Post Top Ad

தண்ணீர் கேட்டாலும் கொல்வோம் ! தனிநாடு கேட்டாலும் கொல்வோம் !

வெலிவேரியாவில் சுத்தமான குடிநீர் கேட்டு மக்கள் மீது இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தியது அரசாங்கம். அரச படைகள் நடத்திய தாக்குதலில் வெளிவந்த தகவல்களின் பிரகாரம் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் கிளம்பிய எதிர்பலைகளை, இராணுவம்யதொடர்பாக சிங்கள மக்களிடம் நிலவிய பிம்பம் சிதைக்கப்பட்டு விட்டது என எல்லா தரப்புக்களில் இருந்தும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. இலங்கை இராணுவம் என்பது தனியே சிங்களவர்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட இராணுவ மாகும். அதன் உள்ளார்ந்த அர்த்தம் சிறிலங்கா தீவில் வாழும் இன்னுமொரு தேசிய இனமான தமிழர்களை ஒடுக்குவதனை முதன்மையாக கொண்டு உருவாக்கப்பட்ட இராணுவம் என்பதாகும்.
பிரித்தானிய காலனியாட்சி காலத்தில் உள்நாட்டுகாரர்களையும் அவர்களின் உரிமைகுரலையும் அடக்கியாளும் வகையில் உருவாக்கப்பட்ட இராணுவ கட்டமைப்பு, பிரித்தானியரிடமிருந்து ஆட்சி கைமாறப்பட்ட போது கைமாறியது. கைமாறிய இராணுவ கட்டமைப்பு ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்பாக பேணப்பட்டு, தமிழ் மக்களின் உரிமை கோரிக்கையுடன் தமிழர்களை அடக்கும் இராணுவமாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதன் இராணுவ கட்டமைப்பின் வளர்ச்சியானது தமிழ் மக்களின் ஆயுத போராட்டத்தின் வளர்ச்சியை சார்ந்ததாகவே இருந்தது. கனரக ஆயுதங்கள், நவீன போர்த்தளபாடங்கள், போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் எல்லாம் தமிழ் மக்களின் ஆயுத போராட்டத்தை அடக்கி தமிழர்களை ஒடுக்கி ஆள வாங்கி குவிக்கப்பட்டவைகள் தான். அத்தகைய சிங்கள இராணுவத்தை கொண்டு தமிழ் மக்களை அடக்கி ஆள்கிறது சிங்கள பேரினவாத அரசு. அதே இராணுவம் இன்று வெலிவேரியாவில் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு சில மாதங்கள் முன் சிலாபம் மீனவர்களின் போராட்டத்தின் மீதும் அதற்கு சில மாதங்களுக்கு முன் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் போராட்டத்தின் மீதும் இதே போன்று தாக்குதல் நடத்தி மக்களை கொன்றன அரச படைகள். அதற்கும் பல வருடங்களுக்கு முன் தெற்கில் கிளர்ச்சி நடத்திய சிங்களவர்கள் மீது கொலை வெறி தாண்டவம் ஆடி அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தன இதே சிறிலங்காவின் அரசபடைகள். இவை அனைத்தும் சிறிலங்காவின் சிங்கள மக்களுக்கு தெரியும். அப்படியிருந்தும் ஒருநாளும் இராணுவத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மனோபாவத்தினை சிங்கள மக்கள் கொண்டிருந்ததில்லை.  அப்படியான மாற்றம் ஏற்பட போவதுமில்லை.

அதற்கான காரணம் வரலாற்றில்; கிடைக்கிறது. சிங்கள இனம் என்பது சிறிலங்காவில் மாத்திரமே வாழும் ஒரு இனமாகும். இவர்களின் வரலாறு தெளிவில்லாததும் தனித்துவம் இல்லாததுமாக காணப்படுகிறது. அதாவது இந்துமா சமூத்திரத்தின் ஒரு மூலையில் இருக்கும் தீவின் தெற்கு பகுதியில் தனியே ஓரு இனம் தோன்றி நிலைத்திருப்பது என்பது சாத்தியமில்லாத விடயம். அவ்வினம் நிச்சியமாக வேறு இனங்களிலிருந்து மரபு வழி பொருளாதார அரசியல் காரணங்களால் ஒரு சில தனி இயல்புகளை தன்னகத்தே கொண்டு தனி இனமாக வளர்ந்திருக்க வேண்டும். இந்த வரலாறு அந்த இனத்தின் தனித்துவத்தையும் மூலத்தையும் அம்பலபடுத்தும். இதன் பின்னனியில் உள்ள உண்மைகள் அந்த இன மக்களிடையே ஏற்படுத்தும் தாழ்வு மனப்பான்மை போலி இலக்கியங்கள், மிகை படுத்தப்பட்ட கற்பனைகளுடன் கூடிய இதிகாசங்கள் வரலாறுகள் மூலம் மூடி மறைக்கப்பட நடந்த முயற்சிகள் இந்த மனப்பான்மையை அதிகரிக்க செய்திடவே, அந்த தாழ்வு தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளியே வர ஆசுவாசபடுத்தி கொள்ள ஏனைய இன மக்களை ஒடுக்குவது உதவியது. இதற்கு எதிராக நடந்த போராட்டங்களின் எழுச்சியும், அதனை அந்த இனத்தின் அதிகார வர்க்கம் தவறாக வழிநடத்தி திட்டங்களை வகுத்தமையும் ஏனைய இனங்களை தனக்கு கீழே வைத்திருக்கும் இனவாதத்தை எல்லா மட்டங்களிலும் மேலோங்க செய்து விட்டது. இந்த இனவாத மனப்பான்மைக்கு செயல் வடிவம் கொடுப்பதுஅந்த இன மக்களை கொண்டு நிரப்பி அமைக்கப்பட்ட இராணுவத்தினூடாக தான். ஆகவே சிறிலங்கா சிங்கள மக்களிடையே வேரூன்றி இருக்கும் இனவாதம் நிலைத்திருக்கும் வரை இராணுவத்திற்கு எதிரான நிலைப்பாடு உருவாக போவதில்லை. எத்தனை வெலிவேரியாக்களை கடந்தாலும் சிங்கள மக்களின் இராணுவத்தின் மீதான பக்தி குறைந்திடாது. இதை சிங்கள பேரினவாத தலைவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே தான் அவர்களால் ஆர்ப்பார்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தும் முடிவை எந்தவித அச்சமும் இன்றி இலகுவாக எடுக்க முடிகிறது. 

ஆகவே பல ஊடகங்கள் அரசியல்வாதிகள் கூறுவதினை போல் அல்லது நம்புவதை போல் இராணுவம் மீது சிங்கள மக்கள் கொண்டிருந்த விம்பம் தகர்ந்து விடும் என்பதெல்லாம் நடக்காது. அவ்வாறு தகர்ந்திட வேண்டும் என்றால் இரண்டு வழிமுறைகள் உண்டு. சிங்கள மக்கள் மத்தியில் வேரோடியுள்ள இனவாதம் களையப்படல் வேண்டும். அதற்கு யுத்தம் நடந்ததை விட அதிக காலம் தேவைப்படும். கல்வி கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும். பொருளாதார அபிவிருத்தி, தொழிற்துறை வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். வரலாறு குறித்த நேர்மையான மறு ஆய்வு நடத்தல் வேண்டும். தேசிய நல்லினக்கத்தினை ஏற்படுத்தும் நிகழ்வுகள் முன்னெடுக்க வேண்டும். இதற்கிடையே முறை யாக திட்டமிட்ட போராட்டங்களும் நிகழ்ச்சி திட்டங்களும் முன்னெடுக்கப்படல் வேண்டும். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தவை. இவ்வாறான தொடர்ச்சியான நடவடிக்கையினூடாக சகலருக்கும் சம உரிமை கிட்டும், இனவாதம் பின்தள்ளப்பட்ட சூழலில் வேண்டுமென்றால் மேற்கூறிய தகர்தல்கள் சாத்தியமாகலாம்.

அல்லது தமிழ், சிங்கள இனங்கள் ஒன்றொடு ஒன்று தொட ர்புடன் இயங்கும் நிலைக்கு பதிலாக தனி தனி ஒன்றில் ஒன்றில் தங்காத சுய அலகுகளாக்கப்படல் வேண்டும். இவை இரண்டுக்குமே சாத்தியம் இல்லாத நிலையே தற்போது காணப்படுகிறது. ஏனென்றால் இதனை சாத்தியமாக்க கூடியவர்கள் முற்போக்கு சிந்தனைக் கொண்ட இடதுசாரிகள் மட்டுமே. இந்த விஞ்ஞான தத்துவம் சாராத செயற்பாடுகள் வெற்றி பெறுவது போல் தோன்றினாலும் மீண்டும் பழைய நிலைக்கே முன்பை விட மோசமானதாக கொண்டு வந்து விடும். ஆகவே மேற்கூறிய இரண்டு வழிமுறைகளிலும் சரியான விஞ்ஞான தத்துவ அடிப்படையில் முயற்சிப்பதே தகர்த்தல்களை நடத்தி ஒடுக்குமுறையை உடைத்தெறிய இருக்கும் ஒரே வழியாகும்.

அதெல்லாம் நடக்கும் வரை ஆட்சியாளர்கள் தனி நாடு கேட்பவர்களையும் சரி, தண்ணீர் கேட்பவர்களையும் சரி சற்றும் அஞ்சாமல் சுட்டு தள்ளிக் கொண்டு தான் இருக்க போகின்றார்கள். வெலிவேரியாவில் சுத்தமான குடிநீர் கேட்டு மக்கள் மீது இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தியது அரசாங்கம். அரச படைகள் நடத்திய தாக்குதலில் வெளிவந்த தகவல்களின் பிரகாரம் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் கிளம்பிய எதிர்பலைகளை, இராணுவம்யதொடர்பாக சிங்கள மக்களிடம் நிலவிய பிம்பம் சிதைக்கப்பட்டு விட்டது என எல்லா தரப்புக்களில் இருந்தும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. இலங்கை இராணுவம் என்பது தனியே சிங்களவர்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட இராணுவ மாகும். அதன் உள்ளார்ந்த அர்த்தம் சிறிலங்கா தீவில் வாழும் இன்னுமொரு தேசிய இனமான தமிழர்களை ஒடுக்குவதனை முதன்மையாக கொண்டு உருவாக்கப்பட்ட இராணுவம் என்பதாகும். பிரித்தானிய காலனியாட்சி காலத்தில் உள்நாட்டுகாரர்களையும் அவர்க ளின் உரிமைகுரலையும் அடக்கியாளும் வகையில் உருவாக்கப்பட்ட இராணுவ கட்டமைப்பு, பிரித்தானியரிடமிருந்து ஆட்சி கைமாறப்பட்ட போது கைமாறியது. கைமாறி ய இராணுவ கட்டமைப்பு ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்பாக பேணப்பட்டு, தமிழ் மக்களின் உரிமை கோரிக்கையுடன் தமிழர்களை அடக்கும் இராணுவமாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதன் இராணுவ கட்டமைப்பின் வளர்ச்சியானது தமிழ் மக்களின் ஆயுத போராட்டத்தின் வளர்ச்சியை சார்ந்ததாகவே இருந்தது. கனரக ஆயுதங்கள், நவீன போர்த்தளபாடங்கள், போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் எல்லாம் தமிழ் மக்களின் ஆயுத போராட்டத்தை அடக்கி தமிழர்களை ஒடுக்கி ஆள வாங்கி குவிக்கப்பட்டவைகள் தான். அத்தகைய சிங்கள இராணுவத்தை கொண்டு தமிழ் மக்களை அடக்கி ஆள்கிறது சிங்கள பேரினவாத அரசு. அதே இராணுவம் இன்று வெலிவேரியாவில் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு சில மாதங்கள் முன் சிலாபம் மீனவர்களின் போராட்டத்தின் மீதும் அதற்கு சில மாதங்களுக்கு முன் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் போராட்டத்தின் மீதும் இதே போன்று தாக்குதல் நடத்தி மக்களை கொன்றன அரச படைகள். அதற்கும் பல வருடங்களுக்கு முன் தெற்கில் கிளர்ச்சி நடத்திய சிங்களவர்கள் மீது கொலை வெறி தாண்டவம் ஆடி அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தன இதே சிறிலங்காவின் அரசபடைகள். இவை அனைத்தும் சிறிலங்காவின் சிங்கள மக்களுக்கு தெரியும். அப்படியிருந்தும் ஒருநாளும் இராணுவத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மனோபாவத்தினை சிங்கள மக்கள் கொண்டிருந்ததில்லை.  அப்படியான மாற்றம் ஏற்பட போவதுமில்லை.

அதற்கான காரணம் வரலாற்றில்; கிடைக்கிறது. சிங்கள இனம் என்பது சிறிலங்காவில் மாத்திரமே வாழும் ஒரு இனமாகும். இவர்களின் வரலாறு தெளிவில்லாததும் தனித்துவம் இல்லாததுமாக காணப்படுகிறது. அதாவது இந்துமா சமூத்திரத்தின் ஒரு மூலையில் இருக்கும் தீவின் தெற்கு பகுதியில் தனியே ஓரு இனம் தோன்றி நிலைத்திருப்பது என்பது சாத்தியமில்லாத விடயம். அவ்வினம் நிச்சியமாக வேறு இனங்களிலிருந்து மரபு வழி பொருளாதார அரசியல் காரணங்களால் ஒரு சில தனி இயல்புகளை தன்னகத்தே கொண்டு தனி இனமாக வளர்ந்திருக்க வேண்டும். இந்த வரலாறு அந்த இனத்தின் தனித்துவத்தையும் மூலத்தையும் அம்பலபடுத்தும். இதன் பின்னனியில் உள்ள உண்மைகள் அந்த இன மக்களிடையே ஏற்படுத்தும் தாழ்வு மனப்பான்மை போலி இலக்கியங்கள், மிகை படுத்தப்பட்ட கற்பனைகளுடன் கூடிய இதிகாசங்கள் வரலாறுகள் மூலம் மூடி மறைக்கப்பட நடந்த முயற்சிகள் இந்த மனப்பான்மையை அதிகரிக்க செய்திடவே, அந்த தாழ்வு தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளியே வர ஆசுவாசபடுத்தி கொள்ள ஏனைய இன மக்களை ஒடுக்குவது உதவியது. இதற்கு எதிராக நடந்த போராட்டங்களின் எழுச்சியும், அதனை அந்த இனத்தின் அதிகார வர்க்கம் தவறாக வழிநடத்தி திட்டங்களை வகுத்தமையும் ஏனைய இனங்களை தனக்கு கீழே வைத்திருக்கும் இனவாதத்தை எல்லா மட்டங்களிலும் மேலோங்க செய்து விட்டது. 
இந்த இனவாத மனப்பான்மைக்கு செயல் வடிவம் கொடுப்பது
அந்த இன மக்களை கொண்டு நிரப்பி அமைக்கப்பட்ட இராணுவத்தினூடாக தான். ஆகவே சிறிலங்கா சிங்கள மக்களிடையே வேரூன்றி இருக்கும் இனவாதம் நிலைத்திருக்கும் வரை இராணுவத்திற்கு எதிரான நிலைப்பாடு உருவாக போவதில்லை. எத்தனை வெலிவேரியாக்களை கடந்தாலும் சிங்கள மக்களின் இராணுவத்தின் மீதான பக்தி குறைந்திடாது. இதை சிங்கள பேரினவாத தலைவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே தான் அவர்களால் ஆர்ப்பார்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தும் முடிவை எந்தவித அச்சமும் இன்றி இலகுவாக எடுக்க முடிகிறது. 

ஆகவே பல ஊடகங்கள் அரசியல்வாதிகள் கூறுவதினை போல் அல்லது நம்புவதை போல் இராணுவம் மீது சிங்கள மக்கள் கொண்டிருந்த விம்பம் தகர்ந்து விடும் என்பதெல்லாம் நடக்காது. அவ்வாறு தகர்ந்திட வேண்டும் என்றால் இரண்டு வழிமுறைகள் உண்டு. சிங்கள மக்கள் மத்தியில் வேரோடியுள்ள இனவாதம் களையப்படல் வேண்டும். அதற்கு யுத்தம் நடந்ததை விட அதிக காலம் தேவைப்படும். கல்வி கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும். பொருளாதார அபிவிருத்தி, தொழிற்துறை வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். வரலாறு குறித்த நேர்மையான மறு ஆய்வு நடத்தல் வேண்டும். தேசிய நல்லினக்கத்தினை ஏற்படுத்தும் நிகழ்வுகள் முன்னெடுக்க வேண்டும். இதற்கிடையே முறை யாக திட்டமிட்ட போராட்டங்களும் நிகழ்ச்சி திட்டங்களும் முன்னெடுக்கப்படல் வேண்டும். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தவை. இவ்வாறான தொடர்ச்சியான நடவடிக்கையினூடாக சகலருக்கும் சம உரிமை கிட்டும், இனவாதம் பின்தள்ளப்பட்ட சூழலில் வேண்டுமென்றால் மேற்கூறிய தகர்தல்கள் சாத்தியமாகலாம்.

அல்லது தமிழ், சிங்கள இனங்கள் ஒன்றொடு ஒன்று தொட ர்புடன் இயங்கும் நிலைக்கு பதிலாக தனி தனி ஒன்றில் ஒன்றில் தங்காத சுய அலகுகளாக்கப்படல் வேண்டும். இவை இரண்டுக்குமே சாத்தியம் இல்லாத நிலையே தற்போது காணப்படுகிறது. ஏனென்றால் இதனை சாத்தியமாக்க கூடியவர்கள் முற்போக்கு சிந்தனைக் கொண்ட இடதுசாரிகள் மட்டுமே. இந்த விஞ்ஞான தத்துவம் சாராத செயற்பாடுகள் வெற்றி பெறுவது போல் தோன்றினாலும் மீண்டும் பழைய நிலைக்கே முன்பை விட மோசமானதாக கொண்டு வந்து விடும். ஆகவே மேற்கூறிய இரண்டு வழிமுறைகளிலும் சரியான விஞ்ஞான தத்துவ அடிப்படையில் முயற்சிப்பதே தகர்த்தல்களை நடத்தி ஒடுக்குமுறையை உடைத்தெறிய இருக்கும் ஒரே வழியாகும்.

அதெல்லாம் நடக்கும் வரை ஆட்சியாளர்கள் தனி நாடு கேட்பவர்களையும் சரி, தண்ணீர் கேட்பவர்களையும் சரி சற்றும் அஞ்சாமல் சுட்டு தள்ளிக் கொண்டு தான் இருக்க போகின்றார்கள். 

Post Top Ad

My Instagram