின்று விடும் போல் இருந்தது ஸ்டாலினுக்கு. ஆனால் அடுத்த நொடியே அவர் சுதாகரித்துக் கொண்டார்.

'சரி சொல்லுஙகள்'

'யாகோப்பை உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் ஒரு நிபந்தனை. அதற்கு ஈடாக நீங்கள் சிறை வைத்திருக்கும் கைதிகளை விடுவிடுத்துவிட வேண்டும்.சம்மதமா?'

'மன்னிக்கவும் எனக்கு பேரம் பேசி பழக்கமில்லை'

தொலைபேசியை துண்டித்து விட்டார் ஸ்டாலின்.

தன் மகள் ஸ்வெத்லானாவிடம் பின்னர்  இது பற்றி பேசினார்.

'நான் செய்தது தவறு இல்லை தானே?'

'இல்லை அப்பா.'

# நீயும் யாகோப் ஆக ஆசைப்பட்டாயா பாலகுமாரா?#

Post Top Ad

My Instagram